நீரின் அருமை தெரியுமா நமக்கு? How To Improve At Water Management
“நீரின்றி அமையாது உலகு" என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். ஆனால் அந்த நீரின் அருமை தெரியுமா நமக்கு? ஒரு பக்கம் நீருக்காக போராடி மடிகிறோம். இன்னொரு பக்கம் நீர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் நீரை தேவை இல்லாமல் சுரண்டி நிலங்களை பாலைவனமாக மாற்றுகிறோம். முன்பேல்லாம் விவசாயிகள் நிலத்தின் தன்மைக்கு ஏற்பவும் நீர் கிடைக்கக்கூடிய தன்மை அறிந்தும் பயிர்களை தேர்வு செய்து விவசாயம் செய்தனர்.
ஆனால் இன்று எதை விதைத்தால் பணம் கிடைக்கும் என்ற ஒற்றை சிந்தனையில் விவசாயம் செய்யப்படுகிறது. முன்பு
நிலத்திற்கேற்ப பயிர்களை விதைத்து அவரவர் நிலத்தவருடன் பகிர்ந்து வாழ்ந்தனர். ஆனால் இன்று நீர் தேவை அதிகம் உள்ள பயிர்கள் கோதுமை., நெல் பருத்தி, கரும்பு, சோயா என நீர் தேவை அதிகம் உள்ள பயிர்கள் பயிரிடுகின்றனர்.
நீர் தேவை அதிகம் உள்ள பயிர்கள் என்ன என்று அட்டவணையில் தெரிந்து கொள்வோம்.
உணவு
|
அளவு |
நீர்த்தேர்வை (லிட்ட |
சாக்லேட் |
ஒரு கிலோ |
17,196 |
மாட்டிறைச்சி |
ஒரு கிலோ |
55,000 |
ஆட்டிறைச்சி |
ஒரு கிலோ |
10,412 |
பருத்தி |
ஒரு கிலோ |
10,046 |
பன்றி இறைச்சி |
ஒரு கிலோ |
5,998 |
கோழி இறைச்சி |
ஒரு கிலோ |
4,325 |
நெல் |
ஒரு கிலோ |
8,000 |
சர்க்கரை |
ஒரு கிலோ |
28,000 |
சோயா |
ஒரு கிலோ |
8,000 |
கோதுமை |
ஒரு கிலோ |
10,000 |
ஆப்பிள் |
ஒரு கிலோ |
822 |
உருளைகிழங்கு |
ஒரு கிலோ |
287 |
தக்காளி |
ஒரு கிலோ |
214 |
முட்டை |
ஒரு கிலோ |
196 |
பால் |
ஒரு கிலோ |
255 |
காபி |
ஒரு கிலோ |
110 |
தேநீர் |
ஒரு கிலோ |
27 |
தண்ணீர் பற்றாக்குறை உள்ள நம் நாட்டில் தேவைக்கு அதிகமாக இந்த பயிர்களை ஏன் விளைவித்து ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று ஏன் யாரும் யோசிப்பதில்லை? உணவு பொருட்கள் ஒரு பக்கம் என்றால் "தொழில்மயமாக்கல்"
(Industrialization) என்ற பெயரில் நிறைய தொழிற்சாலைகள் நம் நாட்டில் தொடங்கப்பட்டால் நாடு வளர்ச்சியாவதாக எண்ணி பெருமை கொள்கிறோம்.
ஆனால் இத்தகைய தொழிற்சாலைகள் என் நம் நாட்டில் தொடங்கப்படுகிறது என்று ஆராய்ந்தால் அவர்களுக்கு கிடைக்கும் இலவச நீர் ஒரு முக்கிய காரணம் ஆகும். ஜவுளி தொழிற்சாலை எடுத்துக்கொண்டால் அதிக நீர் தேவை மட்டும் இல்லாமல் அந்த தொழிற்சாலையில் இருந்து கழிவுநீர், நீர் நிலைகளில் கலந்து நீர் மாசுபடுகிறது. அதிகமாக நீரை உறிஞ்சி நிலம் மலடாகிறது. திருப்பூரில் பனியன் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்த காரணத்தால் அந்த ஊர் பாலைவனமாக மாறியது. பத்து அடியில் ஊற்று நீர் வந்த இடங்களில் எல்லாம் இந்த
தொழில்மயமாக்குவதால் ஆயிரம் அடி ஆழ்குழாய்கள் அமைத்தும் ஒரு சொட்டு நீர் வராமல் போனது. தோராயமாக ஒரு ஜீன்ஸ் தயாரிக்க 10,977
லிட்டர் தண்ணீர் தேவைப்படும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளை எடுத்துக்கொண்டால் ஒரு நடுத்தர வசதியுடைய கார் தயாரிக்க சுமார் 1,47,000லிட்டர் நீர் தேவைப்படுகிறது. எனவே இந்த தொழிற்சாலைகளை அயல்நாடுகள் நம்மீது உள்ள பாசத்தினால் இங்கு அமைப்பதில்லை என்பதை உணரவேண்டும். நம்மிடம் தண்ணீரை இலவசமாக பெற்றுக்கொண்டு அதே தண்ணீரை பாட்டிலில் அடைத்து ஒரு லிட்டர் இருபது ரூபாய்க்கு விற்கிறார்கள். அதை மிகுந்த சுகாதாரம் என நாம் அருந்துகிறோம். நாம் அடுத்த முறை ஜீன்ஸ் அணிந்து கொண்டு காரில் செல்லும் பொது மறைமுகமாக இதற்கு செலவான பற்றியும் சிந்திப்போமாக.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக