நாம் ஓடி ஓடி சேர்க்கும் பணம் எங்கே போகிறது?
இன்று நம்மில் பெரும்பாலானோர் ஏதோ ஒரு மாயையான இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம். காலை முதல் வரை குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவரும் பரபரப்பாகவே ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் எதற்காக எதை நோக்கி என்ற ஆழ்ந்த சிந்தனை இல்லாமலே ஓடிக்கொண்டிருக்கிறோம். இந்த ஓட்டத்தில் முதலில் நிம்மதியை இழந்து பின் அதனை தொடர்ந்து ஆரோக்கியத்தையும் இழக்கிறோம்.
நாம் கஷ்டப்பட்டு சேர்க்கும் பணம் இரண்டே விஷயங்களில் காலியாகிறது. ஒன்று ஆடம்பரமான திருமணம் போன்ற நிகழ்ச்சிகள், மற்றொன்று மருத்துவ செலவுகள். தேவையே இல்லாமல் கடினமாக சேர்த்த பணம் வீண் பெருமைக்காக ஆடம்பரமான திருமணத்தில் செலவிடப்படுகிறது. மருத்துவமனையிலோ மருத்துவர்கள் எப்பொழுதும் கத்தியுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். சிறிய அறுவை சிகிச்சை என்றாலும் ஐம்பதாயிரம் ரூபாய் செலவாகிறது. இயற்கையான முறையில் நடக்க வேண்டிய மகப்பேறு மருத்துவமனையில் இலட்சம் ரூபாயில் கத்தியுடன் அரங்கேறுகிறது. ஒவ்வொருஇயற்கையான விஷயத்திற்கும் நமக்கு மருத்துவம் தேவைப்படுகிறது. இது தான் கடந்த 60வருடத்தில் நாம் செய்த சாதனை. யாரை கேட்டாலும் நேரமே இல்லை என்று கூறுகின்றனர்.
ஆனால் கடவுள் மிகவும் சரியாக
அனைவருக்கும் கொடுத்திருப்பது நேரம் மட்டும் தான். ஏழை, பணக்காரன் இந்தியன், வெளிநாட்டவன், ஆண், பெண், இந்து - முஸ்லீம் என அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. ஒருநாளில் 24 மணிநேரம் தான். அந்த இருபத்தி நாலு மணிநேரமும் கற்பனை இலக்கை நோக்கி அனைவரும் ஓடி கொண்டிருக்கிறோம். பணம் சம்பாதிப்பதே வாழ்க்கையின் லட்சியம் என்பது போல் ஓடுகிறோம்.
சரியான உணவிற்கோ, உடற்பயிற்சிக்கோ நேரம் இல்லாததால் நோயுற்று துன்பப்படுகிறோம். இன்றைய சூழ்நிலையில் மற்றவருக்காக இல்லாவிட்டாலும் நமது ஆரோக்கியத்திற்காக குறைந்தது ஒருமணிநேரம் நடக்கவேண்டும். அந்த காலத்தில் நல்ல உணவுகளை அளவுடன் சாப்பிட்டு விட்டு தினம் 13 கிலோமீட்டர் நடந்தனர். பெண்கள் வீட்டு வேலைகளை செய்தனர்.
ஆனால் இன்று ஆண், பெண் இருவரும் நாற்காலியில் அமர்ந்து கொண்டு சக்தியில்லாத உணவுகளை அளவுக்கு மீறி உண்பது தான் நோய்களுக்கு முதல் காரணம். ஒரு மணிநேர நடைப்பயிற்சி நம்மை பல நோய்களில் இருந்து காக்கும். குண்டாக இருப்பது கூட இப்போது மருத்துவர்களால் ஒரு நோயாக மாற்றப்பட்டு அதற்கு தேவை இல்லாத மருத்துவ முறைகளும் வந்துவிட்டது. இதை நாமே எளிய நடைபயிற்சியில் ஏன் சரி செய்து கொள்ளக்கூடாது? நடைப்பயிற்சியும் ஒரு மூடிய குளிர்சாதன அறையில் செய்வதைக்காட்டிலும் பூங்கா போன்ற இயற்கை வெளியில் செய்வது நல்லது. நன்கு கையை வீசி நடக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக