How To Use Genetically Modified Food மரபணு மாற்றப்பட்ட உணவுகளால் வரும் ஆபத்து என்ன?
மரபணு மாற்றப்பட்ட உணவுகள் (ஜி.எம். உணவுகள்) இன்று மனித இனத்தின் எதிர்காலத்தையே பெரும் கேள்விகுறியாக்கும் புதிய பூதாகார பிரச்சனை என்று சொன்னால் மிகையாகது. மேலோட்டமாக பார்க்கும்போது... "மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் என்பது அறிவியலின் புதிய கண்டுபிடிப்பு. இது நல்ல விஷயம் தானே. இதில் என்ன ஆபத்து?" என்று தோன்றும். ஆனால் சற்று ஆராய்ந்து நோக்கினால் உண்மை புலப்படும். விஞ்ஞானம் தான் மின்சாரத்தையும் உருவாக்கியது, அணுகுண்டையும் உருவாக்கியது. மரபணு மாற்றம் இதில் அணுகுண்டை போன்றது. பண்டை காலத்தில் விவசாயிகள் எளிமையான முறையில் விவசாயம் செய்து அவர்கள் விதைகளை சேமித்து விவசாயம் செய்தனர். அவர்கள் உரத்தையோ பூச்சி கொல்லிகளையோ நம்பி இருக்கவில்லை. அவ்வாறு சுயசார்புடன் வாழ்ந்தவர்களை ''விளைச்சலை அதிகரிக்கலாம், பூச்சிகள் தாக்குதல் கிடையாது, அழுகிப் போகாத தன்மையுடன் பெரிய அளவில் உணவு பொருட்களை தயாரிக்கலாம்” என்று இந்த நவீன விவசாய விஞ்ஞானிகள் இயற்கை விவசாயிகளுக்கு ஆசை காட்டினர். பாரம்பரிய ரகங்களை மறுத்து ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்ட விதைகளை கொண்டு விவசாயம் செய்ய அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்பட்டனர். இந்த விதைகள் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் தயவில் தான் வளரும். இதுவே இந்த மரபணு மாற்றத்திற்கு பின்னால் இருக்கும் அரசியல்.
பன்னாட்டு நிறுவனங்களுக்கு சொந்த நாடு கிடையாது. எல்லா நாடுகளையும் சொந்தமாக்குவதே நோக்கம். எல்லா நாட்டையும் சுரண்டுவது தான் அவர் குறிக்கோள். அதற்கு அவர்கள் ஏவிய அதிபயங்கரமா அணுகுண்டை விடவும் கொடிய ஆயுதம் தான், விதைகள், இந்த. உயிரியல் போரின், நோக்கம் உயிர்களை அழிப்பதில்லை . . நாட்டின் மக்கள் மற்றும் வளங்களை தன்வசப்படுத்தி கொள்ள தான். ஒரு நாட்டின் பாரம்பரிய விதைகளை அழித்து பன்னாட்டு நிறுவனங்களின் விதைகளை பரப்புவதன் மூலம் விவசாயிகள் தங்களது தற்சார்பை இழந்து விதை நிறுவனங்களை சார்ந்து வாழ வேண்டிய நிலை ஏற்படும். அப்படி ஏற்படும் போது ஒரு நாட்டின் உணவு உற்பத்தியை தீர்மானிக்கும் சக்தியாக இந்த விசை நிறுவனங்கள் உருமாறும்.
"பூச்சிக்கொல்லியே வேண்டாம்" என்று மரபணு மாற்றப்பட்ட பி.டி. பருத்தி விதைகள் முதலில் புகுத்தப்பட்டது.
மண்ணில் இருக்கும் “பேசில்லஸ் துரிஞ்ஜியான்ஸிஸ்” எனும் நுண்கிருமியின் மரபணுவை, செடியின் விதைகளில் செலுத்தினார்கள். இந்த மரபணு செடியில் புகுந்து ஒருவகை கிருமிநாசினியை உற்பத்தி செய்தது. இதனால் செடிகளைத் தாக்கும் பூச்சிகள், தானாகவே விரப்பட்டன. இதனை பயிரிட்ட போது முதலில் சற்று விளைச்சல் அதிகமாக கிடைத்தால் மற்ற விவசாயிகளும் இதனை பயிரிடத் தொடங்கினர். முதலில் பத்து சதவிகிதம் இருந்த பி.டி பருத்தி மெல்ல மெல்ல தொன்னூறு சதவிகிதமாக மாறியது. இது பிள்ளையார் பிடிக்க குரங்காய் மாறிய கதைதான். இந்தப் பருத்திச் செடியின் இலைகளைத் தின்ற கால்நடைகள் இறந்தன. பருத்திக் காடுகளில் வேலை செய்யும் விவசாயிகளுக்கு உடலில் அரிப்பு, தும்மல், இருமல், ஆஸ்துமா போன்ற நோய்கள் ஏற்பட்டன. உடனே இதன் மேல் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
மரபணு மாற்றப்பட்ட உணவுகள் எலிகளுக்கு வழங்கப்பட்டு பரிசோதனை செய்ததில் அவைகளுக்கு புற்றுநோய் சினைப்பை, விந்துப்பை பாதிப்பு என பலவித நோய்கள் ஏற்பட்டது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது. அதற்குள் நாம் நம் பாரம்பரிய நாட்டு ரக பருத்தி விதைகளை இழந்தோம். பருத்தி விவசாயத்தின் மொத்த கட்டுப்பாடும் மன்சாண்டோ என்னும் நிறுவனத்திடம் சென்றது. விதை நிறுவனங்களும் உர நிறுவனங்களும் பல்லாயிரம் கோடி லாபம் அடைந்தனர். ஆனால் சுயசார்புடன் இருந்த விவசாயிகளின் நிலம் மலடாகி, உரத்திற்காகவும் விதைக்காகவும் வாங்கிய கடனை கட்ட முடியாமல் தவித்தனர். முடிவு, வயலுக்கு வாங்கிய பூச்சிக்கொல்லிகளைத் தானே அருந்தி இறந்து போனார்கள். இதே நிலைமை நாளை மற்ற உணவு பயிர்களுக்கு வந்தால் என்ன ஆகும்? அதனாலேயே பி.டி கத்திரிக்காய் கொண்டு வர முயற்சி செய்த போது இங்கு விழிப்டைந்த மக்கள் போராடத் தொடங்கினர்.
ஆனால் வழக்கம்போல் நாலு விஞ்ஞானிகளை விலைக்கு வாங்கி இதனால் கேடு ஒன்றும் இல்லை என்று இந்த பெரு நிறுவனங்களை பேச வைத்தன. மரபணு மாற்றப்பட்ட அரிசி, கோதுமை, சோயா, உருளைக்கிழங்கு தக்காளி, கத்திரிக்காய், வாழைப்பழம், எண்ணெய் வித்துக்கள் என்று ஏகமாக உலகெங்கும் வியாபித்துவிட்டன. இப்போது, சராசரி அமெரிக்கனின் உணவில் 75% உணவுகள் மரபணு மாற்றப்பட்ட உணவுதான் என்கிறது ஒரு கணக்கீடு. ஒருசில நாடுகள் புத்திசாலித்தனமாக இத்தகைய உணவுகளுக்கு தடை விதித்தன. இந்தியாவில் எதிர்ப்பலை இருந்தாலும் பின்வழியாக பழங்கள், சோளம், சோயாபீன் என பல பொருள்கள் உள்நுழைந்து விட்டன என்பதே உண்மை, நாட்டு சோளம் சாப்பிடுவதால் கண்பார்வை மேம்படும். ஆனால் இன்று குழந்தைகள் விரும்பி உண்ணும் அமெரிக்க இனிப்பு சோளத்தை உண்பதால் அதே கண் பழுதடையும் என்றால் மரபணு மாற்றத்தின் கேடு என்ன என்பதை புரிந்து கொள்ளலாம்.
சோயாபீன் விளைவிப்பதில் முக்கிய பிரச்சனையாக இருப்பது களைகள். களைக்கொல்லிகளை உபயோகிக்கும் பொது அதனுடன் சேர்ந்து பயிரும் அழிந்தது. இதன் ஆராய்ச்சியின் விளைவாக தோன்றியது தான் மரபணு மாற்றப்பட்ட சோயாபீன் விதைகள். இவை எப்படி உருவாக்கப்பட்டது என்று தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்.
அமெரிக்காவிற்கும் , வியட்நாமிற்கும் இடையே போர் நடந்த காலத்தில் வியட்நாம், கம்போடியா, லாவோஸ் போன்ற இடங்களில் ''ஏஜென்ட் ஆரஞ்சு '' என்று அழைக்கப்பட்ட இரசாயனத்தை விமானத்திலிருந்து தெளித்தார்கள். இது அந்த பகுதி மக்களின் விளை நிலங்களையும், மரங்களையும் தரைமட்டமாக்கியது. இதில் டைஆக்சின் (Dioxin) களைக்கொல்லியாக பயன்படுத்தப் பட்டது. அதே இரசாயனம் சோயாபீன் மரபணுக்குள் செலுத்தப்பட்டது. இப்போது அவர்கள் களைக்கொல்லியை தெளிக்கும் போது ஏற்கனவே அந்த ரசாயனத்தை ஜீனில் கொண்டிருப்பதால் சோயாபீன் கொல்லப்படாது. களைகள் மட்டும் அழிக்கப்படும். இதுவே அதன் பின் இருக்கும் அறிவியல். இதனால் முதலில் மகசூல் அதிகம் கிடைத்தாலும் மண்ணையும் சுற்றுசூழலையும் கெடுத்து விடுகிறது. மண்ணில் தங்கியுள்ள இந்த இரசயானம் நாளடைவில் நீரில் கரையும் தன்மை உடையதாக மாறியது. இவை மண்ணோடு மிக விரைவில் கலப்பதை பார்த்து உருவானது தான் “ரவுண்டு அப்" என அழைக்கப்படும் கிளைசோபேட் (Glysophate). இது குறித்து வலைத்தளங்களில் ஆராய்த்தோமானால் இதனால் மனிதர்களுக்கும், விலங்களுக்கும். சுற்றுப்புறத்திற்கும் எத்தனை கேடுகள் விளையும் என்று அறிந்து கொள்ளலாம். ஆனால் இது பல ஆயிரம் லிட்டர் சர்வ சாதாரணமாக விளை நிலங்களில் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய சோயா பீனை சந்தைப்படுத்த இந்தியர்களுக்கு புரதச்சத்து குறைபாடு இருப்பதால் சோயா மாவை சப்பாத்தி, ரொட்டி செய்ய கோதுமையுடன் கலந்து சாப்பிடுவது ஆரோக்கியம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. நமது உணவில் புரதத்திற்கு எந்த குறைபாடும் இல்லை. பருப்புகளை சாப்பிடுவதன் மூலமே நமக்கு தேவையான புரதம் கிடைத்துவிடும். இந்த மரபணு மாற்றப்பட்ட சோயாபினை உண்பதால் நமக்கு ரத்தசோகை முதல் ரத்த புற்றுநோய் வரை வரும் அபாயம் இருக்கிறது.
மரபணு மாற்றப்பட்ட உணவுகளை உண்பது தான் புற்றுநோய், மாதவிடாய் பிரச்சனைகள், கர்ப்பப்பை கட்டிகள் போன்றவற்றிற்கு முக்கிய காரணம். ஒரு நாட்டின் இறையாண்மை வேளாண்மையில் இருக்கிறது. வேளாண்மையின் இறையாண்மை விதைகளில் இருக்கிறது. எனவே இதில் விழித்துக் கொள்ளாவிட்டால் விதை நிறுவனங்களின் வசம் நமது விவசாயம் சிக்கிக்கொள்ளும். இந்தியாவில் என்ன பயிரிட வேண்டும் என்று அந்த நிறுவனங்களே தீர்மானிக்கும். இதன் மூலம் ஆயுதம் இல்லாமலே நம் நாட்டை கைப்பற்ற இயலும் என்பதை உணர்வோமாக.)
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக