நம்முடைய அனைத்து தவறுகளுக்கும் எளிய தீர்வு பஞ்சரத்ன தானியங்கள் How To Gain Cereals
"கருங்கால் வரகே இருங்கதிர்த்தினை சிறுகொடிக்கொள்ளே பொறிகிளர் அவரையொடு இந்நான் கல்லது உணவும் இல்லை "
மாங்குடிக் கிழார் (புறநானூறு: 335)
இவ்வாறு உயர்த்திக் கூறப்படும் வரகு, தினை போன்ற தானியங்கள், தமிழகத்தின் வறண்ட நிலத்தில் கூட விளைந்து மிகுந்த பயனைத் தந்தவை.
குறிப்பாக ஒரு கிலோ நெல் விளைவிக்கத் தேவைப்படும் நீர் 8,000 லிட்டர், அதேபோல் ஒரு கிலோ கோதுமை விளைவிக்க 10,000 லிட்டர் நீர் தேவைப்படுகிறது. ஆனால், செல்வ தானியங்களுக்கு இதில் 18-ல் ஒரு பங்கு நீர்கூடத் தேவையில்லை. பெரிய அணைகள் தேவையில்லை. காடுகளும் பழங்குடிகளும் அழிய வேண்டியதில்லை. ஆழ்துளைக் கிணறு மட்டுமல்ல, திறந்த கிணறும் கூடத் தேவையில்லை. இந்தத் தானியங்கள் மழை நீரை நம்பியே விளைகின்றது.
பசுமைப் புரட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டவை இந்தப் புஞ்சைப் பயிர்கள்தான். பசுமைப் புரட்சியில் நெல்லையும் கோதுமையையும் குறிவைத்தே ஆராய்ச்சிகள் நடந்தேறின. அத்துடன் அரிசிச் சோறு உண்பதே உயர்ந்த பண்பாடு என்ற பொய்யான பரப்புரையும் விரிவாக்கப்பட்டது.
பள்ளி உணவுத் திட்டம், பொது வழங்கல் திட்டம் என்று பாவற்றிலும் அரிசியும் கோதுமையுமே கொடுக்கப்பட்டன. ஆராய்ச்சிக்கான ஒதுக்கடுகள், சாகுபடிக்கான ஒதுக்கீடுகள் என்று அளவற்ற பணம் இதில் முதலீடு செய்யப்பட்டது. இதன் விளைவாக மக்களின் பயன்பாட்டில் இருந்து புஞ்சைத் தானியங்கள் முற்றிலும் நீக்கப்பட்டது. பழங்குடி மக்கள், நாகரிகம் தொடாத பகுதிகளைச் சேர்ந்த மக்களிடம் மட்டுமே தானியங்களின் பயன்பாடு எஞ்சியிருந்தது. தமிழகத்தில் நாமக்கல், தருமபுரி, மதுரை போன்ற மிக அரிதான இடங்களில் மட்டுமே சாமை, குதிரைவாலி, தினை போன்றவை பயிரிடப்படுகின்றன. இன்றைக்கு மதுரைப் பகுதி மக்கள் தாங்கள் விளைவித்த தானியங்களை விற்றுவிட்டு, நியாய விலைக் கடைகளில் விலையில்லா அரிசியை வாங்கிச் சமைக்கின்றனர்.
இப்படிப் புறக்கணிக்கப்பட்ட தானியங்களால் ஏற்பட்ட சூழலியல், திணையியல், பொருளியல், பண்பாட்டியல் கேடுகளை இதுவரை யாரும் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்பது வேதனைக்குரியது. செல்வதானியங்களில் பொதிந்திருக்கும் கரையும் நார் சத்து நமக்கு நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. வந்த நோய்களையும் விரட்டும் திறன் கொண்டது. கிறிஸ்து பிறப்பதற்கு 4500 வருடங்கள் முன்பே செல்வதானியங்கள் பயன்பாட்டில் இருந்துள்ளது. யஜூர் வேதத்தில் தினை, குதிரைவாலி மற்றும் ராகி பற்றி குறிப்புகள் உள்ளன. செல்வதானியங்களில் நம்மில் பலருக்கு கேழ்வரகும், கம்பும் தெரிந்திருக்கும். அவற்றை உண்பதும் தினை, குதிரைவாலி போன்ற செல்வதானியங்களை உண்பதும் ஒன்று என்ற அறியாமை நம்மில் பலருக்கு உண்டு. கம்பும், கேழ்வரகும் சத்து நிறைந்தது தான். ஆனால் நோயை விரட்டும் தன்மை அதற்கு குறைவு. தானியங்களை மூன்று வகையாக பிரித்தார்.
எதிர்மறை தானியங்கள் (Negative Grains)
சமநிலைதானியங்கள் (Neutral Grains)
நேர்மறை தானியங்கள் (Positive Grains)
தினை, வரகு, சாமை, குதிரைவாலி, குலைசாமை என்ற ஐந்து தானியங்களும் "பஞ்சரத்ன செல்வதானியங்கள்” என்று அழைக்கப்படுகிறது. இவை ஐந்துக்கும் கொடிய நோயை விரட்டும் திறன் இருப்பதால் இவை நேர்மறை தானியங்கள் எனப்படும். புற்றுநோய், நீரிழிவு, தைராய்டு, ரத்த கொதிப்பு போன்ற நோய் உடையவர்கள் இந்த ஐந்து தானியங்களுடன் பின்னால் கொடுக்கப்பட்டுள்ள கஷாயங்களையும் சேர்த்து பருகி வந்தால் நோயில் இருந்து விடுபடலாம்.
.இந்த பஞ்சரத்ன தானியங்களின் சிறப்புகளை இங்கு பார்ப்போம்.
தினை (Foxtail Miller)
தினை தான் நமது சங்க காலத்தில் புராதன உணவாக இருந்தது. குற்றாலக் குறவஞ்சியில் குறத்தி மலை வளம் கூறும் போது குறவள்ளி திணைப்பயிரை பறவைகளிடமிருந்து காப்பாற்ற காவல் இருந்த கதையும் உண்டு. இத்தானியத்தின் கதிர் நரியின் வாலை போன்று இருப்பதால் (Foxtail Millet) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்பட்டது. இத்தானியம் இளம் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இதனை உண்பதால், கண்பார்வை சிறப்படையும். நரம்பு மண்டலம் புத்துணர்ச்சி பெறும். மூட்டு சம்பந்தமான நோய்கள் குணமாகும். கெர்ப்பிணி பெண்கள் உண்டு வந்தால் குழந்தைகளுக்கு வலிப்பு நோய் வராமல் தடுக்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். புரதம் மற்றும் இரும்பு சத்து நிறைந்தது. அஜீரண கோளாறுகளை நீக்கும்.
சாமை (Litle Millet)
சாமை செல்வதானியங்கள் மிகவும் சிறப்பான தானியம் ஆகும். மிகவும் சிறியதாக இருப்பதால் (Little Millet) என்று அழைக்கப்படுகிறது. இது இளம் பழுப்பு நிறத்தில் காணப்படும். மலட்டுத்தன்மையை நீக்குவதில் முதல் இடம் பெரும் தானியம் இது. குழந்தை பேறு வேண்டும் தம்பதிகள் இதனை உண்டு வர விரைவில் குழந்தை வரம் கிடைக்கும். எளிதில் ஜீரணமாகக் கூடிய இதனை உண்டபதால்
ஆண்களுக்கு தாது விருத்தி ஆகும் பெண்களின் இனப்பெருக்க உறுப்புகள் பலம் பெறும். செர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவும். மார்பக புற்றுநோயில் இருந்து காக்கும். குழந்தைகளுக்கு வரும் நுரையீரல் தொந்தரவுகளை சரி செய்யும். ஒற்றை தலைவலியை நீக்கும். மாரடைப்பு வராமல் காக்கும்.
குதிரைவாலி (Barnyard Miller)
இந்த தானியம் குதிரையின் வாலை போன்று இருந்தால் குதிரைவாலி என்ற பெயர் வந்திருக்கலாம். இந்த தானியம் பழுப்பு வெளிர் நிறத்தில் இருக்கும். புரதச்சத்து நிறைந்தது. இது எளிதில் ஜீரணமாகக் கூடியது. இந்த தானியத்தை உண்பதால் சிறுநீரகம்,
கல்லீரல் மற்றும் கணையம் சுத்திகரிக்கப்பட்டு மஞ்சள் காமாலை நோய் வராமல் காக்கும்.
இதய நோயாளிகளுக்கும் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கும் நல்ல மருந்து. உடலில் உள்ள செல்களை பாதுகாக்கும் ஆனடி ஆக்சிடென் செயல்படும். குழந்தைகளுக்கும் விளையாட்டு வீரர்கள் சக்தியை அளிக்கவல்லது.
வீரர்களுக்கும்
அதிக அளவில் நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலுக்கு மருந்து. கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி புற்றுநோய் வராமல் காக்கும்.
வரகு (Kodo Miller)
மூவாயிரம் வருடம் தொன்மை வாய்ந்த தானியம் வரகு. ஒளவையார் அதியமானிடம் பொன்னும் பொருளையும் பரிசாக கேட்கவில்லை . மாறாக "வரகரிசியும்
வழுதுணங்காயும் தா" என்றே கேட்டார் என்றால் இதன் சிறப்பை சொல்லவும் வேண்டுமோ? கோயில் கலசங்களிலும் பஞ்ச காலங்களில் உதவும் என்று வரகு சேமிக்கப் பட்டதாக வரலாறு கூறுகிறது. இதனை உண்பதால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்.
மலேரியா, டெங்கு, விஷ காய்ச்சல், குளிர் காய்ச்சல் போன்ற நோய்கள் வராமல் தடுக்கும். எலும்பு மஜ்ஜையை சுத்தப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். வைட்டமின்களும் ஏனைய நுண்சத்துக்களும் நிறைந்திருப்பதால் குழந்தைகளுக்கு ஏற்ற உணவு, நீரிழிவு மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்கும். புற்றுநோயில் இருந்து காக்கும்..அதிக நார்சத்து இருப்பதால் மலச்சிக்கலை தடுக்கும்.
குலைசாமை (Browntop Millet)
நோய்களை விரட்டுவதில் சிறந்த தானியம் குலைசாமை. இது பழுப்பு பச்சை நிறத்தில் காணப்படும். கர்நாடகாவில் பயிரிடப்படும் இந்த தானியம் தமிழ் நாட்டில் அதிகம் பயிரிடப்படுவதில்லை . இதன் சிறப்பை உணர்ந்த மக்கள் இதனை அதிகம் பயன்படுத்தத் தொடங்கிவிட்டதால் இப்பொழுது கர்நாடகாவிலும் இது கிடைப்பது அரிதாகிவிட்டது என்றால் இதன் பயன்களை உணர்ந்து கொள்ளலாம். இதனை உண்பதால்செரிமான உறுப்புகள் நன்கு செயல்படும். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அனைத்து றுப்புகளையும் சுத்திகரிக்கும். - அனைத்து விதமான புற்றுநோய்க்கும் இது அருமருந்து. அதிக நார்சத்து இருப்பதால் இது உடலில் சேர்ந்திருக்கும் நச்சுகளை வெளியேற்றுவதில் உதவி புரிகிறது. கல்லீரலை பலப்படுத்துகிறது.
நம் உடலின் குடல் இயக்கத்திற்கு ஈரப்பதம் தேவை. நார்ச்சத்து அதிகம் உள்ள உணவினை உண்டால் சிறுகுடல் மற்றும் மலக்குடலில் எப்போதும் ஈரப்பதம் இருக்கும். இதனால் மலச்சிக்கல் ஏற்படாது. பஞ்சரத்ன செல்வதானியங்களில் நீரில் கரையும் நார்சத்து அதிகம் இருப்பதால் காபி, தேநீர் உதவியின்றி காலையில் எளிதாக மலம் கழிக்க உதவும்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக