உணவு பற்றிய விழிப்புணர்வு how to increase good bacteria in gut naturally
இன்றைய நவ நாகரிக உலகில், எதிலும்
வேகம், அவசரம்
என்று சென்று கொண்டிருக்கும், இன்றைய
தலைமுறையினரிடம் உணவு பற்றிய அக்கறை, விழிப்புணர்வு
குறைவாக உள்ளது. அதிலும்
இன்று பெரும்பாலும் வீடுகளில் சமையல் செய்து சாப்பிடுவதை விட உணவகங்களில் தயாரிக்கும் உணவுகளையே விருப்ப உணவாக கொண்டுள்ளனர். அதையும்
மீறி வீட்டில் சமைக்கலாம் எனில் நொடியில் தயார் செய்யும் மசாலா உணவுகள் பற்றி ஊடகங்கள் வெளியிடும் விளம்பரங்களின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு அதைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகள் நம் உடலை பதம் பார்க்கின்றன. அவசர
கதியால் காலை வேளையில் அலுவலகம் அல்லது ஏதாவது ஒரு பணிக்கு 8 மணிக்கு
புறப்பட வேண்டிய சூழ்நிலையில் ஏதாவது ஒரு உணவை காலை சிற்றுண்டி (Tiffin) செய்து சாப்பிட்டுவிட்டு ஓடுகிறோம்.
வீட்டில் உள்ள பெண்கள் தனக்கு என்ன உணவு பிடிக்குமோ அந்த உணவை சமைத்துவிடுகிறார்கள் அல்லது கணவன் அல்லது குழந்தைக்கு என்ன உணவு பிடிக்கிறதோ அதை சமைத்து வைத்துவிடுகிறார்கள். ஆனால் அது உண்மையிலேயே வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கிறதா, இல்லையா என்று யோசிப்பதே கிடையாது. உதாரணத்திற்கு ஒரு வீட்டில் சப்பாத்தியும் , குருமாவும் செய்து வைத்திருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். குடும்பத்தினர் அந்த சப்பாத்தியை எடுத்து சாப்பிட ஆரம்பிக்கின்றனர். குடும்பத்தில் உள்ள ஐந்து நபர்களில் இருவருக்கு மட்டுமே அந்த சப்பாத்தி பிடிக்கிறது. மற்ற மூவருக்கும் சப்பாத்தி பிடிக்கவில்லை. அந்த மூன்று பேரும் வேறு வழியில்லாமல் அந்த சப்பாத்தியை சாப்பிடுகின்றனர். ஏனென்றால் சப்பாத்தியைத் தவிர வேறு உணவு சமைக்காததால் அதையே சாப்பிட்டு அலுவலகத்திற்கோ, பள்ளிக்கோ செல்கின்றனர்.
பிடிக்காத உணவை உட்கொள்வதால் இந்த உடல் கஷ்டப்படுகிறது. எனவே
பிடிக்காத சப்பாத்தியை சாப்பிட்டுச் சென்ற மூவரும் அலுலகத்திலோ பள்ளியிலோ தங்கள் வேலையை சரிவர செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர். உணவின்
மூலம் சக்தி கிடைப்பதற்கு பதிலாக அது கஷ்டத்தையே தருகிறது. இனிமேல்
வீடுகளில் உணவு தயார் செய்யும் பொழுது இரண்டு, மூன்று
வகை உணவுகளை, சாப்பிடும்
உணவு மேஜையில் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு
தேன், நெல்லிக்காய்
வற்றல், பன்,
ரொட்டி, ஊறுகாய்
போன்றவை. இவை
எளிதில் கெட்டுப்போகாது. அதனால்
எப்பொழுது வேண்டுமானலும் பயன்படுத்தலாம்.
how to increase good bacteria in gut naturally
இப்படி குறைந்தது ஐந்து அல்லது ஆறு வகை ரெடிமேட் உணவுகளை, உணவு சாப்பிடும் மேஜையில் வைத்துக் கொள்ளும் பொழுது, ஒரு வேளை சமைத்த உணவு பிடிக்கவில்லையெனில் மேற்கண்டரெடிமேட் உணவுகளில் புகுந்துவிடலாம்.
ஆனால் இதைக் கேட்கும் பொழுது முதலில் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும் "ஏங்க காலையில் இட்லியோ, தோசையோ சமைப்பதே பெரிய விஷயம். இதில் ஐந்து ஆறு வகை உணவு சமைப்பது என்ன சுலபமான வேலையா ? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. யோசித்துப் பாருங்கள். நாம் எதற்காக வாழ்கிறோம். மகிழ்ச்சியாக நிம்மதியாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக பணம் மட்டும் நிறைய சேர்த்து சேர்த்து பொன் நகைகள், நிலம், ஆடம்பர பங்களா, வங்கிகளில் சேமிப்பில் போடுதல் என்று என்னவெல்லாமோ செய்கிறார்கள்.
எனக்குப் புரியவில்லை , எதற்காக நிறையபணம் சேர்க்கிறார்கள் என்று. பல மனிதர்கள் நிறைய பணம் சேர்த்து வைத்துவிட்டு இறந்து விடுகிறார்கள். எதற்கு இந்த மானம் கெட்ட பிழைப்பு? பணம் சம்பாதிப்பது செலவழிப்பதற்குத் தானே? தனக்கு பிடித்த உணவுகளை சாப்பிடுவதற்குக்கூட செலவு செய்யவில்லை என்றால் வேறு எதற்கு செலவு செய்யப் போகிறார்கள்.
எனவே பணவசதி படைத்த மனிதர்கள் சமையலுக்காக தாராளமாக செலவு செய்யுங்கள். சமைப்பதற்கு தனியாக ஆட்களை நியமிக்கலாம். நிறைய உணவு வகைகளை சமையுங்கள். பிடித்தால் சாப்பிடுங்கள். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் மற்றவர்களுக்கு கொடுங்கள். இல்லையென்றால் நாய்களுக்கு கூட உணவளிக்கலாம். இல்லாவிட்டால் அது குப்பைக்கு போகட்டும், அதனால் ஒன்றும் பாதிப்பில்லை.
உணவை வீணடிக்கக் கூடாது என்று பலரும் கூறுகிறார்கள். நமக்கு வேண்டாதவற்றை சாப்பிட்டால் உடல் வீணாகிப்போகும் என்று அர்த்தம். எனவே குப்பையில் போடுவது பற்றி கவலைப்பட வேண்டாம். குப்பையில் வீசவேண்டிய உணவை வயிற்றுக்குள் கொட்டினால் உடல் வீணாகிவிடும். உணவை வீணாக குப்பைத் தொட்டியில் கொட்ட வேண்டாம் என்று கூறுகிறார்கள். அப்படி வீணான உணவை நாம் சாப்பிட்டால் நம் உடல் குப்பைத் தொட்டியாகிவிடும். எனவே பிடிக்காத உணவை குப்பைத் தொட்டியில் கொட்டுவதில் எந்த தவறும் கிடையாது. அதனால் எந்த பாதிப்பும் கிடையாது. இது உணவை விரயம் செய்ததாக ஆகாது. அந்த உணவை ஏதாவது நாய்களோ, வேறு பூச்சிகளோ சாப்பிடத்தான் போகிறது. மீண்டும் அது இயற்கையோடு ஒன்றிவிடும். அதனால் எந்த ஒரு பாதிப்பும் கிடையாது என்பதை புரிந்து கொண்டு உணவை விரயமாக்குங்கள்.
புரிந்து கொள்ளுங்கள்! நான் விரயமாக்குங்கள் என்று சொல்வதன் அர்த்தம் தேவையில்லாமல் விரயமாக்குங்கள் என்ற பொருளில் அல்ல. உங்களுக்கு பிடிக்காத உணவை சாப்பிடாமல் கீழே கொட்டுவதற்கு தயங்காதீர்கள் என்பது தான்.எனவே இனிமேல் உணவைப் பொறுத்த வரையில் நாக்குக்குப் பிடித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். எவை நாக்குக்குப் பிடிக்கவில்லையோ அதை சாப்பிடக் கூடாது. சிலர் சில விஷயங்களை ஆழ்மனதில் பதிவு செய்து விடுகிறார்கள். அதாவது எனக்கு இனிப்பே பிடிக்காது. உருளைக்கிழங்கே பிடிக்காது. எனக்கு இது சாப்பிட்டால் அலர்ஜி, அது சாப்பிட்டால் உடலில் கைகால் வலி ஏற்படும் என்று கூறுகிறார்கள். இது ஒரு மாயை. இது ஆழ்மனதில் பதிவு செய்யப்பட்ட ஒரு பதிவு.
உதாரணமாக எனக்கு இனிப்பு பிடிக்காது. ஏன் என்று தெரியவில்லை . காரம், உப்பு, புளிப்பு உள்ள உணவுகள் என்றால் சாப்பிடுவதற்கு விரும்புகிறேன். ஆனால் ஏனோ இனிப்பு பிடிப்பதில்லை. ஏற்கனவே இனிப்பின் மூலமாக கிடைக்கும் சத்துப் பொருட்கள் என் உடலில் தாராளமாக இருக்கிறது என்று நம்புகிறேன். இப்பொழுது உள்ள சூழ்நிலையில் நிகழ்ச்சியில் உரையாற்றும் வேலையை செய்து கொண்டிருப்பதால், ஒருவேளை எனக்கு இனிப்பு பிடிக்காமல் இருக்கலாம். இதுவே நான் வேறுவேலையை மாற்றிச் செய்ய நேரிட்டால் இனிப்பு பிடிக்கலாம். எனக்கு இனிப்பு பிடிக்காது என்ற பதிவை நான் அழித்துவிட்டேன். எனவே இனிப்பை சாப்பிட முயற்சி செய்து பார்ப்பேன். பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடுவேன். தினமும் சாப்பிட முயற்சி செய்து கொண்டுதான் இருப்பேன்.
உதாரணமாக உங்களிடம் பத்து பேரீச்சம் பழம் கொடுத்தால் நீங்கள் பத்தையும் சாப்பிடுவீர்கள். ஆனால் நான் ஒரு பேரீச்சம் பழம் மட்டும் சாப்பிடுவேன். அந்த ஒன்றையும் நன்றாக மென்று ரசித்து ருசித்து சாப்பிடும் பொழுது அதன் சுவை திகட்டிவிடுகிறது. அதற்குமேல் அதில் உள்ள இனிப்பு சுவைக்காக இரண்டாவது பேரீச்சம்பழம் சாப்பிட முடிவதில்லை. நாக்கு வேண்டாம் என்று கூறுகிறது. உடனே எனக்கு இனிப்புப் பிடிக்காது என்று என் மனதில் ஒரு பதிவை நான் ஏற்படுத்தமாட்டேன். ஒருவேளை நாளை மீண்டும் பிடிக்கும். ஒரு சமயம் ஒரு வீட்டிற்கு சென்றிருந்த பொழுது அங்கு ஒரு இனிப்பு எனக்கு வழங்கப்பட்டது. அந்த இனிப்பு சுவை எனக்கு மிகவும் பிடித்திருந்தால் 5 முறை வாங்கி இனிப்பு
சாப்பிட்டேன். ஏன் இனிப்பு மட்டுமே சாப்பிட்டேன் என்று எனக்குத் தெரியவில்லை , அந்த சமயம் எனக்கு இனிப்பு அவ்வளவு பிடித்தமானதாகவும், தேவையானதாகவும் இருந்திருக்கிறது.
எனவே
உணவைப்
பொறுத்தவரையில் நீங்களாக உங்கள்
ஆழ்மனதில் ஏற்படுத்தி வைத்திருக்கும் பதிவுகளை அழித்துவிடுங்கள். நீங்கள் உங்களுக்கு அது
பிடிக்கும் இது
பிடிக்காது என்று
ஒரு
வரைமுறை வைத்துக் கொள்ளாதீர்கள். ஒவ்வொருமுறையும் சோதித்துப்பாருங்கள். இந்த
உணவு
இப்பொழுது பிடிக்கிறதா என்று,
ஏனென்றால் நம்
உடலில்
உள்ள
தன்மைகள் ஒவ்வொரு கணமும்
மாறிக்கொண்டே இருக்கிறது. நமது
வேலைகள் மாறுகிறது. வேறு
ஊர்களுக்கு செல்கிறோம். வேறுவேறு இடங்களில், வேறுவேறு வீடுகளில் இதுதவிர மழைக்காலம், வெயில்காலம், குளிர்காலம் என்று
பஞ்சபூதங்களில் மாற்றம் நிகழ்ந்து கொண்டே
இருக்கிறது. எனவே
நமக்கு
என்ன
பிடிக்கும் என்று
நமக்கே
தெரியாது என்ற
உண்மையை புரிந்து கொண்டு
பிடித்த உணவை
தாராளமாய்ச் சாப்பிடலாம்.
எனவே
ஒரு
விதிமுறை என்னவெனில் நமக்கு
எந்த
உணவு
பிடித்திருக்கிறதோ அது
மருந்து, எந்த
உணவு
பிடிக்கவில்லையோ அது
நமது
உடலுக்கு கேடு
விளைவிக்க கூடியது என்ற
தத்துவத்தை மனதில்
ஆழமாக
பதிவு
செய்து
கொள்ளுங்கள். நல்லது கெட்டது என்பது வேறு, பிடித்தது
பிடிக்காதது என்பது வேறு பலரும் நல்லது என்பதற்காக பல பொருட்களை சாப்பிட்டு வருகிறார்கள். உதாரணத்திற்கு
பாகற்காய் மிகவும் நல்லது என்று ஒரு புத்தகத்தில் படித்திருப்பார்கள். தினமும்
பாகற்காய் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். இது
கெடுதலான விஷயம் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
குறிப்பிட்ட இனிப்பு வகை மட்டும் உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். மீதம்
உள்ள நான்கு இனிப்புகள் உங்களுக்கு பிடிக்காது. சாப்பிட
மாட்டீர்கள்.எனவே இனிப்பில் பலவகை உள்ளது.காரத்தில்
பலவகை உள்ளது.
மிளகாய் காரம்,
மிளகு காரம்,
இஞ்சிக் காரம்
என காரத்திலேயே
பலவகை உள்ளது.
எனவே எந்தக்
காரம் பிடிக்கிறதோ
அதை அதிகமாக
சாப்பிடுங்கள். எந்த இனிப்பு
பிடிக்கிறதோ அந்த
இனிப்பை அதிகமாக
சாப்பிடுங்கள்.
ஒரு விருந்து வைக்கிறீர்கள். முப்பதுபேர்
சாப்பிடுகிறார்கள். சாப்பாடு,
குழம்பு, ரசம்,
மோர், கூட்டு,
பொரியல், அப்பளம்,
வடை, பாயசம்
என ஒரு முப்பது வகை உணவுகளை கஷ்டப்பட்டு தயாரித்து அவர்களுக்கு பரிமாறுகிறீர்கள். அனைவரும்
சாப்பிட்டு முடிக்கிறார்கள். அவர்களில்
ஒருவரிடம் கேளுங்கள். உங்களுக்கு
பரிமாறப்பட்ட உணவில் எது பிடித்திருக்கிறது என்று. அவர்களில்
ஒருவர் எனக்கு கூட்டு பிடித்திருக்கிறது என்பார். இன்னொருவர்
சாம்பார் பிரமாதம் என்பார். பாயசம்
சூப்பர் என்பார் வோறொருவர், இப்படி
ஒவ்வொரு வரும் தங்களுக்குப் பிடித்தது என்று ஏதோ ஒன்றைக் குறிப்பிடுவார்கள். ஒவ்வொருவரும்
வேறு வேறு உணவு பிடித்ததாக சொல்வார்கள். எனவே
ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள், ஒரு
உணவை குறிப்பிட்டு இது நன்றாக இருந்தது, அது
நன்றாக இல்லை என்று ஒருவர் சொன்னால் அதைப் பற்றிக் கவலை கொள்ளாதீர்கள். ஏனென்றால்
தன்னுடைய நாக்குக்குப் பிடிக்கவில்லை என்பதால் நன்றாக இல்லை என்ற வார்த்தையைப் பயன் படுத்துகிறார்கள். உதாரணமாக
நான் சாப்பிட்டு முடித்தவுடன் கேரட் பொரியல் நன்றாக இருந்தது. முட்டைக்கோஸ்
பொரியல் நன்றாக இல்லை, பிடிக்கவில்லை
என்று நான் சொன்னால் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில்
எனது நாக்குக்கு முட்டைக்கோஸ் பொரியல் பிடிக்கவில்லை . அவ்வளவுதான்.
எனவே இனிமேல் எந்த ஒரு இடத்தில் சாப்பிட்டாலும் இது நன்றாக இருந்தது. இது நன்றாக இல்லை என்ற வார்த்தையை யாரும் பயன்படுத்தாதீர்கள். இது மிகவும் நன்றாக இருக்கிறது. ஆனால் எனக்குப் பிடிக்கவில்லை என்று கூறினால் அதில் அர்த்தம் உள்ளது.
உலகில் உள்ள அனைத்துமே அதனதன் | நியதிப்படி ஒழுங்காகத் தான் இருக்கிறது. எல்லாமே | நன்றாகத் தான் இருக்கிறது. அவரவர் பார்க்கும் பார்வையைப் பொறுத்து தான் அதில் மாறுபாடு தெரிகிறது.
எனவே இனிமேல் ஒரு உணவை எனக்குப் பிடித்திருக்கிறது அல்லது பிடிக்கவில்லை என்ற அடிப்படையிலேயே பாருங்கள். இது நல்லது, கெட்டது என்கிற ரீதியில் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை .
எனவே நாம் பிடித்த உணவை மட்டுமே விரும்பி உண்ண வேண்டும். பிடிக்காத உணவுகளைப் பற்றி யோசிக்கவேண்டியதில்லை. அவற்றை விட்டு விடலாம். இதைப் பற்றி இன்னும் விரிவாகக் கூற எத்தனை உதாரணங்கள் வேண்டுமானாலும் சொல்லிக்கொண்டே போகலாம். இருப்பினும் இதுவே நமக்கு நன்றாகப் புரிந்திருக்கும் என்பதால், இனிமேல் நிம்மதியாக சாப்பிடுங்கள், அமைதியாக சாப்பிடுங்கள், பிடித்ததை மட்டும் சாப்பிடுங்கள், சாப்பிடவே நாம் பிறந்திருக்கிறோம். எனவே உணவைப் பார்த்து நாம் பயப்பட வேண்டியதில்லை. முட்டாள்களைப் பார்த்து பயப்படுங்கள்.
பலர் தனக்கும் தெரியாமல், தானே தவறானவற்றைத் தெரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் தவறாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
இது அவர்களின் தவறல்ல. நாம் நல்லது என்று நினைத்துத்தான் மற்றவர்களுக்கு அறிவுரை கூறுகிறோம். ஆனால் நாம் கற்றுக்கொண்டதே நல்லவை அல்ல என்பதே பலருக்குத் தெரிவதில்லை .
எனவே அவர்களை நாம் மன்னிப்போம். நாம் அனைவரும் புரியாமல் இருக்கிறோம். பாகற்காய் நல்லது. ஆனால் உங்களது நாக்கிற்கு பிடித்தது மட்டுமே நல்லது. பிடிக்கவில்லை என்றால் அது கெட்டது. கசப்பில் நிறைய வகைகள் உள்ளது. இனிப்பில் நிறைய வகைகள் உள்ளது. இது பலருக்கு தெரிவதில்லை.
உதாரணமாக ஒரு ஐந்து வகையான இனிப்புப் பொருட்களை உங்களுக்கு கொடுக்கிறேன். நீங்கள் சாப்பிட்டுப் பாருங்கள். ஒருஅளவுக்கு, எவ்வளவு விஷயங்களைப் புரிந்து கொள்கிறோமோ அந்த அளவிற்கு நிம்மதியாக, அமைதியாக, மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக வாழ முடியும். எனவே இனிமேல் நாம்
புரிந்து தெளிவோம்.
நாம் மகிழ்ந்து பிறரையும் மகிழ்வித்து மகிழ்வோம்.
புரியவைத்து புரி
பிடித்ததைப் பிடி வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன் !! குருவே துணை! எல்லாப் புகழும் இறைவனுக்கே!!
முக்கிய குறிப்பு : இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் செய்திகள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டிருக்கும் எந்த ஒரு உணவிற்கும் பொருந்தாது. ஹோட்டல்களில், பிற இடங்களில் விற்கப்படும் எந்த ஒரு உணவிற்கும் இது செல்லுபடியாகாது. ஏனெனில் ஹோட்டல்களில் விற்கப்படும் உணவுகளில் சுவைக்காகவும் கலருக்காகவும் நீண்ட நாள் அல்லது நீண்ட நேரம் கெடாமல் இருக்க என்று பலவித இரசாயன சேர்மங்களைச் சேர்க்கிறார்கள். இது தவிர வாடிக்கையாளர்களை சுவைக்கு அடிமைப்படுத்தி நிரந்தரமாக அவர்களை அந்த உணவுகளை அதிகம் வாங்கி உண்பதற்காக, நாக்கு அச்சுவையில் கட்டுண்டு விடும்படிக்கு இரசாயனப் பொருட்கள் சேர்க்கப்படுகிறது. நாம் கூறும் விஷயங்கள் அனைத்தும் இயற்கையில் விளைந்த காய்கறி, பழங்கள், தானியங்கள், இவற்றைக் கொண்டு செய்யப்பட்ட வேறு இரசாயனங்கள் சேர்க்காத உணவுகள் ஆகியவற்றிற்கு மட்டுமே பொருந்தும்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக