drinking water everyday benefits சாப்பிடும்பொழுது தண்ணீர் குடிக்கலாமா? drinking water benefits,

drinking water everyday benefits

சாப்பிடும்பொழுது தண்ணீர்  குடிக்கலாமா?
drinking water benefits,

நம்மில் பலருக்கு சாப்பிட அமரும்பொழுதே தண்ணீர் சிறிது குடித்துவிட்டு பின் சாப்பிடும் பழக்கம் இருக்கும். மற்றும் பலரோ ஒவ்வொரு வாய் உணவிற்கும் இடையே கொஞ்சம் தண்ணீர் குடித்துக்கொண்டு சாப்பிடுவதை வழக்கப்படுத்தி வைத்திருப்பர். அதிலும் அவர்கள் உண்ணும் உணவு சற்று காரம் நிறைந்ததாகவோ, உறைப்புத் தன்மை கூடுதலாக இருந்தாலோ அவர்கள் குடிக்கும் நீருக்கு அளவே இருக்காது. இப்படி சாப்பிடும் பொழுது தண்ணீர் அருந்துவது தேவைதானா ?  தண்ணீர் எப்பொழுது அருந்தவேண்டும் ? சாப்பிட்டவுடன் நிறைய நீர் அருந்தினால் உணவு நன்கு ஜீரணமாகும் என்பது உண்மையா ? போன்றவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.



drinking water benefits,

நமது வீடுகளிலும் சரி, வெளியிடங்களிலும் சரி நாம் சாப்பிட அமரும்பொழுதே நீரை ஒரு டம்ளரில் பக்கத்தில் வைத்துக்கொண்டு நமக்குப் பரிமாறப்படும் உணவை சாப்பிட ஆரம்பிக்கிறோம். அப்படியானால் நாம் சாப்பிடும்பொழுது இடையே தண்ணீர் தாகம் ஏற்பட்டால் குடிப்பதற்காகத் தானே இருக்கும்! இதில் இடையே தண்ணீ ர் குடிக்கலாமா? என்ற கேள்வியை ஏன் எழுப்ப வேண்டும் என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

drinking water lemon benefits

சாப்பிடும்பொழுது நமக்கு அருகில் தண்ணீர் ஏன் வைக்கப்படுகிறது? என்று நம் வீட்டில் உள்ள பெரியவர்களிடமோ, அன்னையிடமோ கேட்டால் என்ன சொல்வார்கள்? சாப்பாட்டுக்கு இடையே விக்கல், சிக்கல் ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது. அப்போதைக்கு குடிப்பதற்கு கைக்கு அருகிலேயே நீர் இருந்தால் தானே நல்லது என்பதற்காக தண்ணீர் வைப்பதாக கூறுவார்கள். ஆனால் இது பொய்யான உண்மை.

என்ன புதிதாக ஒன்று சொல்கிறீர்கள், பொய்யான உண்மை என்று. ஆம் பொய்யான உண்மை, உண்மையான உண்மை என்று இரண்டு இருக்கிறது.

எப்படி? ஒரு உதாரணம். நமக்கு இரவும் பகலும் மாறி மாறி வருகிறது. காரணம் காலையில் சூரியன் உதிப்பதும், மாலையில் மறைவதுமாக இருக்கிறது. இது அனைவரும் அறிந்த விஷயமே. அதாவது காலையில் சூரியன் தோன்றுகிறது. மாலையில் மறைந்துவிடுகிறது என்பது இந்த பூமியைப் பொறுத்தவரையில் உண்மை. இது பொய்யான உண்மை .

உண்மையான உண்மை என்பது சூரியன் தோன்றுவதுமில்லை. மறைவதுமில்லை. அது நிலையாக இருந்துகொண்டே தான் இருக்கிறது. பூமிதான் சூரியனைச் சுற்றிக் கொண்டு தானும் சுழன்று வருகிறது. எனவே இரண்டு உண்மைகளுமே உண்மை தான். அதுபோலத் தான் நாம் உணவு உண்ணும்போது அருகில் நீர் வைக்கப்படுவது என்பது விக்கல், சிக்கல் ஏற்பட்டால் குடிப்பதற்கு என்பது பொய்யான உண்மை எனில் உண்மையான உண்மை எது?

நம் முன்னோர்கள், ஞானியர், யோகியர், சித்தர்கள் போன்றோர் மனித வாழ்வையும் அவர் அன்றாடம் கடை பிடிக்க வேண்டிய விதிமுறைகளையும் வகுத்துக் கொடுத்துள்ளனர். அதன்படி நம் வாழ்வு அமையப்பெற்றால் ஆரோக்கியக்குறைவு என்பது இருக்காது. உணவை எப்படிச் சாப்பிட வேண்டும். நீர் எப்படி அருந்த வேண்டும் என்பது கூட நம்முடைய ஆன்றோர் வகுத்துக்கொடுத்த நியதி. அதன்படி மனிதன் வாழ்ந்தவரை உடலில் எந்த ஆரோக்கியக் குறையுமில்லை. அதில் மாற்றங்கள் ஏற்பட்ட பின்புதான் இன்று எண்ணற்ற வியாதிகளின் கொள்கலன் ஆகிப்போனான் மனிதன். சரி உணவுக்கு முன் நீர் ஏன்வைத்தார்கள் என்று அறிந்து கொள்வோமா?

உணவு தட்டில் அல்லது இலையில் பரிமாறப்பட்டவுடன் சிறிது தண்ணீரை உள்ளங்கையில் ஊற்றி உணவு தட்டு அல்லது இலையை 3 முறை சுற்றிவிட்டு உறிஞ்சிக் குடிக்கவேண்டும். இதற்கு நீர் உலாவுதல் என்று பெயர். உள்ளங்கையில் இந்த சமயத்தில் இரண்டு மூன்று சொட்டுக்களே நீர் இருக்கும். நாம் இப்படி உணவுக்கு முன் நீரை உறிஞ்சிக் குடிப்பதால் தொண்டையிலிருந்து இரைப்பை வரை செல்லும் உணவுக்குழலில் சற்று ஈரப்பதம் ஏற்படுத்தப் படுகிறது. எப்படி சாப்பிடும் முன் தட்டைக் கழுவிக் கொள்கிறோமோ, இலை என்றால் நீர் தெளித்துக் கொள்கிறோமோ அதைப் போன்றதாகும் இது.

இப்படிச் செய்வதால் நாம் உண்ணும் உணவை எவ்வித தங்கு தடையின்றி விக்கல் ஏற்பட வழியின்றி சாப்பிட முடிகிறது. உள்ளங்கையில் உறிஞ்சிக் குடிக்கும் நீர் இரண்டு, மூன்று சொட்டுகளுக்கு அதிகமாகிவிடும்பொழுது, ஒரு டம்ளர் என்ற அளவிற்கு நீரைக் குடித்துவிடுவோம் எனில் வயிற்றில் ஜீரணத்திற்காக சுரந்திருக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் (HCL) தன்னுடைய வீரியத்தை இழந்து நீர்த்துப் போகும். எனவே இரண்டு மூன்று சொட்டுகளுக்கு மேல், சாப்பிடும் முன்நீர் அருந்தக்கூடாது.

சாப்பிடும்பொழுது நீர் அருந்தக் கூடாது. இரண்டு மூன்று சொட்டுக்கள் உறிஞ்சித்தான் குடிக்கவேண்டும் என்று கூறுகிறார்களே, அது ஏன்? உறிஞ்சிக் குடித்தால் இரைப்பையில் உள்ள ஹைட்ரோ குளோரிக் அமிலம் அணைந்துவிடாதா என்கிறீர்களா? |

உணவுக்குழாயும், மூச்சுக் குழாயும் நம் நெஞ்சுப் பகுதிவரை ஒன்றுதான். அதன்பிறகே இரண்டாகப் பிரிகிறது. அந்த இடத்தில் எந்நேரமும் சுவாசித்துக் கொண்டே இருப்பதால் அந்த உணவுக்குழல் வறட்சியாக இருக்கும். எனவே அதை ஈரப்படுத்திக் கொள்ளவே சாதாரணமாக தண்ணீரைக் குடிப்பதுபோல் அல்லாமல் உறிஞ்சிக் குடிக்கிறோம். நீரை இப்படி உறிஞ்சிக் குடிப்பதால் அந்த நீர் இரைப்பை வரை செல்லாது. இரைப்பைக்கு மேலே கார்டியாக் ஸ்பின்டர் என்னும் வால்வு உள்ளது. அதுவரையே நாம் உறிஞ்சிக் குடிக்கும் நீரானது செல்லும். எனவே இரைப்பையில் உள்ள ஹைட்ரோ குளோரிக் அமிலம் நீர்த்துப் போகாது.

உறிஞ்சிக் குடிக்கும்பொழுது தண்ணீர் குடல் பாதையெங்கும் ஒரே சீராகப் பரவுகிறது. எப்படி என்றால் செடிகளுக்கு தண்ணீர் விடும் குழாய்களில் ஆங்காங்கே நீரை பீய்ச்சியடிக்கும் வண்ணம் ஒரு கருவியைப் பொருத்தி இருப்பதை பார்த்திருப்பீர்கள். அது நீரை எல்லாப் பக்கமும் எப்படி ஒரே சீராகத் தெளிக்கிறதோ அதைப் போன்று நாம் உறிஞ்சிக் குடிக்கும் நீரானது குடல் பாதைகளில் சீராக பரவுகிறது.

நீரை உறிஞ்சிக் குடிக்கும்முன் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம். உள்ளங்கையில் சிறிதளவு நீரை ஊற்றி ஆட்காட்டி விரலும், கட்டைவிரலும் அதன் நுனிகளில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும். சின் முத்திரை அமைப்பு போன்று இருக்கும் அது. உள்ளங்கையில் மற்ற மூன்று விரல்களும் நீட்டிக் கொண்டிருக்க வேண்டும். இந்த அமைப்பில்

சாப்பிடுவதற்கு முன் நீரை ஊற்றி நீர் உலாவுதல் செய்துவிட்டு, பின் நீரை உறிஞ்சிக் குடிக்கும் பொழுது கையில் இரண்டு மூன்று சொட்டுகளே இருக்கும். அதை உள்ளங்கையின் விளிம்பில் அதாவது மணிக்கட்டிற்கு முன்பாக உள்ள பகுதியில் வாயை வைத்து உறிஞ்சிக் குடிக்க வேண்டும்.

பின்னர் நம் கவனம் முழுவதும் நாம் உண்ணும் உணவின் மீதே வைத்து உணவை நன்கு மென்று சுவைத்து சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டால் உணவு நன்கு ஜீரணமாகும். ஜீரணம் நன்கு நடைபெற்றால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் பெறப்பட்டு உடல் ஆரோக்கியமடையும். ஆனால் நாம் உணவு உண்ணும் பொழுதோ, உணவு உண்ட உடனேயோ நாம் அதிகப்படியான தண்ணீர் குடிக்கும் பொழுது அது ஜீரணத்தை முழுவதுமாக கெடுத்துவிடுகிறது. சத்துக்கள் முழுவதுமாக உடலுக்கு கிடைக்கவிடாமல் செய்துவிடுகிறது. சுருக்கமாகச் சொல்வது என்றால் சத்துக்களையும் சக்கையையும் பிரிப்பது சிறந்த ஜீரணமாகும். சிறுகுடலில் இருந்து சத்துக்களும், சக்கைகளும் பிரிக்கப்படுவதற்கு நாம் அருந்தும் அதிகப்படியான நீர் தடையாக இருக்கிறது. அவை சத்துக்களை உறிஞ்சவிடாமல் செய்கிறது. சத்துக்களை குடலுறிஞ்சிகள் உறியும்பொழுது அதனுடன் சக்கைகளும், கழிவுகளும் சேர்ந்தே செல்வதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. உடலுக்குள் சத்துக்கள் உரியப்படுவதற்கும் கழிவுகளைப் பிரித்து வெளியே அனுப்புவதற்கும் இடையூறாக சிக்கல் ஏற்படுத்துவதாக நாம் குடிக்கும் நீர் அமைந்து விடுகிறது. எனவே மலச்சிக்கல் ஏற்படுகிறது.

எனவே நாம் சாப்பிடும் பொழுது தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிடும் பொழுது நீர் குடிக்கவேண்டாம் என்றால் விக்கல், சிக்கல் ஏற்பட்டால் என்ன செய்வது?

உணவு உண்பதற்கு முன் நீரை உறிஞ்சிக் குடித்தோம் அல்லவா ? அதுபோல அந்த அளவிற்குத் தான் குடிக்க வேண்டும். இப்படி நீரை இரண்டு மூன்று சொட்டுக்கள் உறிஞ்சிக் குடிப்பதனால் ஜீரணம் கெடாது. இதை விடுத்து ஒரு டம்ளர் அளவிற்கு தண்ணீர் குடித்தால் கண்டிப்பாக ஜீரணம் கெடும்.

எனவே உணவு உண்ணும்பொழுது குடிநீரை உறிஞ்சி மட்டுமே குடிப்போம். ஜீரணம் முறையாகவும், தரமானதாகவும் நடக்க இதைக் கடைபிடிப்போம். ஆரோக்கிய வாழ்வு வாழ்வோம்.

 

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

1: #blog-pager{clear:both;margin:30px auto;text-align:center; padding: 7px;} 2: .blog-pager {background: none;} 3: .displaypageNum a,.showpage a,.pagecurrent{padding: 5px 10px;margin-right:5px; color: #F4F4F4; background-color:#404042;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);} 4: .displaypageNum a:hover,.showpage a:hover, .pagecurrent{background:#EC8D04;text-decoration:none;color: #fff;} 5: #blog-pager .showpage, #blog-pager, .pagecurrent{font-weight:bold;color: #000;} 6: .showpageOf{display:none!important} 7: #blog-pager .pages{border:none;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);}