improve health, குழந்தைகள் ஆரோக்கியமாய்வளர, How To Improve Children Health

 

IMPROVE HEALTH

குழந்தைகள் ஆரோக்கியமாய்வள 

How To Improve  Children helth

அண்மையில் வெளியான செய்தி ஒன்று நம்மை எல்லாம் அதிர்ச்சியுறச் செய்திருக்கிறது. குழந்தைகளுக்கான முகப்பூச்சு பவுடரில் புற்று நோயை

வரவழைக்கும்எத்திலீன் ஆக்ஸைடு' என்ற நச்சுப் பொருள் அளவுக்கதிகமாக கலக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டு பிரபல நிறுவன தொழிற்சாலையின் உரிமத்தை ரத்துசெய்துள்ளது உணவு மற்றும் மருந்து இது மட்டுமல்ல, குழந்தைகளுக்கான உணவுப் பொருள்கள், அழகு சாதனப் பொருட்கள், தடுப்பூசிகள் வரை நிறைய விஷயங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எவ்வளவு ஆபத்து விளைவிப்பன அதில்கலந்துவருகின்றன என்றுதெரிந்தால்... 


How To Improve Children's Health

இதைப் பற்றிய ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கமே இந்தக்கட்டுரை.

மீடியாக்களில் வரும் விளம்பரங்களைப் பார்த்து அதில் கவரப்படுகிறோம். இன்று நாம் உபயோகிக்கும் பொருட்களில் உள்ள தீமைகளை விளம்பரங்கள் மறைத்துவிடுகின்றன. அதன் மிகைப்படுத்தப்பட்ட காட்சிப்படுத்துதல் அதை உண்மை என்று நம்மை நம்பவைக்கின்றன.

இன்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களுமே ஏதோ ஒரு விதத்தில் வேதியியல் கலவைகள் கொண்டு தயாரிக்கப்படு பவைதான். குறிப்பாக உணவு மற்றும் மருந்துப் பொருட்களில், நூற்றுக்கணக்கில் வேதியியல் கலவைகளால் உருவாக்கப்பட்ட புதுப்புது பொருட்கள் சந்தைக்கு வருகின்றன. இவற்றில் சுமாராக 1700 பொருட்களுக்கு மட்டுமே சர்வதேச பாதுகாப்பு விபரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதாவது அந்தப் பொருட்களின் நம்பகத் தன்மை, பின்விளைவுகள் அற்றது போன்றதற்கான விளக்கங்கள் போன்றவை இருக்கும்.

improve gut health

சர்வதேச பாதுகாப்பு விபரங்கள் இல்லாமல் அனுமதி இல்லாத சுமார் 50,000 வகை வேதியியல் கலப்பு உணவுகள் இந்தியாவைப் போன்ற வளரும், வளர்ச்சியில் பின்தங்கியுள்ள நாடுகளில் சந்தைப்படுத்தப்படுகின்றன. இவற்றை ஒவ் வொன்றையும் தனித்தனியே பரிசோதித்து தரம்பிரித்து மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்க வேண்டும் எனில் அரை நூற்றாண்டுகளுக்கு மேலாகும். இதை சாதகமாக்கி ஏராளமான நிறுவனங்கள் சந்தைக்குள் ஊடுருவியுள்ளன. இவ்வாறு சந்தைப்படுத்தப்படும் பொருட்களின் சோதனை எலிகள், அப்பாவி மக்கள்.

உதாரணத்திற்கு ஒன்று 2008-ல் சீனாவில் பால் பவுடரை உட்கொண்ட 53,000 குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதில் ஏராளமான குழந்தைகள் இறந்தனர். குறிப்பிட்ட அந்த பால்பவுடரை ஆய்வு செய்தபோது மெலமைன் என்ற வேதிப்பொருள் அளவுக்கு அதிகமாக அதில் கலந்துள்ளது கண்டறியப்பட்டது. (அந்த நிறுவனம் சீனாவில் தடைசெய்யப்பட்டு விட்டது. ஆனால் இந்தியாவில் பிரபல பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து களமிறங்கி உள்ள து.)

குழந்தைகளுக்கான பால்பவுடரிலுமா நச்சுப்பொருட்கள் கலப்படம் இருக்கும் என்று நீங்கள் அங்கலாய்த்துக் கொள்ளலாம். ஆனால் குழந்தைகளுக்கான பொருட்களின் சந்தை மிகப்பெரிய லாபம் ஈட்டும் சந்தையாகப் பார்க்கப்படுகிறது. அதை மையப்படுத்தியே நிறைய நிறுவனங்கள் களத்தில் இறங்கியுள்ளன. முப்பது ஆண்டுகளாக தாய்ப்பால் இல்லாமல் நிறைய குழந்தைகள் இறந்ததனால், அன்று (Unicef) யுனிசெஃப் அமைப்பு மூலம் ஒரு அறிக்கை தயார் செய்து வெளியிட்டது. இதுவே பால்பொருள் உற்பத்திக்கு பன்னாட்டு நிறுவனங்கள் கதவு திறந்துவிட்டது.

இன்று பால்பவுடர், புட்டிப்பாலைவிட ஒரு குழந்தைக்கு தாய்ப்பாலே மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கிறது. குழந்தைக்கு தாய்ப்பால் மகத்துவத்தை இன்று .நா. உட்பட உலக நாடுகள் அனைத்தும் ஒப்புக்கொண்டுதாய்ப்பால் குழந்தைக்கு தொடர்ந்து ஒருவருடமாவது அளிக்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றன.

quality improvement in healthcare

பால் பவுடர் மட்டுமல்ல குழந்தைகளுக்கான சோப்பு, ஷாம்பு முதல் அழகு சாதனப் பொருட்கள் அனைத்தும் நச்சுகளால் நிரம்பி இருக்கின்றன. மூலிகைக்குளியல், ஷாம்பு, சோப் என்று தயாரிப்பு நிறுவனங்கள் கூறுவதில் பெரும்பாலும் உண்மை இல்லை . அதில் சோடியம் லாரல் சல்பேட், சோடியம் ஈத்தேல் சல்பேட் போன்ற வேதியியல் நச்சுப் பொருட்கள் கலக்கப்படுகின்றன. இது தவிர பேபி ஆயிலில் (Hexane) ஹெக்சேன் எனும்வேதிப்பொருள் கலக்கப்படுகிறது. இது குழந்தைகளின் மென்மையான சருமத்தில் ஊடுருவி சாதாரண தோல்நோய் முதல் புற்றுநோய் வரை பாதிப்புகள் ஏற்படுத்தும்.

குழந்தைகளுக்கு என்று நகப் பூச்சுகள் கடையில் விற்கப்படுகின்றன. குழந்தைகள் என்றில்லை பெரியவர்கள் பயன்படுத்தும் குறிப்பாக பெண்கள் உபயோகிக்கும் நகப்பூச்சுகளில் (Nailpolish) தோல் புற்றுநோயை உருவாக்கும் காரியம் அளவுக்கு அதிகம் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது நகத்தின் வழியாக ரத்தத்தில் அந்த நச்சுகள் எளிதாக கலக்கும் வாய்ப்புகள் அதிகம். இதுதவிர வினிகர் கலந்த ஜங்புட் அமிலத்தன்மை வாய்ந்த உணவுகளை நிறையபேர் விரும்பி சாப்பிடுகிறோம். நகப்பூச்சு களில் உள்ள காரீயம் உணவுடன் கலந்து உணவுக் குழாய் புற்று நோய் ஏற்படவும் வழிவகுக்கும்.

முன்பெல்லாம் விழாக்காலங்களில் மட்டுமே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 'மேக்கப் போட்டுக் கொள்வார்கள். ஆனால் இன்றைக்கு குழந்தைகள், பெண்கள் தினசரி மேக்கப்போடு இருப்பது தான் புதிய நாகரிகமாக உருவெடுத்துள்ளது. சுருக்கமாக சிலவற்றைக் கூறுகிறேன். கண்களில் தீட்டும் மையில் பாலிசைக்ளிக் ஹைட்ரோகார்பனும் உதட்டுச் சாயத்தில் ஹைட்ரோக்யூனோன் மற்றும் ஃபெத்தலேட்ஸ் ஆகிய புற்றுநோயை உருவாக்கும்

improve gum health

ஹார்மோன்களை பாதிப்படையச் செய்து பெண் சிறுகுழந்தைகள் விரைவில் பூப்படையச் செய்யும் நச்சு வேதிப்பொருட்கள் மிகுந்த அளவில் இருக்கின்றன. சரி இதிலிருந்து விடுபட மாற்றுவழிகள் என்ன என்று பார்ப்போம் 

1. குழந்தைகளுக்கு தாய்ப்பாலே சிறந்தது. குறைந்தபட்சம் பிறந்த குழந்தைக்கு 6 முதல் 8 மாதங்களாவது தாய்ப்பால் தரவேண்டும். பசி உணர்விற்கும் தாக உணர்விற்கும் வித்தியாசம் உணர்ந்து தாகத்திற்கு நீரூம் பசிக்கும்பொழுது தாய்ப்பாலும் தரவேண்டும்

2.ஆறு மாதங்களில் இருந்து இடையிடையே குழந்தை எப்பொழுது எல்லாம் விரும்புகிறதோ பசிக்கும்பொழுது இயற்கையான திரவ வகை உணவுகளையும் உண்பதற்கு பழக்கப்படுத்தலாம். அட்டைகளில் அடைக்கப்பட்ட சத்துமாவுகளை தவிர்த்து நாமே வீட்டில் தயாரித்து கொடுக்கலாம். உதராணத்திற்கு அரிசி கஞ்சி, கேழ்வரகு கஞ்சி, நெய், எண்ணெய் கலந்த பருப்பு சாதம், உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், வாழைப்பழம், மசித்த இட்லி, இடியாப்பம், காய்கறிகளில் இருந்து தயாரித்த சத்துமாவுக் கஞ்சி போன்றவைதரலாம்

3.குழந்தைகளின் உடைகள் தளர்வாக உடலை இறுக்கமாக பற்றிக்கொள்ளாதவண்ணம்இருக்கவேண்டும். குழந்தைகளின் உடைகளில் வீரியமில்லாத சோப்புவகைகளால் சலவை செய்யலாம். முடிந்தவரை பருத்தி உடைகளையே பயன்படுத்துவது சாலச்சிறந்தது. கிருமிநாசினி சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதால் அதைப் பயன்படுத்த தேவையில்லை

4.எளிதில் ஜீரணமாகும் சத்தான எந்த உணவையும் குழந்தைக்கு ஊட்டலாம். கடையில் விற்கும் கேக், சாக்லேட், நூடுல்ஸ், சிப்ஸ் போன்ற உணவிற்கு குழந்தைகளை பழக்கப்படுத்தாதீர்கள். அதில் உள்ள சுவைகூட்டுப் பொருட்கள், நச்சு வேதிப்பொருட்கள் குழந்தைகளின் உடல் நோய் எதிர்ப்பு சக்தியைத் தடுக்கும். உடல் பருமனை ஏற்படுத்தும்.

better gut health

 5.கண் இமை, புருவம், உதடு ஆகியவற்றிற்கு பயன்படுத்தும் வண்ணச் சாயங்களைத் தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த வழி, நக அழகிற்கு மருதாணி இலைகளை அரைத்துப் பயன் படுத்தலாம். கைகள், கால்களுக்கு நல்ல அழகைக் கொடுக்கும். மருத்துவ குணம் மிக்கது. தலைக்கு கரியபோளத்தை, பழைய தயிர் அல்லது மோருடன் சேர்த்து அரைத்துப் பயன்படுத்தி குளித்து வந்தால் தலைமுடி கருமையாகும். நன்கு அடர்த்தியாக முடி வளரும். செம்பருத்தி, கரிசலாங்கண்ணி, நெல்லிக்காய் போன்றவற்றை எண்ணெயில் காய்ச்சி தலைக்கு இட்டுவர முடி நன்றாக வளரும். மயிலிறகை சாம்பலாக்கி அதனை தேங்காய் எண்ணெயுடன் கலந்து புருவங்களுக்கு தடவி வர நன்கு அழகாக பளிச்சென தெரியும். பாலாடை, தயிர் ஆடை, வெண்ணெய் ஏதாவது ஒன்றை உதடுகளுக்குப் பூசி வர இயற்கையான அழகுடன் உதடுகள் கவர்ச்சியாக இருக்கும். 6.பால்பவுடரை முற்றிலும் தவிர்க்கலாம். அதற்கு பதில் மாட்டுப் பால் வாங்கி பயன்படுத்தலாம். தேங்காய்ப்பால் மிகுந்த நன்மை அளிக்கும். தேங்காயும் பழமும் மனிதனுக்கு முழு முதல் உணவு

6.குழந்தைகளுக்கு பவுடர் தேவையே இல்லை. சருமத்தில் உள்ள வியர்வைதுவாரங்களை அவை அடைத்துக் கொள்ளும். வாரம் ஒரு முறை இளஞ்சூடான நல்லெண்ணெய் கொண்டு உடலில் மசாஜ்செய்துகுளிக்கவைத்தால் போதும். இதுதவிர குளியலுக்கு பாசிப்பயறு மாவு + சந்தனம், கடலை மாவு போன்றவை பயன்படுத்தலாம். வேறு வாசனைத் திரவியங்கள் தேவை இல்லை. இயற்கையான எழிலுடன் குழந்தை ஆரோக்கியமாய்வளரும்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

1: #blog-pager{clear:both;margin:30px auto;text-align:center; padding: 7px;} 2: .blog-pager {background: none;} 3: .displaypageNum a,.showpage a,.pagecurrent{padding: 5px 10px;margin-right:5px; color: #F4F4F4; background-color:#404042;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);} 4: .displaypageNum a:hover,.showpage a:hover, .pagecurrent{background:#EC8D04;text-decoration:none;color: #fff;} 5: #blog-pager .showpage, #blog-pager, .pagecurrent{font-weight:bold;color: #000;} 6: .showpageOf{display:none!important} 7: #blog-pager .pages{border:none;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);}