வாய்ப்புண் ulcer in mouth
வாய்ப்புண் ulcer in mouth
வாய்ப்புண் ulcer in mouth
பல்லைச் சரியாகப் பாதுகாக்கத் தெரியாமையினால் பல நோய்கள் உண்டாகின்றன. காலையில் எழுந்து மலஜலம் கழித்தான பிறகு பல் துலக்குதல் முற்றிலும் அவசியம். பல்லில் கட்டியுள்ள உமிழ்நீர் விஷமாக மாறுகிறது. ஆகையினால் தான் பல் துலக்குவது முற்றிலும் அவசியமாகிறது. இதனால் வாய் புண் சரியாகிறது.(ulcer in mouth)
விலங்குகள் பல் துலக்குவதில்லை. ஆனால் பல் துலக்குவது மனிதனுக்கு முற்றிலும் அவசியமானது. அதற்கேற்ற வசதி கள் மனிதனுக்கு முற்றிலும் அமைந்திருக்கின்றன. 'ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி' என்பது பழமொழி. ஆலமரத்தின் விழுதும் கருவேல் மரத்தின் குச்சியும் பல் துலக்குவதற்கு நன்கு உதவுகின்றன. அவைகளில் இயற்கையாக அமைந்துள்ள துவர்ப்புப்பசை பல்லிலுள்ள நோயை அகற்றுகிறது. நாள்தோறும் பல் குச்சியை மாற்றுவதால் அதில் நலனே நிறைந்திருக்கிறது.இதனால் வாய் புண் சரியாகிறது.(ulcer in mouth)
இக்காலத்தில் பிரஷ் (tooth
brush) கொண்டு பல் துலக்குவது சர்வ சாதாரணம். இதில் வசதி, கேடு இரண்
நோய்க்கு இடம் கொடேல் திம் இருக்கின்றன. பல்சந்துகளிலுள்ள அழுக்குகளைச் ஈரண்டிக் கொண்டு வருவது வசதி. ஈறுக்குப் பலஹீனத்தை உண்டுபண்ணுவது அதிலுள்ள கேடு. பின்பு அந்தப் பிரஷை நன்றாகச் சுத்தப்படுத்தி வைக்காவிட்டால் அதில் ஒட்டியுள்ள உமிழ்நீர் விஷமாக மாறிப் பல்லுக்கு விரைவில் நோயை உண்டுபண்ணும். சுத்தமான பிரஷ் கொண்டு துலக் கவும், பிறகு கை விரல்களால் ஈறை நன்றாகத் தேய்த்துக் கொடுக்கவும் செய்வது அவசியமாகிறது.இதனால் வாய் புண் சரியாகிறது.(ulcer in mouth)
உமிக்கரியில் சிறிதளவு உப்பைக் கலந்து கை விரலால் பல்லைத் துலக்குவது நம் நாட்டுப் பழைய வழக்கம். இதில் செலவு ஒன்றும் கிடையாது. நலன் அனைத்தும் இதில் அடங்கியிருக்கிறது. Tooth
brushலும், paste
என்கின்ற பசையிலும் நலன் கேடு இரண்டும் அமைந்திருக்கின்றன. அதில் பணச்செலவும் அதிகம்.
பல் துலக்கி வாய் கொப்பளிக்கிற அதே வேளையில் நாவைத் தொண்டை வரையில் தேய்த்துக் கொடுத்து அதில் படிந்திருக்கிற கோழையை வெளிப்படுத்துவது முற்றிலும் அவசியம். தொண்டையில் படிந்து கிடக்கிற கோழையையும், பல் சந்தில் ஒட்டியிருக்கிற அழுக்கும் பலவிதமான நோய்களுக்கு முகாமையா கின்றன. நாவை வெளியே நீட்டிக் கண்ணாடியில் பார்க்கவேண்டும். சுத்தமான நாவு செந்நிறமுடையதாயிருக்கும். அதில் வெள்ளைப்படலம் படியா திருப்பது ஆரோக்கியத்துக்கு அறிகுறியாகும். எவ்வளவுக்
கெவ்வளவு வெள்ளைப்படலம் நாவில் படிந்திருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு உடலின் நிலைகுலைந்து வருகிறது என்பதற்கு அது அறிகுறியாகும்.
உணவை அளந்து உண்டு அதைச் சரியாகச் செமித்து முறையாக மலஜலம் கழித்துவரவேண்டும். பிறகு முறையாகப் பல்துலக்கி நாவினின்று கோழையை வழித்தெடுக்க வேண்டும். அப்படிச் செய்வதால் நோய்கள் தவிர்க்கப்படுகின்றன; நாவில் படலம் கட்டாதிருக்கும்; வாயில் துர்நாற்றம் எடுக்காதிருக்கும். மிகச்சிறியவைகள் எனினும் இவைகளை மனிதன் நாள் தோறும் கவனித்து இந்த நியதிகளை அனுசரித்து வரக் கடமைப்பட்டிருக்கிறான்.இதனால் வாய் புண் சரியாகிறது.(ulcer in mouth)
கருத்துகள் இல்லை