நோயை தடுக்கும் வழிமுறைகள் preventing disease
நோயை தடுக்கும் வழிமுறைகள் preventing disease
நோயை தடுக்கும் வழிமுறைகள் preventing disease
தங்கள் போக்கில் வாழ்ந்து வருகிற பறவைகளும் விலங்குகளும் நோய்வாய்ப்படுவதில்லை. வாழ்வின் கடைசிப் பகுதியில் அவைகள் சிறிது நோயுற்றிருந்து மடிந்து போகின்றன. ஆனால் மனிதன் மட்டும் பிறந்தது முதற்கொண்டு வாழ்ந்திருக்கும் காலமெல்லாம் நோய்க்கு அடிக்கடி ஆளாகிறான். இயற்கையாக வாழும் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் ஆஸ்பத்திரிகளோ, வைத்தியசாலைகளோ எங்கு மில்லை. ஆயினும் அவைகள் இனிது வாழ்ந்து வருகின்றன. மனிதன் அறிவுத்துறையில் முன்னேற்றம் அடைந்து
வருவதற்கேற்ப வைத்தியத்திலும், ரண வைத்தியத்திலும் அதி வேக முன்னேற்றம் அடைந்து வருகிறான். புதிய புதிய நோய்களும் அதற்கேற்றவாறு உருவெடுத்து வருகின்றன. இதற்கு அடிப்படைக் காரணம் ஒன்று உண்டு.
![]() |
preventing disease |
மனிதன் உடல் உழைப்பை
எவ்வளவுக்கெவ்வளவு
புறக்கணிக்கின்றானோ
அவ்வளவுக்கவ்வள அவனுக்கு நோய்கள் அதிகரிக்கின்றன. கிருஷி,
கைத்தொழிற்சாலை முதலிய உடல் உழைப்பை அடிப்படையாகக் கொண்டுள்ள வாழ்க்கை முறையில் நோய்வாய்ப்படுவது மிகவும் குறைவு. அத்தகைய உழைப்பாளிகள் நூறு பேர்க்கிடையில் ஐந்து அல்லது பத்து பேர் தான் ஏதோ சில நோய்களுக்குச் சிறிதுகாலம் ஆளா வார்கள். உடல் உழைப்பில்லாது ஜீவனம் பண்ணி வரு கிறவர்கள் நூறுபேர்க்கிடையில் சுமார் ஐம்பது பேர் ஆஸ்பத்திரிக்குப் போகவேண்டிய நிலையில் நோய்க்கு ஆளாகிறார்கள்.
ஆதலால் இது விஷயத்தில் மனிதன் கருத்துமிகச் செலுத்தவேண்டும். உடல் உழைப்புக்கு இடம் இல்லாத உத்தியோகங்களும் தொழில்களும் பல உள. அவைகளில் ஈடுபட்டிருக்கிறவர்கள் மாலை நேரத்தில் ஓடியாடி விளையாடவேண்டும். அல்லது வசதிப்பட்டால் பூமியைத் திருத்துதல், விறகு வெட்டுதல், மூட்டை சுமத்தல் முதலிய உடல் உழைப்பை நாள் தோறும் ஒரு மணிநேரம் அல்லது இரண்டு மணிநேரம் கடைப்பிடிக்க வேண்டும். உட லில் வியர்வை ஏராளமாக ஊற்றெடுத்து வரவேண்டும்.
நோயைத் தடுப்பதற்கு நெற்றி வியர்வை நிலத்தில் விழும்படி உழைப்பது அல்லது ஓடியாடி விளையாடுவது முற்றிலும் அவசியம். இக்கோட்பாட்டை நன்கு கடைப்பிடிப்பது நோயைத் தடுப்பதற்கு உற்ற உபாயமாகிறது. வியர்வை வந்துகொண்டிருக்கிற பொழுது சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருக்கவேண்டும். வியர்வையில் நனைந்து போன உடையை வியர்வை அடங்கிய பிறகு மாற்றுதல் வேண்டும். வியர்வையை முன்னிட்டு உடலில் கிளம்பியுள்ள உஷ்ணம் அடங்கிய பிறகு நீராடுவது உசிதம். அது சாத்தி யப்படாத இடத்து உலர்ந்த துண்டைக்கொண்டு உடலை நன்கு துவட்டுதல் தேவை.
அதன் பிறகு உலர்ந்திருக்கும் உடையை அணிந்துகொள்ளலாம். நோயைத்தடுப்பதற்கு இது மிக முக்கியமான உபாயமாகிறது. 'கந்தையானாலும் கசக்கிக்கட்டு, கூழ் ஆனாலும் குளித்துக்குடி' என்பது கோட்பாடு. அழுக்குப்படிந்துள்ள உடையை அணிந்திருக்கலாகாது. வியர்வை நாற்றத்தில் மாறியுள்ள உடையை அணிந்து கொள்ளலாகாது. நாற்றயெடுக்கும் படுக்கையில் உறங்கலாகாது. விழித்திருக்கிற பொழுதும் உறங்குகிறபொழுதும் மேனியின் மீது படிகிற உடை வகைகளும் படுக்கை வகைகளும் சுத்தமானவைகளாச இருக்கவேண்டும். நல்ல காற்றோட்டமுள்ள இடத்திலேயே! வசித்திருத்தல் வேண்டும்.
படுத்துறங்கும் அறையில் ஏராளமாகக் காற்றோட்டம் இருக்கவேண்டும். தூய்மையில் வெளியிலிருக்கும் காற்றுக்கும் அறைக்குள்ளே இருக்கும் காற்றுக்கும் எந்த விதமான வித்தியாசமும் இருக்கலாகாது, சுவாசிப்பதற்குரிய காற்றைப் பற்றிய கோட்பாடு இதுவேயாம். மேனியின் மீது சில நிமிஷங்களுக்காவது சூரிய வெப்பம் படியுமானால் அது மிக நன்று. உடல் நோய்வாய்ப் படா திருக்கும்படி தடுக்கிற சக்தி சூரிய வெப்பத்திற்கு உண்டு. சூரியவெப்பமும் வெளிச்சமும் ஆரோக்கியத்துக்கு முற்றிலும் இன்றியமையாதவைகளாம். இவையிரண்டும் இயற்கைத் தாய் தந்துள்ள வரப்பிரசாதங்களாகின்றன. இவைகளை நன்கு பயன்படுத்த மனிதன் கடமைப்பட்டிருக் கிறான்
கருத்துகள் இல்லை