ocean waves




Breaking News

HELTH AND BEAUTY TIPS AND TO CREATE HEALTHY HUMAN BEINGS PLEASE FOLLOW THE OCEAN WAVES BLOGGER

மூதாதையர் வழிபாடுபித்ரு யக்ஞம் How To Gain Ancestors Worship

 

பித்ரு யக்ஞம் மூதாதையர் வழிபாடு 

How To Gain Ancestors Worship

நம் குடும்பங்களை ஒற்றுமையுடன் வைத்திருப்பதில் நம் மூதாதையர்களின் பங்கு மிகவும் முக்கியமானது ஆகும். ஒரு அறிஞர் இந்த உலகை நடத்திச் செல்வதே நம் கண்ணுக்குத் தெரியாத மூதாதையர் தாம் என்கிறார். நாம் பேசும் மொழி, நாம் உண்ணும் உணவின் சுவை, நாம் சொற்களை உச்சரிக்கும் விதம், நம் குடும்பப் பழக்கவழக்கங்கள், இவையெல்லாம் நம் மூதாதையர்கள் நமக்குள் ஏற்படுத்திய மாற்றங்கள் ஆகும். அவற்றின் மூலம் அவர்கள் நம்மோடு இன்னும் வாழ்கிறார்கள். அவர்கள் கட்டி வைத்த வீடு, நட்டு வைத்த மாமரம், வெட்டி வைத்த குளம், கிணறு இவற்றை நாம் அனுபவிக்கும் போதும். நல்ல முறையில் பயன்படுத்தும் போதும் அவர்களும் நம்முடன் வாழ்கிறார்கள். குழந்தைகளுக்கு தாத்தா, பாட்டிகளின் பெயரை வைத்து அவர்களுடைய புனித நினைவு அழிந்துவிடாமல் பார்த்துக் கொள்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்துத் தேய்பிறையைமூதாதையர்களுக்கு உரிய பருவமாகப் பின்பற்றுகிறோம். ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் கன்னியாகுமரி, பாபநாசம், இராமேஸ்வரம், குழித்துறை ஆகிய இடங்களில் லட்சக்கணக்கில் மக்கள் கூடி மூதாதையருக்கு அஞ்சலி செலுத்துகிறோம். வள்ளுவப் பெருமானும், மூதாதையருக்கு அஞ்சலி செய்யும் வழக்கத்தை தெய்வ வழிபாட்டுக்கும் முன்னால் வைத்து பேசுகிறார். ‘தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான்

என்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை'

தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான், என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமை ஆகும்.'' தென்புலத்தார் என்ற பாடலில் இறந்து போய் யமனின் திசை ஆகிய தென்திசை சேர்ந்த மூதாதையரை தெய்வத்திற்கும் முன்னால் வைத்துப் பேசுகிறார். மூதாதையர் வழிபாடு உலகின் பல நாடுகளிலும், பல மதங்களிலும், பல பண்பாடுகளிலும் வேரூன்றி நிற்கும் வழிபாடு ஆகும். ஜப்பானில் வழங்கும் ஷிண்டோ மதம் என்ற மதத்தில் மூதாதையர் வழிபாடு கூறப்பட்டுள்ளது. பாரத நாட்டில் இருந்து புத்தமதம் வெளிநாடுகளில் பரவியபோது, மூதாதையர் வழிபாடும் அந்நாடுகளின் பலம் பெற்றது. இன்றும் குடும்பத்தில் துன்பங்களும்,

தடைகளும், இடைஞ்சல்களும், வருத்தமும் வரும்போது பல சோதிடர்கள் மூதாதையர் வழிபாட்டைக் குறையின்றி செய்யும்படி ஆலோசனை கூறுகின்றனர். கயா என்ற புனித நகரத்தில் விஷ்ணு பாதத்தில் மூதாதையர்களுக்காக பிண்டம் போடுவது மிகவும் புனிதச் செயலாகக் கருதப்படுகிறது. அதுபோல் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்திலும், திருவாரூர் மாவட்டம் திலதர்ப்பணபுரியிலும் மூதாதையர்களுக்கு எள்ளும், தண்ணீரும் இறைக்கும் வழக்கம் உண்டு. இறந்துபட்ட மூதாதையரை வழிபடுவதுடன் கூடவே, உயிரோடு இருக்கும் அப்பா, அம்மா, மாமனார், மாமியார் ஆகியோரும் நல்லமுறையில் கவனிக்கப்பட வேண்டும். நம் வீட்டில் உள்ள பெரியவர்களை நாம் எப்படி மதிக்கிறோம் என்பதை நம் குழந்தைகள் பார்த்து அதுபோல் தான் நாளைக்கு நம்மையும் நடத்துவார்கள்.



காலபுரி எனும் நாட்டை குமதி எனும் மன்னன் ஆண்டுவந்தான். நாட்டில் உணவுப்பஞ்சம் வந்தபோது மன்னன் குமதி தன் குடிமக்களுக்கு ஒரு அறிவிப்புச் செய்தான். நம் நாட்டில் கிழவர்கள், கிழவிகள் எல்லாம் தண்டச்சோறு தின்கிறார்கள். அவர்களால் நாட்டுக்கு ஒரு பயனும் கிடையாது. அவர்களை எல்லாம் காட்டுக்கு அனுப்பிவிடுவோம். இந்த உத்தரவை மீறி யாராவது கிழவன், கிழவியை வீட்டில் வைத்து ஆதரிப்பின் அவர்கள் தலை வெட்டப்படும் என்பது மன்னன் உத்தரவு.

 

இந்த கட்டளைக்கு பயந்த பலர் தங்கள் பெற்றோர்களை வனத்துக்கு அனுப்பிவிட்டனர். சுகுணன் என்ற இளைஞன் மட்டும் தன் பெற்றோரை தன் வீட்டில் பாதாளத்தில் ஒரு நிலவறையில் வைத்து ரகசியமாகக் காப்பாற்றி வந்தான். மருந்து, விவசாயம், நல்லொழுக்கம், கடவுள்பக்தி, ஆகிய விஷயங்களில் தன் பெற்றோர்களின் ஆலோசனையைக் கேட்டு அதன்படி நடந்து வந்தான் சுகுணன்.

நாட்டில் மந்திரி சுமேதா என்பவனுக்கு மன்னன் செய்த காரியம் அடியோடு பிடிக்கவில்லை . முதியவர்கள் நாட்டின் ஞானத்திரட்டு, அனுபவத்தின் திரட்டுப்பால், அறிவின் திரட்சி அல்லவா? மன்னனுக்குப் பாடம் புகட்ட மந்திரி ஒரு அறிவிப்புச் செய்தான். நம் நாட்டின் அறிவை அளந்து பார்க்க ஒரு சோதனை வைக்கப்போகிறேன். 1. கன சதுரவடிவில் பூசணிக்காய் மூன்று கொண்டுவரவேண்டும். 2. அடிக்காமலே ஓசை எழுப்பும் டமரு (உடுக்கை) ஒன்று கொண்டுவரவேண்டும். 3. நான் ஒரு தடிக்கம்பு தருவேன். அது மரத்தில் இருந்தபோது அதன் அடிப்பாகம் எது, அதன் நுனிப்பாகம் எது என்று அடையாளம் காணவேண்டும்.

 

மூன்று மாதம்

காலகெடு. விடைகாண்பவர்களுக்கு நல்ல பரிசு அவர்கள் கேட்பது கிடைக்கும்.

யாருமே பரிசுக்குத் தகுதி உள்ளவர்களாகக் கோரிக்கை வைக்கவில்லை. அறிவும், அன்பும், அனுபவமும், புத்திசாதுர்யமும் உள்ள முதியவர்களைத் தான் முட்டாள் ராஜா நாடுகடத்திவிட்டானே!

கடைசியில் சுகுணன் மட்டும் மூன்று கனசதுரப் பூசணிக்காய்களைக் கொண்டுவந்தான். அவை பச்சைப்பசேல் என்று கச்சித கன சதுரமாக இருந்தன.

அடுத்து அவன் ஒரு உடுக்கையை எடுத்து அதைச் சற்று அசைத்தான். அதில் இருந்து படபட்டப்பட என்று தானே ஓசை எழுந்தது.

மூன்றாவதாக சுகுணன் மந்திரி கொடுத்த கைத்தடியைக் கையில் வாங்கிப் பார்த்தான். அது அடி, நுனி என்று கூறமுடியாதபடி ஒரே கனத்தில் கைத்தடியாக இருந்தது. அதை வாங்கிய சுகுணன் ஒரு அண்டாத் தண்ணீரில் அதைப் போட்டான். தடியின் ஒருபகுதி முதலில் நீரில் மூழ்கியது. அதைப்பிடித்து இத்தடி, மரத்தின் பகுதியாக இருந்தபோது, இதுதான் கீழ்ப்பாகம் என்றான் சுகுணன்.

அவன் திறமையை மன்னன் குமதி, மந்திரி சுமேதா, அவையோர் அனைவரும் பாராட்டினர்.

 

எப்படியப்பா இதையெல்லாம் நீ செய்து முடித்தாய்? என்று மன்னன் ஆவலுடன் சுகுணனை கேட்டான்.

மஹாராஜா! எனக்கு தண்டனை கொடுப்பதில்லை என்று அபயம் கொடுத்தால்தான் நான் விளக்கம் தருவேன் என்றான் சுகுணன்.

பயப்படாதே உள்ளதைச்சொல் என்றான் குமதி மன்னன்.

சுகுணன் சொன்னான்! வயதானவர்களை நாடுகடத்தும் யோசனை எனக்குப் பிடிக்கவில்லை. நாட்டின் அனுபவ அறிவை எல்லாம் நாம் இழந்து விடுவோமே என்று என் அப்பாவையும், அம்மாவையும் வீட்டில் நிலவறையில் ஒளித்து வைத்திருந்தேன். என் அம்மா, சுக்கு கஷாயம், கை வைத்தியம், சமையல்கலை எல்லாம் தெரிந்தவர். என்தந்தை விவசாயம், பருவமழை, உயிர்களின் இயல்பு அறிந்தவர். மந்திரியின் அறிவிப்பினைக் கேட்ட நான் என் அப்பாவிடம் போய் யோசனை கேட்டேன். அவர் சொன்னார் கால் அடிக்குக் கால் அடி குறுக்களவு கொண்ட மரப்பெட்டிகள் செய்து பூசணிக்காய்கள் கொடிகளில் இருக்கும்போதே அவற்றைப் பெட்டிக்குள் வைத்துவிடு. காம்பு கொடியிலும், காய் பெட்டிக்குள்ளுமாக அவை இருக்கட்டும். பூசணிக்காய்கள் வளர்ந்து பெட்டிகளை நிரப்பிவிடும். கனசதுரப் பூசணிக்காய்கள் தயாராகிவிடும் என்றார்.

அடிக்காமலேயே ஓசை எழுப்பும் உடுக்கை செய்ய, உடுக்கைக்குள் தேனடைகளைத் தேனீக்களுடன் வைத்து இரண்டுபுறமும் தோலால் மூடிவிடு. உடுக்கையை கொஞ்சம் அசைத்தாலும் தேனீக்கள் வெளிவந்து தோல்மூடியில் மோதும், உடுக்கை ஒலிக்கும் என்றார்.

மரத்தடி பற்றிக் கேட்டேன். தற்தையார் சொன்னார். ஒரு மரத்தின் கிளை, கொம்பு, அடிமரம் எல்லாவற்றிலும் கீழ்ப்பகுதி அடர்த்தி அதிகமாக கனமாக இருக்கும். மேல்பகுதி லேசாக இருக்கும். தண்ணீரில் தடியைப் போடு. கீழ்ப்பகுதி தாழும் என்றார். தந்தை கூறிய நல்லுபதேசத்தால் நான் போட்டியில் வெற்றி பெற்றேன் என்றான் சுகுணன்.

மன்னன் மகிழ்ந்தான். சுகுணனின் பெற்றோர் பக்தியைப் பாராட்டினான். நாடுகடத்திய முதியவர்களை எல்லாம் திரும்ப அழைத்துவர உத்தரவிட்டான். அவர்கள் ஆசியாலும், ஆலோசனையாலும் நாடு திரும்பவும் வளம் பெற்றது.

மந்திரி சுமேதாவின் நல்லறிவை எல்லோரும் போற்றிப் புகழ்ந்தனர்.

இதுபோன்ற விஷயங்களில் வறட்டுச் சொற்பொழிவை விட நடைமுறை உதாரணங்கள் தான் நம் குழந்தைகளுக்கு அதிகம் தேவைப்படுகின்றன. இதனால் தான் நம் பெரியவர்கள் அன்னையும்,

பிதாவும் முன்னறி தெய்வம் என்றும், மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ என்றும் சொல்லி வைத்தார்கள்.

 

மூன்று மாதம்

காலகெடு. விடைகாண்பவர்களுக்கு நல்ல பரிசு அவர்கள் கேட்பது கிடைக்கும்.

யாருமே பரிசுக்குத் தகுதி உள்ளவர்களாகக் கோரிக்கை வைக்கவில்லை. அறிவும், அன்பும், அனுபவமும், புத்திசாதுர்யமும் உள்ள முதியவர்களைத் தான் முட்டாள் ராஜா நாடுகடத்திவிட்டானே!

கடைசியில் சுகுணன் மட்டும் மூன்று கனசதுரப் பூசணிக்காய்களைக் கொண்டுவந்தான். அவை பச்சைப்பசேல் என்று கச்சித கன சதுரமாக இருந்தன.

அடுத்து அவன் ஒரு உடுக்கையை எடுத்து அதைச் சற்று அசைத்தான். அதில் இருந்து படபட்டப்பட என்று தானே ஓசை எழுந்தது.

மூன்றாவதாக சுகுணன் மந்திரி கொடுத்த கைத்தடியைக் கையில் வாங்கிப் பார்த்தான். அது அடி, நுனி என்று கூறமுடியாதபடி ஒரே கனத்தில் கைத்தடியாக இருந்தது. அதை வாங்கிய சுகுணன் ஒரு அண்டாத் தண்ணீரில் அதைப் போட்டான். தடியின் ஒருபகுதி முதலில் நீரில் மூழ்கியது. அதைப்பிடித்து இத்தடி, மரத்தின் பகுதியாக இருந்தபோது, இதுதான் கீழ்ப்பாகம் என்றான் சுகுணன்.

அவன் திறமையை மன்னன் குமதி, மந்திரி சுமேதா, அவையோர் அனைவரும் பாராட்டினர்.


 

 

 

 

 

கருத்துகள் இல்லை

1: #blog-pager{clear:both;margin:30px auto;text-align:center; padding: 7px;} 2: .blog-pager {background: none;} 3: .displaypageNum a,.showpage a,.pagecurrent{padding: 5px 10px;margin-right:5px; color: #F4F4F4; background-color:#404042;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);} 4: .displaypageNum a:hover,.showpage a:hover, .pagecurrent{background:#EC8D04;text-decoration:none;color: #fff;} 5: #blog-pager .showpage, #blog-pager, .pagecurrent{font-weight:bold;color: #000;} 6: .showpageOf{display:none!important} 7: #blog-pager .pages{border:none;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);}