அசைவம் சாப்பிடுவது நமக்கு ஆழ்ந்த புரிதல் இருக்கிறதா? How To Use Non Vegetarian To Desire

 

அசைவம் சாப்பிடுவது பற்றி நமக்கு ஆழ்ந்த புரிதல் இருக்கிறதா? How To Use Non Vegetarian To Desire


பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பு சைவ உணவுகளே நல்லது என்று இந்த பாரத நாட்டில் பேச முடியும். ஆனால் இன்றைய நிலையே வேறு. இந்தியா மாட்டு இறைச்சி உற்பத்தியில் முதலாவதாகவும், ஆட்டு இறைச்சி உற்பத்தியில் இரண்டவதாகவும் தற்போது உள்ளது. 2011 ஒரு வருட கணக்கில் பெங்களூரில் மட்டும் 1.14 லட்சம் டன் மாமிசம் விற்பனை ஆகி இருக்கிறது. அசைவம் சாப்பிடுவது உடம்பிற்கு நல்லதா கெட்டதா என ஆராய்வது மட்டும் நோக்கமல்ல. இந்த மித மிஞ்சிய மாமிசம் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது, இதனை உண்பதால் வரும் கேடுகள் என்ன? இதனால் நம் இயற்கைக்கு ஏற்படுத்தும் சீர்கேடுகள் என்ன என்று பார்ப்போம்.நாம் சில வருடங்களுக்கு முன்பு செய்த புள்ளி விவரத்தை காண்போம். அப்போது இருந்த கணக்கின் படி நம்மிடம்....

கோழி, பன்றி, மாடு.

ஐம்பதாயிரம் மில்லியன் (50000000000) ஐந்தாயிரம் மில்லியன் (5000000000) ஆறாயிரம் மில்லியன் (60000000000) 


சராசரியாக ஒரு கிலோ இறைச்சி உருவாக்க நமக்கு ஏழு கிலோ தானியம் வேண்டும். நாம் ஒரு வருடத்திற்கு 3,600 + 1,500 + 100 = 5,200 ஆயிரம் மில்லியன் கிலோ இறைச்சி உற்பத்தி செய்கிறோம் என வைத்து கொள்வோம். இதற்கு நமக்கு 36,400 ஆயிரம் மில்லியன் கிலோதானியம் தேவைப்படும்.


அசைவம் சாப்பிடுவது நமக்கு ஆழ்ந்த புரிதல் இருக்கிறதா? How To Use Non Vegetarian To Desire

இவ்வளவு தானியங்கள் எங்கிருந்து வருகிறது? இந்த விலங்குகளின் உணவு தேவைக்காக நம் நாட்டின் காடுகள் அழிக்கப்படுகின்றன. பல ஏக்கர் நிலங்களில் இரசாயன உரங்கள் தூவப்பட்டு இந்த விலங்களுக்கும் பறவைகளுக்குமான தானியங்கள் விளைவிக்கப்படுகின்றன. நம் நாட்டின் நீர்வளம் சுரண்டப்பட்டு நிலங்கள் மலடாக மாறுகின்றன. "என் தட்டில் என்ன இருக்கவேண்டும் என நீ சொல்லாதேஎன்று கூச்சல் போடுபவர்களுக்கு இந்த இயற்கை சீர்கேடுகள் பற்றிய பார்வை உண்டா ? விலங்குகளுக்கான தானிய மற்றும் நீர் தேவை மிகவும் அதிகம். புவியில் இன்றும் மனிதர்கள் பட்டினியில் இறந்து கொண்டிருக்கிறார்கள். குடிக்க தண்ணீரின்றி ஐந்தாயிரம் மக்கள் தினமும் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீருக்காக அண்டை மாநிலங்களுடன் சண்டை போட்டுக்கொள்கிறோம்.

அத்தகைய நீர் எவ்வாறு விரயமாக்கப்படுகிறது என்ற மட்டும் இல்லை . 91% அமேசான் காடுகள் இந்த  விவசாயத்தால் அழிக்கப்பட்டது குறித்து தெளிவு நமக்கு இல்லை காடுகளை அழிப்பது மூலம் பல உயிரினங்கள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன.

ஒரு கிலோ தானியத்தில் ஐந்து மனிதர்கள் சாப்பிடமுடியம் ஆனால் ஒருவர் ஒரு கிலோ மாமிசம் சாப்பிடும் பொழுது முந்தய கணக்கின்படி சராசரியாக முப்பததைந்து மனிதனுக் தேவையான உணவை உண்டு விடுகிறான்.

இது மட்டுமன்றி இந்த மாமிசம் அனைத்துமே ஊக்க மருந்துகள் போன்ற விஷங்கள் கொடுக்கப்பட்டு வேக வேகமாக வளர்க்கப்படுகிறது. இரண்டு வருடத்தில் வளர வேண்டிய கோழி இரண்டே மாதத்தில் உருவாக்கப்படுகிறது. பன்றிகள் மூன்று வருடங்களுக்கு பதிலாக மூன்றே மாதத்தில் 300 கிலோ எடையை அடைகிறது. மாடுகள் ஆறே மாதத்தில் வளர்கின்றன. இவை அனைத்துமே செயற்கையான வளர்ச்சியே ஆகும். சதை வளர்வதை போல் எலும்புகளோ, எலும்பு மஜ்ஜையோ, மூளையோ உருவாவதில்லை. அதனால் தான் இந்த கோழிகள் நடக்க கூட முடியாமல் படுத்தே இருக்கும். எலும்பு மஜ்ஜையிலேயே நோய் எதிர்ப்பு சக்தி, சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், T- செல்ஸ் அனைத்தும் இருக்கும். இந்த செயற்கையான மாமிசத்தில் அவை எதுவும் இல்லாததால் அதை உண்பவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது. மேலும் இரண்டு வாரத்துக்கு ஒரு முறை நோயில் இருந்து காப்பாற்ற அவைகளுக்கு ஆண்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகின்றது. பதினைந்து நாள் ஒருவர் தொடர்ந்து இத்தகைய மாமிச உணவை உண்டால் இரண்டு ஆண்டிபயாடிக் ஊசி போட்டு கொண்டதற்கு சமமாகும். மாமிசம் உண்பதால் சத்துக்கள் கிடைக்கவில்லை, மாறாக பலவித இரசாயனங்களை அறியாமல் நாம் உடம்பில் சேர்த்து கொண்டிருக்கிறோம்.

 

நாம் அடிக்கடி பறவை காய்ச்சல், பன்றி காய்ச்சல் போன்றவை பரவுவதை பார்க்கிறோம். உடனே கூட்டம் கூட்டமாக இந்த உயிரினங்களை எரித்து புதைப்பார்கள். இந்த செயற்கையான உருவாக்கப்படும் விலங்குகளில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததாலேயே அதனுள் இந்த நோய் மிகவும் வேகமாக பரவுகிறது.

இது போதாதென்று கடல் வாழ் உயிரினங்களையும் மனிதன் விட்டு வைக்கவில்லை. இப்போதே 50% கடல் உயிரினங்கள் அழிந்து விட்டது. மீன் சாப்பிட்டால் புத்திசாலியாக இருக்கலாம் என்ற எண்ணம் நம்மிடையே உள்ளது. ஆனால் ஆய்வுகள் மீன்களில் காரீயம் மற்றும் பாதரசதுகள்கள் இருப்பதாக கூறுகிறது. கூடவே பிளாஸ்டிக் துகள்களும் காணப்படுகின்றதாம். இதனால் மீன் சாப்பிடுபவர்கள் புத்திசாலிகள் அல்லாமல் அறிவில் மந்தமானவர்களாகவே மாறுகிறார்கள்.

இந்த மாமிச உற்பத்தியில் மற்றொரு கொடுமை என்னவென்றால் அளவுக்கு அதிகமாக வெட்டப்படும் மாமிசத்தில் 50 சதவிகிதம் உபயோகம் இல்லாமல் வீணாக்கப்படுகிறது. குறிப்பாக வெளிநாடுகளில் இந்த மாமிசக்கழிவுகள் மலை போல் குவிந்திருப்பதை காணலாம். மெத்தப்படித்த மனிதன் இதனை சும்மா விடுவானா? இதிலிருந்தும் ஒரு பொருள் தயாரிக்கப்பட்டு நமக்கு வனஸ்பதி/டால்டாவாக திருப்பி அனுப்பப்படுகிறது. நம்பமுடியவில்லையா? ஆம், இந்த மாமிசக்கழிவுகள் மிகுந்த வெப்பத்தில் கொதிக்கவைக்கப்படும் பொழுது அதிலிருந்து பெறப்படும் கொழுப்பே வனஸ்பதி ஆகும். அது நம் நாட்டில் இறக்குமதி செய்யப்பட்டு பல பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. இதன் விலை மிகவும் மலிவாக இருப்பதால் நாம் சற்று சிந்திக்க வேன் ரூபாய்க்கு கடையில் கிடைக்கிறதென்றால் இதன் உற்ப ரூபாய்க்கு இருக்க வேண்டும். இது சாத்தியமா என் வேண்டும். வலைத்தளங்களில் மாமிச ழிவில் இருந்து இக்க நெய் தயாரிக்கப்படும் காணொளியை காண முடி பயன்பாடு நோய்களை அள்ளித்தரும் என்பதில் ஐயமில்லை. நோய்களுக்கு வனஸ்பதி பயன்பாடு முக்கிய காரணம் மருத்துவர்களே சொல்ல தொடங்கிவிட்டனர்.

 

நம்முடைய அசைவ உணவுத்தேவைக்காக பல லட்ட ஏக்கரில் சோயாவும் சோளமும் பயிரிடப்படுகிறது. காடுகளும் அதிலிருந்த விலங்குகளும் அழிக்கப்படுகின்றது. விவசாய நிலங்களிலும் தேவையில்லாமல் நஞ்சு தெளித்து இந்த பயிர்கள் வளர்க்கப்படுகின்றன. கடந்த இருபது வருடங்களில் காடுகள் 38%ல் இருந்து 11% ஆக குறைந்து போனது. இதன் விளைவு என்ன? சுற்றுசூழல் மாசடைந்து கரியமில வாயு 250ல் (PPM) இருந்து 400 (PPM) ஆக உயர்ந்துள்ளது. பூமிக்கு காய்ச்சல் வந்தது போல் புவி வெப்பமாகி கொண்டு இருக்கிறது. புவி வெப்பமாவதே அளவுக்கு மீறிய வறட்சிக்கும், வெள்ளத்திற்கும் காரணம். மழை பொய்த்து போவதற்கும் இதுவே காரணம். கடலின் அமிலத்தத்தன்மை அதிகரித்துள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இது பேரழிவின் தொடக்கமே. எனவே சிந்திக்க தொடங்க வேண்டும். நாம் உண்ணும் ஒவ்வொரு தட்டு மாமிச உணவும் நம் உடலை கெடுத்து நம் பூமியையும் சூடாக்கி கொண்டு இருக்கிறது என்ற புரிதலுடன் வாழ தொடங்குவோம்.

ஒருவர் ஒரு நாள் அசைவம் சாப்பிடமல் இருந்தால் 4163 லிட்டர் தண்ணீரை சேமிக்கலாம்.

30 சதுர அடி காட்டை காப்பாற்றலாம். 725 கிலோ தானியம் சேமிக்கலாம். 9 கிலோ கரியமில வாயுவில் இருந்து புவியை காக்கலாம்.


நான் மாமிசம் உண்பதில்லை . இதன் மூலம் வெப்பமாவதில் இருந்து காக்க 

என் கடமையை செய்கிறேன்

 

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

1: #blog-pager{clear:both;margin:30px auto;text-align:center; padding: 7px;} 2: .blog-pager {background: none;} 3: .displaypageNum a,.showpage a,.pagecurrent{padding: 5px 10px;margin-right:5px; color: #F4F4F4; background-color:#404042;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);} 4: .displaypageNum a:hover,.showpage a:hover, .pagecurrent{background:#EC8D04;text-decoration:none;color: #fff;} 5: #blog-pager .showpage, #blog-pager, .pagecurrent{font-weight:bold;color: #000;} 6: .showpageOf{display:none!important} 7: #blog-pager .pages{border:none;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);}