எலுமிச்சை வைத்தியம் How To Use Lemon Remedies To Desire
எலுமிச்சை வைத்தியம்
'பி' வைட்டமின் என்றும் பிளாவோ நாய்ட் என்றும் பெயரிட்டிருக்கிறார்கள். ரத்தக் குழாய் களை இது பலப்படுத்துகிறது. இரத்ததந்துகிகளையும் பலப்படுத்தி துரிதமாக வேலை செய் கிறது.
எலுமிச்சம் பழத்தை இரண்டாக அறுத்து பொட்டிலில் இலேசாகத் தேய்த்தால் தலைவலி போய்விடும்.
வார்னிஷ் அல்லது கீல் கறையைப் போக்க வேண்டுமானால் எலுமிச்சம் பழத்தோலை உரித்துத் தேய்க்கவேண்டும்.
எலுமிச்சையின் இலைகளை நீர் மோரிலிட்டும் குடிக்கலாம். காடியிலும் இதை சேர்க்கலாம். இதில் வைட்டமின் 'சி' இருக்கிறது.
வாயினுள் வரும் புண்களுக்கோ ஈறில் தோன் றும் புண்களுக்கோ எலுமிச்சம் பழச்சாறுடன் சமபங்கு நீர் சேர்த்து கொப்பளித்து வரவும்.
தேள், தேனீ கடி அல்லது . கொட்டுக்கு எலு மிச்சம்பழத்தை அறுத்து அதன் சாற்றை கடிவா யில் வைத்துக் தேய்க்க வேண்டும்.
துரு ஏறிய கறைகளைப் போக்க எலுமிச்சம் பழ ரசத்துடன் உப்பைக் கலந்து தேய்த்து நீரில் அலச வேண்டும்.
ஜலதோஷ நிவாரணி :
சீதோஷ்ண மாறுதல்களாலோ, புதிய இடங் களில் உள்ள நீரின் தன்மையாலோ, அமித உணவு உட்கொள்ளுவதாலோ, ஒரு வேலையும் இல்லாமல் இருப்பதினாலோகூட ஜலதோஷம் ஏற்படலாம். மனிதர்களை மிகவும் வருந்தச் செய்யும் நோய் இது ஜலதோஷத்தினால் பலருக்கு தொண்டையில் கரகரப்பு ஏற்படும். நாளடைவில் தொடர்ந்து நீடித்தால் பிராங்கைடிஸ்ஸாக மாறி நிமோனியா ஏற்படுவதுண்டு.
வெந்நீரில் எலுமிச்சம்பழ ரசத்தைக் கலந்து அடிக்கடி உட்கொள்ள வேண்டும். ஆரம்பத்தி லேயே எலுமிச்சம் பழரசம் உட்கொண்டு வந்தால் இவ்வியாதிகளைத் தடுத்து நிறுத்தி விடலாம்.
எலுமிச்சை வைத்தியம் How To Use Lemon Remedies To Desire
காக்காய் வலிப்புக்கு :
மலச்சிக்கலை நீக்கி லாகிரிப் பானங்களைத் தவிர்த்து அடிக்கடி வெந்நீரில் எலுமிச்சம்பழ ரசத்தைக் கலந்து, கொஞ்சமாகச் சர்க்கரை சேர்த்துக் குடித்து வரவேண்டும்.
கோழி முட்டையின் ஓடு நெல்லிக்காய் அளவு எடுத்து எலுமிச்சம்பழச்சாற்றில் நன்மூக அரைத்து இஞ்சிச்சாற்றைக் குழைத்து காலையிலும், மாலையிலும் சாப்பிட்டு வந்தால் ஈளை இருமல் நின்று விடும்.
எலுமிச்சம் பழச் சாற்றில் சிறிது உப்போ அல்லது சர்க்கரையோ கலந்து காலையிலும் பிற் பகலிலும் குடித்து வந்தால் ஈரல் கோளாறு, பித்தம், மலச்சிக்கல் முதலியவை தீரும்.
அதிமதுரம், சங்கன் வேர்பட்டை இரண்டும் வகைக்கு இரண்டு ரூபாய் எடை எடுத்து நன்றாக
இடித்துச் சூரணமாக்கி சுண்டைக்காயளவு எடுத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து சாப்பிட மஞ்சட் காமாலை மறையும்.
எலுமிச்சம் பழச்சாறு அரை அவுன்ஸ், பசுந் தயிர் அரை அவுன்ஸ், இளந்தென்னம் பூச்சாறு அரை அவுன்ஸ் ஒன்று சேர்த்து காலையிலும் மாலையிலும் கொடுக்க குழந்தைகட்கு கணையினால் ஏற்படும் நீர்ச்சுருக்கு போய்விடும்.
பேதி அதிகமாகி உடலின் ஊனீர் வெளியாகி விட்டவர்கள் பலவீனமாக இருப்பார்கள். குமட்ட லும் தாகமும் இருக்கும். இவர்களுக்கு எலுமிச்சம் பழரசம் கொடுக்க குணம் காணலாம்.
எலுமிச்சை இலையுடன், நாரத்தை, வில்வ இலை மகிழ இலை, கறிவேப்பிலை என்னும் இலைகளை நிழலில் உலர்த்தி இடித்து கருக்கு உமியுடன்
கலந்து சூரணம்போல் செய்து பல் தேய்த்து வந் தால் பல் சம்பந்தமான நோய்கள் அணுகாது.
சுரப்பிணியாளர்களுக்கு வாய் பிசுபிசுப்பாக இருக்கும். உமிழ்நீர் இராது. இவர்கள் எலுமிச்சம் பழத்துண்டை வாயிலிட்டு சாப்பிட்டுக் கொண் டிருக்கலாம்.
அம்மை வந்தவர்களுக்கு வறட்சியா இருக் கும் காலத்தில் கொதிநீரில் எலுமிச்சம் பழத்தைத் துண்டுகளாக நறுக்கி ஆறியபின் வடிகட்டி கொஞ்சங்கொஞ்சமாகக் கொடுக்கலாம்.
*
அபினை அதிமாகச் சாப்பிட்டு நஞ்சேறியவர் களுக்கு வாந்தி எடுக்கச் செய்தபின் எலுமிச்சம் பழச்சாறு கொடுக்கலாம்.
சொறி கரப்பான் போன்ற சருமவியாதியுள்ள வர்கள் பகல் நேரத்தில் தொடர்ந்து மூன்று அவுன்ஸ் எலுமிச்சம் பழச்சாறு குடித்து வரவேண் டும். மற்றவர்களுக்கு இது அணுகாதிருக்கும் பொருட்டு தற்காப்புக்காகவும் குடிக்கலாம்.
மயக்கம், வாந்தி, குமட்டலுக்கு சிறு எலுமிச் சம் பழத்துண்டோ அல்லது ஊறுகாயோ சாப்பிட லாம்.
கூந்தலில் உள்ள அழுக்கு, பேன், பொடுகு நீங்கி சுத்தமாக்க இப்பழத்தைப் பாதியாக நறுக்கி நன்றாகத் தலையில் தேய்த்து முழுகவும்.
உச்சந்தலையில் எலுமிச்சம்பழம் தேய்த்துக் குளித்தால் பித்த உபாதை நீங்கும்.
கையிலுள்ள சருமம் மிருதுவாக இருக்க வேண்டுமென்றால் எலுமிச்சம் பழச் சாறு எடுத்து பூசிக் கொள்ள வேண்டும்.
எலுமிச்சம் பழ ரசத்துடன் தேன் கலந்து உட்கொள்ள வாதநோய் தீரும்.
வெந்நீரில் எலுமிச்சம் பழ ரசம் கலந்து உட் கொண்டால் மூட்டு வலிகள் போகும்.
எலுமிச்சம் பழத்தை வெயிலில் வதக்கி அதன் ரசத்தைக் குடித்தால் கோடைக்காலத்தில் ஏற்படும் வயிற்று வலி தீரும்.
எலுமிச்சம் பழ ரசத்துடன் சிறிது உப்புப் பொடி கலந்து பல் துலக்கி வந்தால் பல் சுத்தமும் வலிவும் அடையும்.
வெது வெதுப்பான நீரில் எலுமிச்சம் பழ ரசத்தை காலை மாலை குடித்து வருவோர்க்கு காச நோய் ஏற்படாது.
வயிற்றிலுள்ள கிருமிகளை ஒழிப்பதற்கு அடிக் கடி எலுமிச்சம் பழ ரசம் பருகி குணமடையலாம்.
வயிற்றிலுள்ள வாயுவை அகற்ற எலுமிச்சை ரசத்துடன் மோர் சேர்த்துப் பருகலாம்.
கரப்பான், சொறி சிரங்கு உள்ளவர்கள் அடிக்கடி எலுமிச்சையின் ரசத்தை வெந்நீருடன் சேர்த்துப் பருகலாம்.
பசி தீபனம் உண்டாக வேண்டுமெனில் முன் னதாகவே எலுமிச்சம் பழ ரசம் உட்கொள்ள வேண்டும்.
கைக் கட்டை விரலுக்கு ஏற்படும் விரல் சுற்று நோய்க்கு எலுமிச்சம் பழத்தை விரலளவுக் குத் துளையிட்டு செருகி வைக்கவேண்டும்.
எலுமிச்சை இலையை நீர் மோரிலிட்டுக் குடிக்க தாகவிடாய் தீரும். பழச்சாறும் சேர்க்க லாம்.
வெந்நீரில் எலுமிச்சம் பழ ரசம் கலந்து சுத்த மான தேன் கலந்து நாள் தோறும் மூன்று வேளை கள் குடித்து வந்தால் தொண்டைவலி போய் விடும்.
ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து அதில் பாதியை சூடான காபியில் கலந்து சாப்பிட்டால் தலைவலி போய்விடும். காபியில் பால் பெயரளவுக் குத்தான் சேர்க்கவேண்டும்.
இதேமாதிரி தேநீரில் பால் குறைவாகவும் எலுமிச்சம்பழ ரசம் அதிகமாகவும் கலந்து பருக தலைவலி போய்விடும்.
வாய் நாற்றம் நீங்க எலுமிச்சம்பழ ரசத் துடன் இரண்டு அவுன்ஸ் பன்னீர் கலந்து கொப் பளித்தால் துர்நாற்றம் போய்விடும்.
மூன்று எலுமிச்சம் பழ ரசத்தை எடுத்து சரி சமமாக வெந்நீர் கலந்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து மூன்று வேளைகள் சாப்பிட மலச் சிக்கல் தீரும்.
எலுமிச்சம் பழத் தோலை நைய நசுக்கி நெற் றிப் பாகத்தில் பற்றுமாதிரி போட்டுக் கொண் டால் ஒற்றைத் தலைவலி போய்விடும்.
வாய்க் கசப்பைப் போக்க எலுமிச்சம் பழத் துண்டு எடுத்து உறிஞ்ச வேண்டும்.
பருத்தித் துணி, லினன் முதலிய ஆடைகளில் ஏறிய பழக் கறைகளை நீக்க எலுமிச்சம் பழ ரசத் தில் உப்பு கலந்து தேய்த்து நீரில் அலச வேண்டும்.
அலுமினியப் பொருள்கள் பளபளப்பாக இருக்க எலுமிச்சம் பழத் தோலால் தேய்க்க வேண்டும்.
மீன்கள் கவிச்சு வாடை ஏற்படாமலிருக்க இப்பழ ரசத்தை மீனின் மேல் பூசி குளிர்பதனப் பெட்டியில் வைக்கலாம்.
பழங்களின் மேல் ஏற்படும் கறுப்பை நீக்க தோல் பாகத்தில் லேசாக இப்பழ ரசத்தைப் பூசி வைக்கலாம்.
காகிதப் பையில் இப் பழச்சாற்றைப் பூசி அதன்மீது கிரீஸ் வைக்கலாம்.
ஈயம் பூசிய பாத்திரங்களைக் கழுவி உலர்த்திய பிறகு சற்று இலேசாகச்சூடாக்கியபின் எலுமிச்சம் பழத் தோலால் நன்றாகத் தேய்த்து வந்தால் பள பளப்பாக இருக்கும்.
எலுமிச்சம்பழத்தை இளநீரில் பிழிந்து சாப் பிட்டால் வயிற்றுக்கடுப்பு நீங்கும். எலுமிச்சம் பழத்தில் சர்க்கரை கலந்து பானமாகச் சாப்பிட் டாலும் வயிற்றுக்கடுப்பு நீங்கும்.
கபசுரம் உள்ளவர்கள் எலுமிச்சம்பழ ரசத்தை ஏராளமாகக் குடிக்க வேண்டும், கபக் கிருமிகளை அழிக்கும் சக்தி எலுமிச்சம்பழத்தில் இருக்கிறது.
இரண்டு அவுன்ஸ் தேன் எடுத்து அதற்குச் சம அளவாக எலுமிச்சம் பழச் சாறு கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க இருமல் பிணியகலும்.
எலுமிச்சம்பழ ரசத்தில் உலர்ந்த மிளகை ஊறவைத்து கொஞ்சம் சீரகமும் இந்துப்பும் கலந்து வெயிலில் வைத்து உலர்த்திச் சூரணம் செய்து காலையிலும் மாலையிலும் கொஞ்சம் சாப் பிட்டு வந்தால் பித்த உபாதைகள் நீங்கும்.
நல்லெண்ணெயில் மருவு இதழ்களைப் போட்டு காய்ச்சி இறக்கு. அதன்பின் ஒரு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து நன்றாகக் கலக்கு. தலைப் பாகத்தில் மயிர்க்கால்களில் படியும்படியாகத்தேய் சிறிது நேரம் ஊறிய பின் முடக்கத்தான் கீரையை அரைத்து தலைப்பாகத்தில் தேய்த்து முழுகு. மூன்று நாட்கள் இவ்விதம் செய்தால் பித்தத்தால் ஏற்பட்ட பொடுகு நீங்கும். உரோமம் உதிராது.
எலுமிச்சம் பழத் தோலினால் புறங்கை , உள்ளங்கை தேய்த்துக் குளிக்க கைகளில் உள்ள கரடு போகும். கைகள் மிருதுவாக விளங்கும்.
உலர்ந்த உப்பு எலுமிச்சை :
எலுமிச்சங் காய்களை துண்டுகளாக்கி ஒவ் வொரு துண்டிற்கும் அரை டீஸ்பூன் உப்பைச் சேர்த்து கண்ணாடிப் பாத்திரத்தில் வைக்கவும் சில தினங்களுக்குப்பின் வாழை இலைகளில் வைத்து உலர்த்தவும். உலர்ந்தபின் மீண்டும் ஜாடியில் வைத்து தேவையான காலங்களில் ஊறுகாயாக உபயோகிக்கலாம்.
எலுமிச்சை ஊறுகாய் ஐம்பது எலுமிச்சம் பழங்களை எடுத்துக் கொள். அவைகளை நன்றாகக் கழுவி ஒவ்வொரு பழத்தையும் நான்கு துண்டுகளாக நறுக்கவும். தேவையான உப்பு சேர்த்துக் கரைத்து கொதிக்க விடவும். ஒன்றரை பலம் இஞ்சி, ஆறு பலம் பூண்டு, கால்வீசை பச்சை மிளகாய் தனியாக எடுத்து வைக்கவும்.
பழம் மிருதுவாகும் வரை கொதித்தபின் மூன்று பொருட்களையும் பக்குவ முறையில் சேர்த்து மேலும் போதுமான அளவு உப்புக் கரைசலையும் சேர்த்துக்கொள். நன்றாகக் கலந்த பின்பு ஒரு ஜாடியில் வைத்து மர அகப்பையால் உபயோகித்து வரவும்.
உபயோதிக்க
சில வாலிபர்களுக்கு அடிக்கடி முகப்பரு உண்டாகும். அப்படிப்பட்டவர்கள் தொடர்ந்து நான்கு மாதங்கள் வரை எலுமிச்சம் பழ ரசம் உட்கொண்டு வந்தால் குணம் காணலாம். டாக் டர் ஜார்ஜ் ஈனாரிஸ் என்பார் பரிசோதணையில் இவ் வுண்மை கண்டறியப்பட்டது.
எலுமிச்சம் பழச் சாற்றுடன் நீர் சேர்த்து உட்கொள்ள உடலின் கருமை ஓரளவு மாறு வதுடன் தேகச் சாந்தி பெறும்.
நீர் வேட்கை மிகுதியாக உள்ள சுரப்பிணி யாளர்களுக்கு வெந்நீரில் எலுமிச்சம் பழச் சாறு சேர்த்துக் கொடுக்கலாம்.
தலைமுடியிலுள்ள பேன் ஈர்களை ஒழிக்க வேண்டுமானால் காட்டுச் சீரக விதையை எலுமிச் சம்பழச் சாறு எடுத்து அரைத்து தடவிக்கொள்ள வேண்டும்.
இரத்தக்கட்டு கரைய வேண்டுமாயின் எலுமிச் சம் பழச் சாற்றில் கரியபவளம் சேர்த்து கொதிக்க
வைத்து தேவையான இடத்தில் இளஞ் சூட்டோடு பற்று போடவேண்டும்.
ஒரு கோப்பை நீரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து அதில் சிறு அளவு சோடா உப்பு கலந்து குடிக்க வயிற்றுவலி தீரும்.
அம்மான் பச்சரிசி என்ற இலையை எடுத்து நன்றாக அரைக்க வேண்டும். இதில் ஒரி பெரிய எலுமிச்சம்பழச் சாறு எடுத்துப் பிழிய வேண்டும். இத்துடன் ஒரு தோப்பை நீராகாரம் சேர்த்து ஒரு அவுன்ஸ நல்லெண்ணெய் கலந்து காலையில் சாப் பிட்டுவர வெட்டைச் சூடு அகன்றுவிடும்.
இஞ்சியைக் கழுவி மேல் தோல் எடுத்துபில்லை களாக நறுக்கி உலர வைத்து விடவேண்டும். எலுமிச்சம்பழச் சாற்றில் தேவையான அளவு இந்துப்பு போட்டு இஞ்சித் துண்டுகளைக் கலந்து ஊறவைக்க வேண்டும். இவற்றை வெயிலில் உலர்த்தி கண்ணாடிக் குப்பியில் போட்டு காலை யில் கொஞ்சம் சாப்பிட்டு வர புளியேப்பம், பித்த வாந்தி, மயக்கம், வயிற்று உப்புசம், அசீரணம் அகலும்.
கருத்துகள் இல்லை