ocean waves




Breaking News

HELTH AND BEAUTY TIPS AND TO CREATE HEALTHY HUMAN BEINGS PLEASE FOLLOW THE OCEAN WAVES BLOGGER

பொறுப்பான பெற்றோரா நாம்? How To Improve At Parents

 

பொறுப்பான பெற்றோரா நாம்How To Improve At Parents 

 

 இன்றைய நவீன அவசர உலகத்தில் நான் பொறுப்பான குடிமகனாய் என்று கேட்டால் சற்று தயங்குவோம். ஆனால் நாம் அனைவரும் பொறுப்பு மிகுந்த பெற்றோராகவே கருதுகிறோம். என் அப்பா சென்னை கண்டுகொண்டதே இல்லை பத்தோடு பதினொன்றாக வளர்ந்தேன் ஆனால் இன்று எங்களுடைய பிள்ளைகளுக்காகவே ஓடி ஓடி உழைக்கிறோம். அவர்கள் கேட்டதையெல்லாம் பாசத்துடன் வாங்கி கொடுக்கிறோம். பெரிய வீடு வதிகள் அனைத்தும் செய்து கொடுத்திருக்கிறோம்.

 

பொறுப்பான பெற்றோரா நாம்? How To Improve At Parents

 இதுவே நாம் அனைவரும் மனதில் எண்ணிக்கொண்டிருப்பது. இது பொய்யும்அல்ல. ஆனால் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கிறார்களா நாம் விலை உயர்ந்த கால்சியம்நிறைந்த பற்பசைகளைவாங்கி கொடுக்கிறோம். ஆனால் அவர்கள் பற்களுக்கு நம்மைபோல் கரும்பை கடித்து உண்ணும் வலிமைஇருக்கிறதா நாம் இன்றும் அயராமல் உழைக்கிறோம். ஆனால் அவர்கள் சற்று தூரம் நடந்தாலே சோர்ந்து விடுகிறார்களே. ஏன், உன் வயதில் நாங்கள் எத்தனை வேலை செய்திருக்கிறோம் தெரியுமா என்று புலம்புகிறோம். ஆனால் இதன் காரணம் என்ன என்று சிந்திக்கவில்லை.

 

இன்று சிறிய குழந்தைகளுக்கு மலச்சிக்கல் முதன்மையான பிரச்சனையாக இருக்கிறது. முதியவர்களுக்கு வந்து கொண்டிருந்த மூலநோய்கள் இப்போது ஆறு வயது குழந்தைகளுக்கும் வந்து விட்டது என்றால் நம்ப முடிகிறதா? சரி, இதன் மூல காரணம் என்ன? நாம் குழந்தைகளுக்கு பாசமாக வாங்கி கொடுக்கும் பொருட்களைஆராய்வோம்.

 

அனைத்து குழந்தைகளுக்கும் மிகவும் பிரியமான விலை உயர்ந்த சாக்லேட் பிறந்த நாள் முதல் அனைத்து விஷயங்களுக்கும் சாக்லேட்டை வாங்கி குவிக்கிறோம். வெளிநாடு சென்று வரும் உறவினர்களும் கிலோ கணக்கில் சாக்லேட் வாங்கி வருகின்றனர். சரி, சாக்லேட் எப்படி தயாரிக்கப்படுகிறது என்று சற்று பார்ப்போம். சாக்லேட் தயாரிக்க தேவையான கோகோ பீன்ஸ் பூமத்திய ரேகை அருகில் அமைந்திருக்கும் ஒரு சில நாடுகளில் மட்டுமே பயிரிடப்படுகிறது. அது வளர தேவையான தட்ப வெட்ப நிலை அமைந்திருக்கும் அந்த இடங்களில் இருந்து தயாரிக்கப்பட்டு, உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கோகோ பீன்ஸ் வறுக்கப்பட்டு பின் நொதிக்கவைக்கப்படுகிறது. அப்பொழுது அதில் இருந்த மிகுந்த துர்நாற்றம் ஏற்படும். அதில் மாவு, சர்க்கரை மற்றும் மணமூட்டிகள் சேர்க்கப்பட்டவுடன் மிகுந்த நறுமண பொருளாக மாறிவிடும். இந்த நறுமணம் லட்சக்கணக்கான கரப்பான் பூச்சிகளை கவர்ந்து இழுக்கும்.

 

 சாக்லேட் தயாரிப்பு கலன்களில் விழுந்து கிடக்கும் இந்த கரப்பான் பூச்சிகளை முற்றிலுமாக வெளியேற்ற இயலாததால் உணவு ஆராய்ச்சி கழகம் 4% பூச்சிகளின் பாகம் இருப்பது ஏற்புடையது என அறிவித்தது. இதன் பொருள் என்னவென்றால் நாம் 100 கிராம் சாக்லேட் சாப்பிட்டால் அதில் 4 கிராம் கரப்பான் பூச்சியின் பாகங்கள் இருக்கும். இது குழந்தைகளுக்கு ஏற்படும் சுவாச பிரச்சனைகளுக்கு காரணமாகும். நாம் மருத்துவரை அணுகினால் அவர் உறிஞ்சி/இன்ஹேலர் பரிந்துரைப்பார். இதில் இருப்பதும் கேடு விளைவிக்கும் ஊக்க மருந்துகளே அன்றி வேறு இல்லை.

 

குழந்தைகள் பருமன் ஆவதற்கும் இது ஒரு காரணமாகும். சாக்லேட்டில் இருப்பது பால், மைதா, முட்டை, டால்டா மற்றும் சர்க்கரை. இவை அனைத்தும் தீது விளைவிக்கும் பொருட்களின் கூட்டணி போல தெரியவில்லையா? இது மட்டும் அல்லாமல் சிறிய வயதிலிருந்து அதிக இனிப்புடைய சாக்லேட் உண்ணும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமாக வீட்டில் தயாரிக்கும் கடலை உருண்டையும் எள் உருண்டையும் கசக்கத்தான் செய்யும்.

குழந்தைகள் அடுத்து விரும்பி உண்பது, அப்பா அம்மா தேவையின்றி இரண்டு நிமிடத்தில் தயாராகும் நூடுல்ஸ். இதில் என்ன இருக்கிறது என்று ஆராய்ந்தால் முதன்மை பொருள் வெள்ளை விஷமான மைதா. கோதுமையில் இருக்கும் சிறிய அளவிலான நார்ச்சத்தையும் நீக்கி, அலொக்சான் (Alloxon) என்ற வேதிப்பொருள் சேர்த்து வெண்மை படுத்தப்படுவதே மைதா. இந்த வேதி பொருள் நேரடியாக நமது கணையத்தை பாதிக்கக்கூடியது. முதியோர்களுக்கு வந்து கொண்டிருந்த நீரிழிவு நோய் குழந்தைகளுக்கு வர மைதா ஒரு முக்கிய காரணமாகும்.

 

அது மட்டுமன்றி கெட்டுப்போகாமல் இருப்பதற்காகவும், மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டுவதற்காகவும் சேர்க்கப்படும் வேதி பொருட்களால் பலவித நோய்கள் உருவாகின்றன. செய்வதற்கு சுலபமாக இருப்பதாலும் சுவையாக தோன்றுவதாலும் இத்தகைய பொருட்களை நாடி செல்கிறோம். நாம் அறியாமலே இவ்வாறு நமது குழந்தைகளை நீரிழிவு நோயாளி ஆக்குகிறோம்.அடுத்தகாக நாம் ஆரோக்கியம் என எண்ணி குழந்தைகளுக்கு வாங்கி கொடுப்பது பாக்கெட்டில் வரும் உடனடி பழச்சாறுகள். பழச்சாறு என்ற பெயரில் மிகுதியான சர்க்கரையை தான் நாம் கொடுக்கிறோம்.

 

தொலைக் காட்சியில் வரும் விளம்பரங்கள் மூலம் ஹார்லிக்ஸ், காம்பிளான் போன்ற ஊக்க பானங்கள் நம் குழந்தைகளை பலசாலிகளாகவும், புத்திசாலிகளாகவும் மாற்றும் என்று கனவு காண்கிறோம். ஆனால் ராகி தினையிலும் இருக்கும் ஊட்டச்சத்து நமக்கு தெரியவில்லை.ஆனால் ராகியிலும்,அதன் பின்னர் நமக்கு சத்தான உணவாக தோன்றுவJ. முட்டை. இன்று முட்டையும் தயாரிக்க பட்டுத்தான் பண்ணையில் ஊசி மூலம் உருவாக்கப்பட்டு பின் கோழிகளுக்க சிறிய மின் அதிர்ச்சி கொடுக்கப்படுகிறது. அந்த அதிர்வின் மூலம் முட்டை வெளிவருகிறது.

 

கோழிக்கு முட்டை போட்ட உணர்வு கூட ஏற்படுவதில்லை. கோழிக்கு வேகமாக வளர்வதற்காக கொடுக்கப்பட்ட ஊக்க மருந்துகள் மற்றும் ஆண்டிபயாடிக் மருந்தின் தாக்கம் முட்டையில் இருக்கும் என்பதில் ஐயமில்லை . இயற்கைக்கு முரணமாக விளைவிக்கப்படும் அனைத்துமே நன்மை விளைவிக்காது. இந்த முட்டை மிகுந்தஆரோக்கியம் நிறைந்தாக அரசாங்கம் மூலமே விளம்பரப்படுத்தப்படுவது அறிவீனத்தின் உச்சம்.

 

நாம் பாசம் மிகுதியால் வாங்கி கொடுக்கும் கைபேசிகள் அவர்களின் கண்களை கெடுப்பதை உணர்ந்தாலும் தடுக்க வழியின்றி இருக்கிறோம். இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப கணவன் மனைவி இருவரும் பணிக்கு செல்வதால் உணவுகளையும், உடனடி உணவுகளையும் நம் இல்லத்த சமைக்கும் உணவுக்கு மாற்றாக கருதினால் நமது குழ நோயாளிகளாக மாறுவதில் ஐயம் இல்லை .

 

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆழந்த உறக்கம் அவசியம். ஆழந்த உறக்கம் வேண்டுமானால் இருண்ட அறை அவசியம். தொலைக்காட்சி மற்றும் கைபேசிகளை அருகில் வைத்து கொண்டு உறங்கும் பொழுது அத்தகைய ஆழ்ந்த உறக்கம் கிடைப்பதில்லை. ஆழ்ந்த உறக்கத்தின் பொழுது தான் செரோடோனின் என்ற ஹார்மோன் சுரக்கும். இதுவே நமது உடம்பின் நோய் எதிர்ப்பு சக்திக்கு இன்றியமையாதது ஆகும். இரவில் கண்விழித்து படிப்பதால் புத்திசாலி ஆவதற்கு பதிலாக நமது குழந்தைகள் நோயாளிகயளாக மட்டுமே மாறுவர்.

உடனடி பழச்சாறுகளை போலவே குழந்தைகள் பெரும்பாலும் விரும்பி உண்ணும் ஜாம் வகைகளில் எந்த பழங்களும் சத்துக்களும் இல்லை . பதிலாக மிதமிஞ்சிய சர்க்கரை மட்டுமே உள்ளது. எனவே கூடிய மட்டும் நாமே நமது இல்லத்தில் தயாரிக்கும் உணவுகளையே குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். சிறிய குழந்தைகளை மாற்றுவது எளிது. சற்று பெரிய குழந்தைகளாக இருந்தால் அவர்களுக்கு இதனால் விளையும் தீமைகளை எடுத்து சொல்லி புரிய வைக்கலாம். ராக்கெட் ஆராய்ச்சி செய்வதை விட நம் சாப்பிடும் தட்டில் என்ன இருக்கிறது, அது எப்படி தயாரிக்கப்படுகிறது என புரிந்து கொள்வது மிகவும் அவசியமானது.

 

 

 

கருத்துகள் இல்லை

1: #blog-pager{clear:both;margin:30px auto;text-align:center; padding: 7px;} 2: .blog-pager {background: none;} 3: .displaypageNum a,.showpage a,.pagecurrent{padding: 5px 10px;margin-right:5px; color: #F4F4F4; background-color:#404042;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);} 4: .displaypageNum a:hover,.showpage a:hover, .pagecurrent{background:#EC8D04;text-decoration:none;color: #fff;} 5: #blog-pager .showpage, #blog-pager, .pagecurrent{font-weight:bold;color: #000;} 6: .showpageOf{display:none!important} 7: #blog-pager .pages{border:none;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);}