தினசரி உணவில் உண்ணும் சுவைகளின் குணங்கள்: How To Use The Properties Of Tastes In Food
தினசரி உணவில் உண்ணும் சுவைகளின் குணங்கள்:
1. இனிப்புச் சுவை - அளவுடன் உட்கொண்டால் ...
அ. இது உடலில் தசையைப் பலப்படுத்தி ஒழுங்குப்படுத்தும். உடல் உறுப்புகள் அனைத்தையும் பலப்படுத்தும், தாய்ப்பால் பெருகும். வாத, பித்த நோய்கள் எளிதில் நீங்கும். உடல் உள்ளுறுப்புகளுக்கு வழுவழுப்பும், இயக்கமும் தரும்.
ஆ. இச்சுவை அதிகமான உண்டால், கொழுப்பு அதிகமாகும். கப
நோய்கள், உடற்பருமன் பெருகும். பசியின்மை , நீரழிவு ஆகியன உண்டாகும்.
2. புளிப்புச்சுவை - அளவுடன் உட்கொண்டால்
அ. இது உடலில் கொழுப்பைப் பலப்படுத்தி ஒழுங்குப்படுத்தும். பித்தம் அதிகமாகும், இதயம் பலப்படும், மலம் கழியும், கண் பார்வை பெறும், வாயுவை வெளிப்படுத்தும்.
ஆ. இச்சுவை அதிகமாக உட்கொண்டால்: தசைச் தளர்ச்சி, நரம்புத் தளர்ச்சி, இரத்தம் கேடுறும், உடலில் புண், கொப்பளங்கள் காணும், பாண்டு, கண்நோய் உண்டாகும்.
3. உப்புச் சுவை-அளவுடன் உட்கொண்டால்
அ. இது எலும்பை பலப்படுத்தி ஒழுங்குப்படுத்தும். வறட்சி உண்டாகும். பசி, வியர்வையைத் தரும். உடலில் துர்மாமிச வளர்ச்சிகளை நீக்கும். மலச்சிக்கல் நீங்கும்.
ஆ. இச்சுவையை அதிகமாக உட்கொண்டால்.. தலைமயிர் உதிரும், மயிர் நரைக்கும், தோலில் சுருக்கம் உண்டாகும். புண், நாவறட்சி தோல்நோய் உண்டாகி உடல் பலம் நாளுக்கு நாள் குறையும்.
4. கசப்புச் சுவை- அளவுடன் உட்கொண்டால்
அ. இது நரம்பை பலப்படுத்தி ஒழுங்குப்படுத்தும், பசியின்மை , பித்த கப நோய்கள், குடற்புழுக்கள், தோல் நோய்கள், நாட்பட்ட நச்சுத் தன்மை, உமிழ்நீர் பெருகல் ஆகியன உண்டாகும். கொழுப்பு, உடற்சூடு, மலம் -சிறு நீரின் மிகுதி ஆகியன குறைக்கும். தாயப்பாலைச் சுத்தமடையச் செய்யும். அறிவை வளர்க்கும்.
ஆ. இச்சுவையை அதிகமாக உட்கொண்டால்... வாயுப்பிணிகளும், உடல் உறுப்புக்கள் அனைத்தும் பாதிக்கப்படும்.
5. எரிப்புச் சுவை- அளவுடன் உட்கொண்டால்..
அ. உடலிலுள்ள நீர்ச் சுரப்பிகளை தூண்டி ஒழுங்குப்படுத்தக் கூடியது. தோல் நோய், அசீரணம், மந்தம் வாயுக்கோளாறு, உடலில் அளவுக்கு அதிகமான கொழுப்பு, சோகை எனும் உடல் நீர் வீக்கம், புண்கள் ஆகியன நீங்கி உடலைச் சுத்தப்படுத்தும்.
ஆ. இச்சுவையை அதிகமாக உட்கொண்டால்.. நாவறட்சி, விந்துச் சக்திக் குறைவு உண்டாகி உடல் வலிமை குறையும், இடுப்பு முதுகில் வலியைத் தரும்.
6. துவர்ப்புச் சுவை : அளவுடன் உண்டால் ..
அ. உடலில் இரத்தத்தை மேம்படுத்தி ஒழுங்குப்படுத்தக் கூடியது. மலம் நீர் இவற்றை ஒழுங்குப்படுத்தும். பித்த நோய், புண்கள், ஆகியன நீங்கும். தோலைப் பதமாக்கும்.
ஆ. இச்சுவையை அதிகமாக உட்கொண்டால்.. மந்தம், அசீரணம், வாயுப்பிணிகள் ஆகியன உண்டாகும். உடலிலுள்ள உறுப்புக்களை வறட்சியடையச் செய்யும்.
"உணவே மருந்து, மருந்தே உணவு” மேற்கூறிய ஆறு சுவைகளையும் முறையாக அளவுடன் உட்கொண்டால், உடல் பலம் பெற்று நோய் நீங்கி வராது வாழ முடியும். இச்சுவைகளில் ஏதேனும்
ஒன்று கூடினாலோ, குறைந்தாலோ உடல் நோய்ப்படும். நாம் உண்ணும் எல்லா உணவுகளும் இந்த ஆறுவித சுவைகளில் அடங்கும். அது சைவமானாலும், அசைவமானாலும் சரி, இந்த ஆறுவித சுவைகளும் ஒவ்வொரு காலத்திற்கு கூட்டியும், குறைத்தும் மேலும் ஒவ்வொரு உடல்நிலைக்கு தக்க கூட்டியும், குறைத்தும் சரி வர சமைத்து உண்பதே சரியான உணவாகும். அவ்வாறு சமைத்து வழிகாட்டித் தருபவரே நம் தாய் தந்தை, மூதாதையார் ஆவர்.
கருத்துகள் இல்லை