தினசரி நாம் உண்ணும் அடுப்படி உணவிலுள்ள சில மூலிகைகளின் குணங்கள்
1. சீரகம் :
வயிற்றுப்புண்கள், வாயுக் கோளாறு, பித்த மயக்கம், பித்தச் சூடு, சுவையின்மை, பசியின்மை இவைகளை நீக்குவதுடன் இவைகள் வராது காக்க உதவுகிறது.
2. மஞ்சள் :
சளி, இருமல், வயிற்றுப்புண், ஈரல் நோய்கள், மேக நோய், இரத்தச் சோகை முதலியவைகளை நீக்குவதுடன் மற்ற நோய்களும் வராது காக்கிறது.
3. வெந்தயம்:
காமாலை, பாண்டு, மேக நோய்கள், நீரழிவு, கருப்பை நோய்கள், நீர் எரிச்சல், உட்சூடு, வயிற்றுப்புண் ஆகிய நோய்களை நீக்குகிறது.
4. மிளகு:
கப நோய்களான சளி, இருமல், சுரம், தொண்டைக்கட்டு, விஷக்கடி, விஷத்தன்மை, வாத சம்பந்தப்பட்ட நோய்கள், பசியின்மை, வாயுப்பிணிகள் ஆகிய நோய்களை நீக்குவதுடன் உடலை காக்கிறது. உடலுக்கு உஷ்ணத்தைத் தருகிறது.
5. கொத்தமல்லி:
உடலிலுள்ள நச்சுத்தன்மை, பித்த மயக்கம், சுவையின்மை, அஜீரணம், வாயுப்பிணிகள், வயிற்றுப்புண், வாந்தி முதலிய நோய்களை நீக்குவதுடன் வராது காக்கிறது.
6. சுக்கு :
வாதநோய்கள், வயிற்றுப்புண், மலச்சிக்கல், வாயுப்பிணிகள், அஜீரணம் ஆகிய நோய்களை நீக்குவதுடன் வராது காக்கிறது. -
7. வெங்காயம்:
இருமல், சளி, இளைப்பு, உடல் பலவீனம், ஆசனவாய்ப்புண், தலைவலி, வயிற்றுப்பிணிகள், உடற்பருமன்களை ஆகிய நோய்கள் நீங்குவதுடன் வராது காக்கிறது.
8. பூண்டு :
உடற்பருமன், வாயுப்பிணிகள், தலைவலி, கருப்பை நோய்கள், சுரம், சளி, இருமல் நோய்கள், அசீரணம் ஆகிய நோய்களை நீங்கி உடலை மேம்படுத்தும். உடலில் பித்தத்தை அதிகரிக்கும்.
9. கடுகு:
உணவு, உடலிலுள்ள நச்சுத்தன்மை, மந்தம், சோர்வு, வாதப்பிணிகள், அடிவயிற்று நோய்கள் ஆகியன நீங்கி உடலுக்குச் சுறுசுறுப்பைத் தரும்.
10. கறிவேப்பிலை:
பசியின்மை , ருசியின்மை , அசீரணம், வாயுப்பிணிகள், வயிற்றுப்புண், பேதி, வாந்தி, பித்தப் படபடப்பு, மேக நோய்கள் ஆகியன நீங்குவதுடன் உடலுக்குப் பலத்தையும் தருகிறது.
11. பெருங்காயம்:
கருப்பை நோய்கள், வாயுப்பிணிகள், வயிற்றுப்புண், மலச்சிக்கல், வாதநோய்கள், உடலிலுள்ள நச்சுத்தன்மை, ஆகிய நோய்கள் நீங்குகிறது. வராமலும் காக்கிறது.
12. புளி:
மலச்சிக்கல், ஈரல் நோய்கள், சோகை, மூல நோய்கள், கட்டி, உடற்பருமன், அசீரணம், சுவையின்மை ஆகியன நீங்கி உடலை மேம்படுத்தும்.
மேற்கூறிய அடுப்படி மூலிகைகள் யாவும், நாம் தினசரி உண்ணுகிற வகையாகும். வாத, பித்த கப எனும் முக்குற்றத்தின் நோய்களையும் வராது காக்கும் உன்னதப் பொருட்கள். வெறும் வயிற்றை மட்டும் நிரப்ப அவைகளை உண்ண முன்னோர்கள் அறிவுறுத்தியதில்லை. உடலில் நோய் வராமல் காத்து உடலை மேம்படுத்தும் ஒரு உன்னத முறையை அவர்கள் கூறியுள்ளனர். இதைத் தான் சித்தர்கள் "உணவே மருந்து: மருந்தே உணவு” என்ற அடிப்படை மந்திரமாக இவ்வுலகுக்குப் போதித்துள்ளனர். நாமும் அதனை அறிந்து முறைப்படி உண்ணுவோம். நோயின்றி வாழ்வோம்.
https://www.youtube.com/channel/UCss41xLNuQxcxr4JXClbkCw?view_as=subscriber
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக