வெற்றிலை பாக்குப் போடுதல் (தாம்பூலம் தரித்தல்) How To Use BETEL LEAVES , areca-nut (thampoola)
வெற்றிலை பாக்குப் போடுதல் நகர்ப்புறங்களை காட்டிலும், கிராமப்புறங்களில் அதிகம் மேற்கொண்டு வருவது அறிந்ததாகும். இது ஒரு காயகற்பமாகும். முறையாகத் தரித்தால் உடலை நோய் நிலையிலிருந்து காத்து உடலை மேம்படுத்தும் ஒரு மருந்தாகும். பொடி மற்றும் புகையிலையைத் தவிர்த்துக் கீழ்க்கண்டவாறு மேற்கொள்ள வேண்டும்.
ஒரு நாளைக்கு மூன்று வேளை தாம்பூலம் தரிக்க மிக நல்லது.
Betel leaves ,areca-nut (thampoola) ..
காலை...
வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பில் காலையில் வெற்றிலையை அதிகமாகப் போடுதல் வேண்டும். நடுநரம்பு நீக்கி பயன்படுத்த வேண்டும். காலையில் வெற்றிலையை அதிகமாக போடும் போது நெஞ்சிலுள்ள கபம் போகும். பசி அதிகப்பட்டு மந்தம் விலகும். உடலிலுள்ள நச்சுத் தன்மை விலகும். மலச்சிக்கல் உள்ளவர்களை சிறிது பாக்கை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
மதியம்...|
சுண்ணாம்பைச் சிறிது அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் சீரணம் எளிதில் நடைபெறும், வாயு விலகும். உணவின் நச்சுத் தன்மையும் நீங்கும். வயிற்றுப்புண் வராது காக்கும்.
மாலை (அல்லது) இரவு ...
பாக்கைச் சற்று அதிகமாகப் போடுதல் வேண்டும். காரணம் மலம் காலையில் எளிதில் கழியும். இரத்த விருத்தி ஏற்படும்.
1. வெற்றிலை பாக்கு சுண்ணாம்புடன் கிராம்பு, இலவங்கப்பட்டை, சீரகம், ஏலம், இலவங்கப்பத்திரி, சாதிபத்திரி, ஏதாவது ஒன்று சேர்த்தும் போடலாம். அங்கனம் செய்தால் மணம் உண்டாகும். உடல்வன்மை பெறும், வாயுப்பிணிகள் வராது. கருப்பட்டி சிறிது சேர்த்து, உண்ணும் போது தொண்டை நோய்கள், வயிற்றுப்புண் குணமாக ஏதுவாகும்.
2. தாம்பூலம் தரித்தப் பின் கூடுமானவரை முதல், இரண்டாம் மூன்றாம் முறை வாயில் தோன்றும் நீரை உமிழ்ந்து விட வேண்டும். அதற்குப் பின் தோன்றும் உமிழ்நீரை உட்கொள்ளுதல் நல்லது.
3. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் போடலாம்.
போட்டபின்பு வாயை நன்கு அலம்பி விட வேண்டும்.
4. பல்ஈறு ஜலதோட மற்றும் கபப்பிணிகள், சீரணக்கோளாறு, உணவின் நச்சுத் தன்மை, வாய்ப்புண், நாப்புண், வாய்நாற்றம் ஆகியன விலகும்.
5. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 6 தடவை தாம்பூலம் தரிக்கலாம். அடிக்கடி, முறைதவறி உட்கொள்ளுவதை தவிர்க்கவும்.
6. வழக்கில் அவரவர் இடங்களில் கிடைக்கும் சிறு வெற்றிலை
(ஆத்தூர் (அ) கற்பூர வெற்றிலை) சாயம் ஏற்றப்படாத களிப்பாக்கு, நீற்றிய சுண்ணாம்பு பயன்படுத்துவது நல்லது.
7. வாயில் வெற்றிலை பாக்கை வெகுநேரம் ஒதுக்கி வைத்தல் கூடாது.
8. உமிழ்நீர் அவிழ்தம் போன்றது. எனவே அடிக்கடி துப்பி விரையம் செய்யாமல் முறையுடன் உட்கொள்ளலாம்.
எனவே முறையாக இதை மேற்கொண்டு நோயில்லா வாழ்வுக்கு வழிகாண வேண்டும்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக