உடல் ஆரோக்கியத்திற்கான
வழிமுறைகள் How
to Explain Physical Health to Your kids
நல்ல உணவு, நல்ல உறக்கம், மன அமைதி, நல்ல சுற்றுச் சூழல் இவை எல்லாம் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது என்பது மறுக்க முடியாது. இது போல் தினசரி உடலிலுள்ள அழுக்குகளைப் போக்க, உடல் சூட்டைக் குறைக்க நாம் குளிக்கிறோம். இது ஒரு புறம் உடலுக்கு வெளியே நிகழ்ந்தாலும் உடல் உள்ளே உள்ள அழுக்குகளை நீக்கி வெளியேற்றுவதும் மிக மிக முக்கியம், உடலிலுள்ளே அழுக்குகள் தான் பல நோய்களுக்குக் காரணமாகின்றது. அதனாலே தான் முன்னோர்களும், பாரம்பரிய மருத்துவமும் வாந்தி, பேதியை மேற்கொள்ள அறிவுறுத்துகிறது. வாந்தி, பேதி உடலுள்ள அழுக்குகளை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு கொள்கிறது என்றும் வலியுறுத்துகிறது. இதனாலே ஆரோக்கியம் காக்கப்படுகிறது என்றும் கூறுகிறது.
நாம் குடியிருக்கும் வீட்டைக் கூட வாரம் ஒருமுறையாவது கழுவி சுத்தம் செய்கிறோம். நம் வீட்டுக் குப்பைத் தொட்டியைக் கூட இரு தினங்களுக்கு ஒரு முறையாவது சுத்தம் செய்கிறோம். அதே சமயத்தில் எல்லா உணவுகளையும் ஏற்றுக் கொள்கிற இந்த உடலை, உடலின் உள் உறுப்புகளை யாராவது சுத்தம் செய்கிறார்களா? என்பது சந்தேகம். எவ்வாறு? எப்படி? உடலின் உள் உறுப்புகளை சுத்தம் செய்யலாம்? என்பதை இப்போது காண்போம்.
1) வாந்தி - ஆறுமாதத்திற்கு ஒரு முறையும்
2) பேதி - நான்கு மாதத்திற்கு ஒரு முறையும்
3) பட்டினி - 15 தினங்களுக்கு ஒருமுறையும் மேற்கொள்ளல்
வேண்டும்.
1) வாந்தி செய்வித்தல்:
வாந்திக்கு ஆறுமாதத்திற்கு ஒரு முறை மருந்து எடுத்தல் நல்லது. இதனால் உடலில் அதிகப்பட்ட, பித்தம், தலைச்சுற்று, மயக்கம், அசீரணம், தூக்கமின்மை கண் எரிச்சல், தோற்பிணிகள் முதலிய நோய்கள் நீங்குவதுடன் உடலுக்கு மிகமிக நல்ல சுறுசுறுப்பைத் தரும். உடலின் வயிற்றுப்பகுதி, மார்புப்பகுதி, சிரசு ஆகிய பகுதிகளிலுள்ள அசுத்தங்கள் நீங்க வாந்தி வழி காணும். எளிய முறைப்படி வாந்தியை ஏற்படுத்த, வெந்தயப்பொடி, காயப் பொடி, அகத்திக் கீரைச்சாறு, வேப்பிலைச் சாறு, குப்பைமேனி இலைச்சாறு, பாகற்காய் சாறு முதலியவற்றுள் ஏதாவது
ஒன்றை அதிகாலையில் நன்கு தூங்கி எழுந்து உடலுக்குத் தக்கபடி ஆண், பெண் இரு பாலரும் மேற்கொள்ளலாம். சிறு குழந்தைகள், வெகுநாட்கள் நோயால் அவதியுற்றோர்கள், கர்ப்பிணியோர் ஆகியோர் தவிர்த்தல் நல்லது. சில பேர் தினசரி காலையில் தொண்டையை உறுத்தி பற்கள் துலக்கையில் வாந்தி செய்வர். இது தவறு முறையான வாந்தியே மன அமைதியைத் தரும்.
(2) பேதி செய்வித்தல்
நான்கு மாதத்திற்கு ஒரு முறை பேதி செய்வித்தல் நல்லது. இதன் மூலம் வாத, வாயு, சம்பந்தப்பட்ட பிணிகள், பொருத்துவலி, விஷக்கடி, மலச்சிக்கல், ஆசனவாய்ப் பிணிகள், வயிற்றுப்பிணிகள் ஆகியன தீருவதுடன் உடலை மேம்படுத்தவும் செய்யும். பேதி மூலம் உணவுக்குழாய் பகுதிகள், வயிற்றின் கீழ்ப்பகுதி முதல் கால்கள் எங்கும் உள்ள உடலிலுள் அசுத்தங்கள் நீங்க வழிகாணும். அகத்திக்கீரைச்சாறு, பப்பாளி விதை குப்பைமேனிச் சாறு, விளக்கெண்ணய் இவைகள் சாதாரணமாக வழக்கில் பேதியை வரவழைக்க உடல்நிலை, அறிந்து மேற்கொள்ளலாம். நாட்பட்ட வயிற்றுப்பிணியுடையோர், கர்ப்பிணி, வயது முதிர்ந்தவர்கள் பேதியை மேற்கொள்ளல் ஆகாது. சிலர் வாந்திக்கும் பேதிக்கும் சேர்த்து மருந்து உட்கொள்வர். இது நல்லதாகும். தனித்தனியாக மேற்கொண்டால் மிக உத்தமமாகும்.
3. பட்டினி இருத்தல்
"லங்கணம் பரம மருந்து” என்பது முன்னோரின் வாக்கு. பட்டினியை முறைப்படி கடைப்பிடிப்பதன் மூலம் பல தீராத நோய்களை தீர்க்கவும், நோய்வராது காக்கவும், உடல் அசுத்தங்களை நீங்கி மேம்படுத்தவும் உதவும். ஒரு உன்னத வீட்டு மருத்துவக் கலை பட்டினியாகும். வாரம் ஒரு முறை, மாதமிருமுறை என நாம் நோயில்லாத போதும் இதனை மேற்கொள்ளலாம். பல பேர் அமாவாசை, பௌர்ணமி மற்றும் விசேட திதி நாட்களில் மேற்கொள்வர். முறையற்ற பட்டினி நரம்புத் தளர்ச்சியை உண்டு பண்ணும். உடலின் உள் உள்ள உறுப்புகளுக்கு சற்று ஓய்வு கொடுப்பது போல பட்டினி மேற்கொள்ள வேண்டும். முந்தைய நாள் இரவு நன்கு தூங்கி, காலையில் சரி வர மலம், நீர் கழித்து, சூரியன் மறையும் வரை கடைபிடிக்க வேண்டும். சில பேர், நீர், பழம், பால் ஆகியன உண்ணுவர். இது உடல் நிலைக்குத் தக்கபடி உளர்ணலாம். ஆனால் பொதுவாக எதுவும் உண்ணக்கூடாது. பட்டினி இருந்து உடனடியாக அதிகப்பட்ட உணவுகளையும் உண்ணாமல் எளிதில் சீரணமாகும் நீர் ஆதார உணவுகளை உண்ண வேண்டும். உடலிலுள்ள அசுத்தம் நீங்குவதுடன், கொழுப்பு, சர்க்கரை ஆகியன ஒழுங்குப்படும்.
வாந்தி, பேதி, பட்டினி இருக்கும் போது கடைபிடிக்க வேண்டிய சில விதிமுறைகள்:
1) முந்தைய நாள் இரவு நல் உறக்கம் இருத்தல் வேண்டும். எளிதில் சீரணமாகும் உணவுகளை உண்டு காலையில் சூரிய விடியலுக்கு முன் எழல் வேண்டும்.
2.கூடிய மட்டும் வாந்தி, பேதி, பட்டினி நாட்களில் அதிக உடல் கடின உழைப்பின்றி, ஒய்விருத்தல் நல்லது. அன்றைய தினமும் இலகுவான உணவுகளை உண்ணல் வேண்டும். இரவு நன்கு ஓய்வு எடுக்க வேண்டும்.
3.முறைப்படி எடுக்க ஒருமுறை அருகிலுள்ள சித்த மருத்துவரை கலந்து ஆலோசனை பெறலாம்.
4) எளிய வீட்டு மருந்துகளால் வாந்தி, பேதி, நிகழவில்லை என்றால் அதற்குரிய மருந்துகளை மருத்துவர் மூலம் வாங்கி உண்ணலாம்.
5) அடிக்கடி வாந்தி, பேதி செய்வித்தல் கூடாது.
6) உடலை மிக பலவந்தமாக, பலகீனப்படுத்தும் பொருட்டும் வாந்தி, பேதி மருந்துகளை உட்கொள்ளக் கூடாது. உட்கொள்ளும் போது உடல்நிலைக்குத் தக்கவாறு உட்கொண்டு கடைப் பிடிக்க வேண்டும்.
7) அளவு கடந்து வாந்தியோ, பேதியோ மேற்கொண்டால் அதற்குரிய மாற்று மருந்துகளையும் அறிந்து வைத்திருத்தல் வேண்டும்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக