எண்ணெய்க் குளியல் How Oil Bath Can Help You Improve Your Health.

எண்ணெய்க் குளியல் How Oil Bath Can Help You Improve Your Health.

இந்தியாவின் பாரம்பரிய வாழ்வியல் பண்பாட்டை மையமாகக் கொண்ட மருத்துவக் கலைகளுள் ஒன்று எண்ணெய்க் குளியல் ஆகும். நோய்க்கும், நோயில்லா வாழ்வதற்கும் முக்கியமான இதனை விரிவாகக் காண்போம்

எண்ணெய்க் குளியல் How Oil Bath Can Help You Improve Your Health.

எண்ணெய்க்குளியல் எடுக்கும் முறை

உடல் முழுவதும் பாதம் தொட்டு சிரசு வரையிலும் எண்ணெயை முறைப்படி தேய்த்துக் குளிப்பதற்கு எண்ணெய்க் குளியல்என்று பெயர். எண்ணெயை முதலில் நாபிப்பகுதி என்றழைக்கக் கூடிய தொப்பூழ் பகுதியிலும், சிரசிலும், ஆசனவாய்-பிறப்புறுப்புக்கள் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து தேய்த்து இறுதியில் உடலில் பிற்பகுதிகளிலும் தேய்த்துக் கொள்ள வேண்டும். வாயில் 10-20 மிலி எண்ணெய் விட்டு 10 நிமிடங்கள் கழித்து அலம்பி விட வேண்டும். மூக்கில் 2-4 துளிகளும், காதில் 3-5 துளிகளும், நகக்கணுக்களிலும் எண்ணெயைத் தடவி மொத்தத்தில் 24 நிமிடங்கள் முதல் 36 நிமிடங்கள் வரை பொறுத்திருந்து காய்ந்தாறின வெந்நீரிலோ அல்லது குளிர் நீரிலோ குளித்தல் வேண்டும்

 

தலைக்கு மட்டும் எண்ணெய் வைத்து குளிப்பதை தவிர்க்க வேண்டும். உடலில் எண்ணெய் தேய்த்து, மெதுவாக தமக்குத் தாமே மசாஜ் செய்தல் மிக நல்லது. தனியாக நல்லெண்ணய், பசு நெய், இவைகளையோ அல்லது நல்லெண்ணய்-பசு நெய்-விளக்கெண்ணய் சேர்ந்த முக்கூட்டு நெய்யாகவோ, பிற தைல வகைகளோ பயன்படுத்தலாம். கைக்குழந்தைகளுக்கு காய்ச்சிய தேங்காய் எண்ணெய் நல்லது. விளக் கெண்ணய்க் குளியலும் நல்லது. எண்ணெய்யை நீக்க சீகைக்காய், கடலைமாவு, வெந்தயம் அல்லது பாசிப்பயறு மாவு கூட்டுக் கலவை நல்லது. உசில மரத்து இலைப் பொடியும் நல்லது. தனிச் சீகைக்காய் உடலுக்குச் சூட்டைத்தரும். எனவே கஞ்சி நீர் அல்லது மோருடன் பயன்படுத்த வேண்டும். எண்ணெய்யைப் போக்க ஷாம்பு, சோப்பு உபயோகிப்பது தவிர்த்தல் நன்று.

 எண்ணெய்க் குளியல் ஏற்படுத்தும் பயன்கள்

எண்ணெய்க் குளியலினால் கண், காது, மூக்கு, வாய் மற்றும் உடல் உள்ளிட்ட ஐந்து இந்திரியங்களும் பலப்படும். தலை, முழங்கால், கால் ஆகியவற்றிற்கும் பலமும் நல்ல குணமும் கிடைக்கும். தலைவலி, தலைப்பாரம், உடல் வறட்சி, சொறி, படை ஆகியன நீங்கும். இரத்தக் கொதிப்பு, கண் எரிச்சல், நீர் எரிச்சல், பித்தம் மிகுதி ஆகியன நீங்கும். நல்ல தூக்கமும், தோல் மென்மையும் உண்டாகும். மனக்கலக்கம் சோர்வு தீரும்

உள்ளங்காலில், எண்ணெய்த் தடவி குளிக்கும் போது கண் எரிச்சல் கண்பார்வை தெளிவாகுதல், கண்ணீர் வடிதல், கண்கட்டி, பித்த வெடிப்பு, கால் ஆணி வராது காக்கும். மூக்குகளில் எண்ணெய் இடும் போது, மூக்குச் சதை வளர்ச்சி, தலைப்பாரம், கபநோய்கள் ஆகியன தீருவதுடன் வராது இருக்கும். தொப்பூள் பகுதியில் இடும் போது நீர் எரிச்சல், நீர்க்கடுப்பு ஆகியன வராது காக்கும். பிறப்புறுப்புகளில் இடும் போது மூலச்சூடு, ஆசனவாய்க் காந்தல், அரையிடுக்குகளில் காணும் படை, மூலநோய் ஆகியன ஏற்படாது. கண்களில் சுத்தமான எண்ணெய் இடும் போது கண் பார்வை தெளிவடையும் கை கால் விரல் நகக்கணுக்களில் இடும் போது உடல் உஷ்ணம் குறைந்து வர்மப் பிடிப்புகள் இருந்தாலும் நீங்கும். வாயில் எண்ணெய் இடும் போது, பற்கறை, நாப்புண், ஈறுப்புண், உதடு வெடிப்பு ஆகிய நீங்கும்

எண்ணெய்க்குளியலுக்கு முன்தினம் இரவு நன்கு தூங்கி ஒய்வு பெற்றும், மலம்-சிறுநீர் சரிவர சென்றும், போதை வஸ்துக்களை நீக்கியும் இருத்தல் வேண்டும். எண்ணெய்க் குளியல் எடுத்த நாளன்று, அதிக பளுவான வேலைகளைத் தவிர்த்தும், வெயிலில் செல்லாமலும், மனச்சஞ்சலம் கொள்ளாமலும் இருத்தல் மிக நல்லது. மேலும் உணவு வகைகளில், வெண் பூசணிக்காய், பறங்கிக் காய், மாங்காய், கொத்தவரை, கீரைத்தண்டு, புகையிலை, அகத்திக்கீரை, பாகற்காய், கத்தரிக்காய் ஆகியவைகளை எண்ணெய்க்குளியல் தினத்தன்று நீக்கியும், அவரைப்பிஞ்சு, முருங்கைப்பிஞ்சு, தூதுளங்காய், மணத்தக்காளி, சுண்டை வற்றல், கீரை வகைகள் முதலியவைகளை சேர்த்து வந்தால் மிக நல்லது

பொதுவாக எல்லா மாதங்களிலும் காலை 7 மணிக்குள் எண்ணெய்க்குளியல் எடுத்தல் நல்லது. திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய தினங்கள் பெண்களுக்கு ஏற்ற எண்ணெய்க்குளியல் நாட்களாகும். சனி, வியாழன், புதன் ஆகிய நாட்கள் ஆண்களுக்கு உகந்ததாகும். ஞாயிறு இருவரும் மேற்கொள்ளலாம். மாவாசை, பௌர்ணமி நாட்களில் எண்ணெய்க்குளியல் நடைமுறையில் இருக்கக் கூடாது. எண்ணெய்க்குளியல் அவரவர் உடல் நிலைக்குத் தக்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையும், கர்ப்பிணி பெண்கள், கண் அறுவை செய்தவர்கள், நீரழிவு உடையோர், இதய நோய் உடையோர் உள்ளிட்ட யாவரும் சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எண்ணெய்க்குளியல் எடுக்கலாம். கம்யூட்டர், டிவி, கடுவெயிலில் பணிபுரிவோருக்கு எண்ணெய்க்குளியல் வரப்பிரசாதமாகும். எண்ணெய்குளியல் வெகு நாட்களுக்குப் பிறகு, திடீரென்று எடுத்தால் ஏதும் பின்விளைவுகள் வந்து விடுமோ என்று எண்ணுகிறார்கள். இது தவறானதாகும். ஒரு சிலருக்கு ஒரு சில முறை பேதி, உடல் அசதி, கண் சிவப்பு ஆகியன வந்தாலும் உடன் அடுத்த நாட்களில் சரியாகி விடும்

 

எனவே எண்ணெய்க்குளியல் பற்றிய பயம், நாகரீகம் என்ற போக்கில் ஏளனம் செய்தல், பொறுமையின்மை, அதாவது, இதற்கென்று நேரம் ஒதுக்காமை, இதன் பயன்பற்றிய அறியாமை ஆகியவைகளை நீக்கி இக்குளியலை நடைமுறைப்படுத்துவோம். எண்ணெய்க் குளியல் ஒரு காயகற்ப கலை என்பதை மறத்தல் கூடாது. நோய் வராது உடலை மேம்படுத்தும் உன்னத பாரம்பரிய கலை என்ற எண்ணம் எல்லோருடைய எண்ணத்திலும் இருத்தல் வேண்டும். எண்ணெய்க் குளியலுக்கு ஏற்ற எண்ணெய் வகைகளை எவ்வாறு நாமே தயார் செய்து கொள்ளலாம்.

1)   சீரகம் - 35 கிராம்

2)    நல்லெண்ணய் - 500 மிலி

3)    பால் - 200 மிலி

சீரகத்தை, பொடித்து எண்ணெய், பாலுடன் கலந்து அடுப்பிலேற்றி நன்கு காய்ச்சி, வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

 

2) முருங்கைக் கீரைச் சாறு - 300 மிலி 

நல்லெண்ணய் -300 மிலி இவ்விரண்டையும் நன்கு காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும்

இது போல பல எளிய தைல முறைகள் உள்ளன. நான்கு நாட்களுக்கு ஒரு முறை எண்ணெய்க்குளியல் என்று முன்னோர்கள் அறிவுறுத்துகின்றனர். இருப்பினும் வாரத்துக்கு ஒருமுறையாவது எடுத்து வாழ்வை இனிமை ஆக்குவோமாக

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

1: #blog-pager{clear:both;margin:30px auto;text-align:center; padding: 7px;} 2: .blog-pager {background: none;} 3: .displaypageNum a,.showpage a,.pagecurrent{padding: 5px 10px;margin-right:5px; color: #F4F4F4; background-color:#404042;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);} 4: .displaypageNum a:hover,.showpage a:hover, .pagecurrent{background:#EC8D04;text-decoration:none;color: #fff;} 5: #blog-pager .showpage, #blog-pager, .pagecurrent{font-weight:bold;color: #000;} 6: .showpageOf{display:none!important} 7: #blog-pager .pages{border:none;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);}