சளி - இருமல் (அலுப்புக் கசாயம்,விஷக்கசாயம்) cold home remedies
சளி - இருமல் (அலுப்புக் கசாயம்,விஷக்கசாயம்) cold home remedies
சளி - இருமல் (அலுப்புக் கசாயம்,விஷக்கசாயம்) cold home remedies பண்டைய காலங்களில் சலதோடத்திற்கும், சாதாரண சளி, இருமலுக்கும் "சுக்கு வெந்நீர்” அருந்தும் பழக்கம் இருந்தது. மருந்து ஏதும் உட்கொள்ளாமல் தானாகவே சரியாகி விடும். ஆனால் தற்போது சுற்றுப்புற மாசுநிலை, சீரற்ற உடல்நிலை இவற்றினால் மருந்துண்ணும் கட்டாயம் இருக்கிறது.
அ. தேவையான சரக்குகள்
சிறுவெங்காயச்சாறு 15 மிலி.
இஞ்சிச்சாறு 15 மிலி
ஆடாதோடை இலைச்சாறு 15 மிலி
தேன் 15 மிலி
பயன்படுத்தும் விதம்
நான்கையும் ஒன்றாக கலந்து வேளைக்கு 10 மிலி வீதம் காலை, மதியம், இரவு என்று மூன்று வேளை பருகி வர வேண்டும்.
ஆ. தேவையான சரக்குகள்
கடுக்காய்த் தோல் - 50 கிராம்
மிளகு - 20 கிராம்
திப்பிலி - 50 கிராம்
பனங்கற்கண்டு - 120 கிராம்
நான்கையும் பொடி செய்து கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் விதம்:
ஒரு தேக்கரண்டி வெந்நீரில் காலை, மதியம், இரவு மூன்று வேளை உணவுக்குப் பின் உட்கொள்ள வேண்டும். சிறியவர் பாதி அளவு உட்கொள்ள வேண்டும்.
இ தேவையான சரக்குகள்
அதிமதுரப் பொடி - 100
கிராம்
சிற்றரத்தைப் பொடி - 100 கிராம்
திப்பிலிப் பொடி - 100 கிராம்
பயன்படுத்தும் விதம்:
இம்மூன்றையும் ஒன்றாக கலந்து வைத்துக் கொண்டு மேற்கூறியவாறு 1 தேக்கரண்டி வீதம் தேனிலோ அல்லது வெந்நீரிலோ உண்டு வரலாம். சளி, இருமல் உடன் குறையும்.
சளி - இருமல் (அலுப்புக் கசாயம்,விஷக்கசாயம்) cold home remedies
குறிப்பு:
முன்னர் கூறியுள்ள காய்ச்சலுக்குக் கூறப்பட்டுள்ள மருந்துடன் மேற்கூறிய மருந்துகளை உண்ணும் போது விரைவில் குணம் கிடைக்க ஏதுவாக இருக்கும்.
சலதோடம் கண்டால், சாம்பிராணிப் புகை தலைக்குக் காட்டல், நொச்சித் தழையை வெந்நீரில்
போட்டு ஆவி பிடித்தல், மஞ்சளைச் சுட்டு புகையை நுகர்தல், சுக்கு, கற்பூரம் சேர்த்து அரைத்து நெற்றியில் பற்றுப் போடுதல், தவிடு வறுத்து நெஞ்சில் ஒற்றடம் இடல் ஆகியன சிறந்த உடனடி நிவாரண மருந்தாகும். இவைகளை நாம் மெல்ல மெல்ல மறந்து மற்றவைகளை நாடி இருப்பதால் தான் சாதாரண சலதோடத்திற்குக் கூட அதிக பொருட்செலவும், உடல்பலவீனமும் ஏற்படக் காரணமாகின்றோம்.
கருத்துகள் இல்லை