காய்ச்சல், Fever
காய்ச்சல், சலதோடக் காய்ச்சல்
1. காய்ச்சல், சலதோடக் காய்ச்சல்
காய்ச்சலுக்குக் கீழ்கண்ட எளிய கை மருந்துகள் உட்கொண்டு வந்தால் விரைவில் குணம் கிடைக்கும். மேலும் சளிக்கு எனத் தனியாக மருந்துகள் எதுவும் உட்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
அ. தேவையான சரக்குகள் :
சுக்கு - 10 கிராம்
சீந்தில் 10 கிராம்
சிற்றரத்தை 10 கிராம்
கடுக்காய்த்தோல் - 5 கிராம்
மிளகு - 5 கிராம்
ஐந்தையும் நன்கு ஒன்றிரண்டாக இடித்து நீர் நான்கு டம்ளர் இட்டு ஒரு டம்ளராக அடுப்பிலேற்றி வற்ற வைத்துக் கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் விதம்:
வேளைக்கு ஒரு டம்ளர் வீதம் மூன்று வேளை பருகி வர வேண்டும்.
ஆ. தேவையான சரக்குகள்
துளசி இலை - 5 கிராம்
நிலவேம்பு இலை - 10 கிராம்
மிளகு - 3 கிராம்
வெற்றிலை - 5 எண்ணம்
நான்கையும் ஒன்றிரண்டாக இடித்து நீர் நான்கு டம்ளர் ஊற்றி ஒரு டம்ளராக வற்ற வைத்துக் கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் விதம்:
வேளைக்கு ஒரு டம்ளர் வீதம் 3 வேளையும் பருகி வர வேண்டும். குறிப்பு 1 காய்ச்சல் குணமான பின்பும் தொடர்ந்து 3 நாட்கள் கொடுத்து
வருவது மிகவும் நல்லது.
எளிய உணவு உண்டு வரல் நல்லது. 2 மேற்கூறிய இருமருந்துகளையும் தீவிரக் காய்ச்சல்களின் போது
சேர்த்தும் உண்ணலாம்.
கருத்துகள் இல்லை