முகம் பளபளப்பாக இயற்கை யோசனை
முகம் பளபளப்பாக ஆறு இயற்கை யோசனைகள் உள்ளது.
1. ஆரஞ்சுப்பழச் சாற்றை ஒரு பஞ்சில் தொட்டு முகத்தின் மீது லேசாக தடவி, 20 நிமிடங்களுக்கு பிறகு சீயக்காய் அல்லது பாசிப்பயிறு மாவினால் முகத்தை கழுவலாம்.
2. இரவு உணவை குறைத்து சாப்பிட வேண்டும், இரவு சாப்பாட்டிற்குப் பிறகு 20 நிமிடம் கழித்து 50 கிராம் எடையுள்ள நல்ல மாம்பழத்தை சாப்பிட வேண்டும் , பின் பத்து நிமிடத்திற்கு பிறகு 50 மில்லி காய்ச்சிய பாலை இளஞ்சூடாக தேன் கலந்து சாப்பிட வேண்டும். 40 நாட்களில் பலன் தெரியும்.
3. இரவு தூங்குவதற்கு முன்னால் முகத்தின் மீது புதினா கீரைச்சாறு தடவி விட்டு படுக்கவும்.
4. உருளைக்கிழங்கை பச்சையாக தோலுடன் நசுக்கி அரைத்து முகத்தின் மீது தடவிக் கொண்டு படுக்கவும். காலையில் கழுவி விடவும்.
5. கடலை மாவில் தயிர் கலந்து முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் சென்று கழுவி விடவேண்டும்.
6. வெள்ளை கோதுமை மாவு ஒரு கரண்டி அத்துடன் சிறிது தேன், சிறிது பன்னீர் சேர்த்து பிசைந்து, முகத்தில் பூசி, அரைமணி நேரம் அப்படியே வைத்திருந்து, பின்பு தண்ணீரால் நன்றாகக் கழுவி, மென்மையான துணியால் துடைக்க வேண்டும். வாரம் ஒருமுறை இதை செய்யலாம்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக