தொடை இடுக்குகளில் அரிப்பு

தொடை இடுக்குகளில் அரிப்பு

 தொடை இடுக்குகளில் அரிப்பு ஏற்படுகிறது, புண் வருகிறது .பல வைத்தியம் பார்த்துவிட்டேன் சரியாகவில்லை .சிலநேரம் சரியாகிறது மீண்டும் வருகிறது .இதற்கு நிரந்தர காரணம் என்ன ? தீர்வு என்ன ?.

தொடை இடுக்குகளில் அரிப்பு புண் வருவதற்கு மூன்று முக்கிய காரணங்கள்


1.ஒன்று காற்றோட்டம் இல்லாதது.
2.நாம் அணியும் ஆடைகளில் தன்மை.
3. நாம் அமரும் இருக்கையின் தன்மை.

1.ஒன்று காற்றோட்டம் இல்லாதது.

இதற்கு முக்கியமான காரணம் காற்றோட்டம் இல்லாமையே. சில வருடங்களுக்கு முன்பு ஆண்களும் ,பெண்களும் துடைகள் மற்றும் பிறப்புறுப்பு ஆகிய இடங்களில் காற்றோட்டம் இருக்குமாறு ஆடைகள் அணிந்து வந்தோம். ஆனால் இப்பொழுது நாம் அணியும் ஆடைகள் அந்த இடத்துக்கு காற்றோட்டத்தை செல்வதை தடைசெய்கிறது.

 எனவே தான் இதுபோன்ற அரிப்பும், புண்ணும் வருகிறது

 எனவே,  ஒன்று காற்றோட்டமான ஆடைகளை அணியவேண்டும் ,அல்லது எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது காற்றோட்டமாக இருப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

2. நாம் அணியும் ஆடைகளில் தன்மை.

 சுத்தமான பருத்தி ஆடைகளை அணிந்தால் இதுபோன்ற அரிப்புகள்  வராது ஆனால் ஆனால் நாம் அணியும் ஆடைகள் அனைத்தும் பாலிஸ்டர்,  ரெக்சின்,  உல்லன் , பிளாஸ்டிக் என்று உடலுக்கு துரோகம் செய்யும் ,உடல் வெப்பநிலையை கெடுக்கும் ஆடைகளே அணிகிறோம்.

எனவே 100 சதவிகித சுத்தமான பருத்தி ஆடைகளை அணிவதன் மூலமாக இதிலிருந்து நாம் தப்பிக்கலாம்.

ஜட்டி அணிவதற்கு பதிலாக அண்டர்வாயர் அணிந்தால் குணமாகும்.

பேண்ட் அணிவதற்கு பதிலாக வேஷ்டி அணிந்தால் குணமாகும்.

3. நாம் அமரும் இருக்கையின் தன்மை.

நைலான் , போம் , பிளாஸ்டிக், ரெக்சின் ஆகிய இருக்கைகளை பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு,  மரம் ,இலவம் பஞசு அல்லது பருத்தி பஞ்சினால் ஆன இருக்கைகளில் அமர்ந்து சிறப்பு.

தொடை இடுக்குகளில் வரும் அரிப்பு மற்றும் புண்களுக்கு காற்றோட்டம் இல்லாததே காரணம் மேலும் காற்றோட்டம் கொடுப்பதே சிகிச்சை.

தேவைப்பட்டால் சுத்தமான தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயை அந்த இடத்தில் தேய்த்து வந்தால் குணமாகும்.


கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

1: #blog-pager{clear:both;margin:30px auto;text-align:center; padding: 7px;} 2: .blog-pager {background: none;} 3: .displaypageNum a,.showpage a,.pagecurrent{padding: 5px 10px;margin-right:5px; color: #F4F4F4; background-color:#404042;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);} 4: .displaypageNum a:hover,.showpage a:hover, .pagecurrent{background:#EC8D04;text-decoration:none;color: #fff;} 5: #blog-pager .showpage, #blog-pager, .pagecurrent{font-weight:bold;color: #000;} 6: .showpageOf{display:none!important} 7: #blog-pager .pages{border:none;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);}