ஆரோக்கியமான மனிதன் எத்தனை முறை மூச்சு விட வேண்டும்
ஒரு நாளில் ஆரோக்கியமான மனிதன் எத்தனை முறை மூச்சு விட வேண்டும்
ஆரோக்கியமான மனிதன் எத்தனை முறை மூச்சு விட வேண்டும்
சாதாரணமாகத் ஒரு மனிதன் ஒரு நாளில் 17000 முதல் 28,000 வரை சுவாசம் இருக்கும்.
அதாவது ஒரு நிமிடத்தில் 12 முதல் 20 வரை சுவாசம் இருக்கும்.
நீங்கள் எண்ணிப் பாருங்கள்.
உங்கள் சுவாசம் 16 க்கு மேல் இருந்தால் நீங்கள் அவசரமாக இருக்கிறீர்கள், டென்ஷனாக இருக்கிறீர்கள் , அதிக சக்தி விரயம் செய்கிறீர்கள் என்று அர்த்தம்.
உங்கள் சுவாசம் 16 க்கும் குறைவாக இருந்தால் அமைதியாக இருக்கிறீர்கள் , பொறுமையாக இருக்கிறீர்கள் , ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
12 அல்லது 12 க்கும் குறைவாக இருந்தால் நீங்கள் ஞானியாகி விட்டீர்கள் என்று அர்த்தம்.
இருபது இருந்தால் உச்சகட்ட கோபத்தில் , நோயில், மன உளைச்சலில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
நாடி சுத்தி என்ற மூச்சுப் பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் மூச்சின் வேகம் குறையும்.
சும்மா இருத்தல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரிந்து சும்மா இருக்கும் நேரத்தை அதிகரித்தால் மூச்சுக் காற்றின் வேகம் குறையும்.
நாலுமா யோகா எனப்படும் எனது பயிற்சியை தினமும் செய்து வந்தால் மூச்சுக்காற்றின் வேகம் குறையும்.
" இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு " என்ற விஷயம் புரிந்து விட்டால் மூச்சின் வேகம் குறையும்.
நாம் இந்த உலகத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த உலகம் இயங்கும் என்பதை புரிந்து விட்டால் மூச்சின் வேகம் குறையும்.
" ஆணியே புடுங்க வேண்டாம் " என்று புரிந்துகொண்டால் மூச்சின் வேகம் குறையும்.
உறவுகளில் பற்றில்லா பற்று என்ற தன்மையை உணர்ந்து வாழ்ந்தால் மூச்சின் வேகம் குறையும்.
இறைவனை புரிந்து, நம்பி , சரணாகதி தத்துவத்தின் வாழ்ந்தால் மூச்சின் வேகம் குறையும்.
மூச்சின் வேகம் குறைவதற்கு பயிற்சியை விட புரிதலே சிறந்தது.
வாழ்க்கையை , இறைவனை , உயிரை, உறவுகளை புரிந்து கொள்ள , புரிந்து கொள்ள மூச்சின் வேகம் குறையும்.
மூச்சின் வேகம் குறைய குறைய ஆரோக்கியம் அதிகரிக்கும், அன்பு அதிகரிக்கும் , தெளிவு அதிகரிக்கும் , நம்பிக்கை அதிகரிக்கும், சக்தி அதிகரிக்கும் .
ஏகாந்தமாக வாழலாம்.
மூச்சின் வேகத்தை குறைப்போம் , ஆனந்தமாக வாழ்வோம்.
கருத்துகள் இல்லை