சாப்பிட்ட உடனே மலம் வருகிறது
சாப்பிட்ட உடனே மலம் வருகிறது. ஏன்? நல்லதா? கெட்டதா? எப்படி சரி செய்வது?.
சாப்பிட்ட உடன் மலம் வருவது தவறல்ல, இது ஒரு நோயல்ல, இதற்காக பயப்பட தேவையில்லை.
சாப்பிட்ட உடன் மலம் வருகிறது என்றால், சாப்பிடும் போது மட்டுமே நீங்கள் மனதுக்கு பிடித்ததை போல் வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். புத்திசாலியாக வாழும் பொழுது மலம் வராது. மனதிற்கு பிடித்ததை போல் வாழும் பொழுது மலம் வரும்.
புத்திசாலியாக வாழும் பொழுது உடல் கழிவுகளை நீக்கும் வேலையை நிறுத்தி விடுகிறது. மனதுக்குப் பிடித்ததை போல் வாழும்போது உடல் கழிவுகளை வெளியேற்றுகிறது, நோய்களை குணப்படுத்துகிறது.
திங்கள் முதல் சனி வரை டென்ஷனான வேலை செய்யும் நபர்களுக்கு வாரநாட்களில் பகலில் மலம் வராது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை லீவு நாளில் வீட்டில் ஓய்வாக இருக்கும்போது 4 முறை மலம் வரும்.
நல்லது கெட்டது என்று 24 மணி நேரமும் யோசித்து வாழ்பவர்களுக்கு பெயர் புத்திசாலிகள்.
பிடித்தது, பிடிக்காதது என்று யோசித்து வாழ்பவர்களுக்கு பெயர் மனசாலிகள்.
சிலர் மனதுக்கு பிடித்ததை போல் வாழ்வதே இல்லை எனவே மலம் வருவதேயில்லை. இவர்கள் சாப்பிடும் போது மட்டும் உணவை ரசித்து ருசித்து சாப்பிடுகிறார்கள், இவர்களை அறியாமல் இவர்கள் சாப்பிடும்போது மட்டும் தன் புத்தியை நிறுத்துகிறார்கள், புத்தியை நிறுத்தியவுடன் உடல் கழிவுகளை வெளியேற்றும் வேலையை ஆரம்பித்துவிடுகிறது, எனவே தான் சாப்பிட்ட உடன் சிலருக்கு மலம் வருகிறது.
சாப்பிட்ட உடன் மலம் வந்தால் உடலில் சத்துப்பொருள் தங்குவதில்லை, உடல் ஆரோக்கியம் கெடும், நோய் வரும் என்று சிலர் கூறுகிறார்கள். இதை நம்பாதீர்கள். இது தவறான கருத்து.
சாப்பிட்ட உடன் மலம் வந்தால் நீங்கள் இப்பொழுது சாப்பிட்ட உணவு ஒன்றும் வெளியே வருவதில்லை. ஏற்கனவே உடலில் உள்ள மலம்தான் வெளிவருகிறது. எனவே சாப்பிட்ட உடனே மலம் வருவது சத்து குறைவு என்பது தவறான கருத்து.
சாப்பிட்ட உடன் ஏன் மலம் வருகிறது என்றால் நீங்கள் சாப்பிடும் பொழுது தியானம் செய்கிறீர்கள். உங்களை அறியாமல் சாப்பிடுவதை ரசித்து ருசித்து சாப்பிடும் பொழுது அது தியானமாக மாறி உங்கள் உடலில் கழிவு நீக்க வேலை ஆரம்பிக்கிறது.
சாப்பிடும் பொழுது மட்டும் தான் சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
சாப்பிடும் பொழுது மட்டும் தான் நீங்கள் வாழ்கிறீர்கள் என்று அர்த்தம்.
உங்கள் வாழ்நாளில் மனதுக்கு பிடித்தது போல் வாழும் நேரங்களை அதிகரித்தால் இனிமேல் சாப்பிட்ட பிறகு மலம் வராது.
சிலருக்கு சாப்பிட்ட உடன் சளி வரும் இதற்கும் இதே காரணம்தான்.
ஞானிகளுக்கு புத்தியும் உடலும் எப்பொழுதும் தனித்தனியாக இருக்கும். புத்தியை உடலில் இருந்து பிரிக்க கற்றுக் கொண்டால் நமது உடலில் ஒவ்வொரு செல்லும் ஒவ்வொரு வினாடியும் தன்னைத்தானே குணப்படுத்தும், கழிவுகளை வெளியேற்றும். இதற்கு பெயர்தான் காயகல்பம்.
கருத்துகள் இல்லை