கால் ஆணி வெடிப்புக்கு தீர்வு
கால் ஆணி வெடிப்புக்கு தீர்வு?
கால் ஆணி மற்றும் வெடிப்புக்கு 3 தீர்வுகள் உள்ளது.
தீர்வு-1
மஞ்சள் தூளையும் மருதாணி தூளையும் சம அளவில் கலந்து ஆணி / வெடிப்பு உள்ள இடங்களில் தொடர்ந்து தடவி வந்தால் குணமாகும்.
இதில் மஞ்சள்தூள் என்பது கிழங்கு மஞ்சளை அரைத்த தூளாக இருந்தால் மிகவும் சிறப்பு. ஒருவேளை கிழங்கு மஞ்சள் கிடைக்காதவர்கள் சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இதில் மருதாணி தூள் என்பது மருதாணி இலையை நீங்களே வெயிலில் காயவைத்து அரைத்த தூளாக இருந்தால் மிகவும் சிறந்தது. இல்லையென்றால் நாட்டு மருந்து கடையில் வாங்கிக் கொள்ளுங்கள்.
தீர்வு-2
விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், மஞ்சள் இவை மூன்றையும் கலந்து வெடிப்பு / ஆணி உள்ள இடங்களில் தினமும் தடவி வந்தால் குணமாகும்.
தீர்வு-3
காலையில் தூங்கி எழுந்தவுடன் முதலில் வரும் சிறுநீரை ஆணி / வெடிப்பின் மேல் தடவினால் குணமாகும்.
சிறுநீர் யோசனை உங்களுக்கு அருவருப்பாக இருந்தால் அதை செய்ய வேண்டாம்.
மஞ்சள் மருதாணி விளக்கெண்ணெய் வேப்பெண்ணெய் போன்ற பொருள்களை இரவில் காலில் தடவி விட்டு படுத்து தூங்கி விட்டால் மிகவும் நல்லது.
ஆனால் இந்த பொருள்கள் படுக்கை மற்றும் போர்வையில் ஒட்டி விடும். எனவே இந்த பொருள்களை காலில் தேய்த்தால் அதன் பிறகு காலில் வெள்ளை நிற பருத்தித் துணியை கட்டி விட்டு படுத்து விட்டால் காளில் உள்ள மஞ்சள் தூள் படுக்கையில் படாது.
இந்த மூன்று யோசனைகளையும் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை . இதில் ஏதாவது ஒன்றை செய்தால் போதும்.
இந்த மூன்று யோசனைகளை கால் மதமதப்பு, காலில் புண், கால் எரிச்சல் போன்ற பிரச்சினைகளுக்கும் பயன்படுத்தலாம்.
கருத்துகள் இல்லை