சராசரி ஆனவன் வல்லவனானான்
சராசரி ஆனவன் வல்லவனானான் கனடா நாட்டின் மிகவும் புகழ் வாய்ந்த மருத்துவ நிபுணர் இருந்தார். அவர் மாணவப் பருவத்திலேயே மிகவும் கவலைகளுக்கு ஆட்பட்ட மனிதராக இருந்தார். மருத்துவமனையிலேயே பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த போது தன் எதிர்காலத்தை குறித்த கவலை அச்சம் சந்தேகம் போன்றவை அவரை பிடித்து இருந்தன. இறுதி ஆண்டு படிக்கும்போது அவ்வளவு பெரிய புத்தகங்களை படிப்பது தனக்கு சாத்தியமாகுமா. அவ்வளவு செய்திகளையும் ஒரே ஆண்டில் தலைக்குள்ளே நிறைத்துக் கொள்ள இயலுமா. அனைத்தையும் நினைவில் வைத்துக்கொண்டு பரீட்சை எழுதுவதற்கு தன்னால் இயலுமா. போன்ற அச்சமும் சந்தேகமும் அவரை வாட்டி வதைத்தன. ஒருவேளை பரிட்சையில் தேர்ச்சி அடைந்தாலும் அதன்பிறகு வேலைவாய்ப்பு குறித்த கவலை வேறு. தானே சுயமாக தொழில் நடத்துவதற்கு பணம் தேவைப்படும். நல்வினைப்பயன் வேண்டும்.
போட்டி நிறைந்த உலகில் வாழ்க்கை பயணம் எளிமையானதாக இருக்குமா. எல்லாம் சேர்ந்து தம் எதிர்கால வாழ்வில் புகழ் வெற்றி கிட்டுமா நிலைத்து நிற்குமா என்பது போன்ற சந்தேகம் அவரை அச்சுறுத்தின. ஆனால் தற்செயலாக அவர் கண்ணில் பட்ட ஒரு சொல் ஒரு சொல் "மிகவும் முக்கியமான நம் கடமை" (அருகிலுள்ள செயலை வெற்றியுடன்
நிர்வகிப்பதிலேயே இருக்கிறது தூரதிசையிலே தெளிவற்று காணும் எதிர்காலத்தை காண்பதில் அல்ல) இது அவர் வாழ்க்கை பாதையை மாற்றி அமைத்தது. குழப்பம் நிறைந்த மனநிலையிலிருந்து அவரை விடுவித்தது. அசாதாரண மனிதன் வாழ்வதற்கு வேண்டிய உற்சாக பொறியை இதயத்திலேயே ஏற்றியது. அவரை மிகப்பெரிய கர்மவீரர் ஆக்கியது. அந்த சொல் அவர் வாழ்வின் புகழ் வெற்றிகரமாக அமைந்தது. பின்னால் அவர் பெயர் பெற்ற நிறுவனத்தின் எல்லாவித முன்னேற்றங்களுக்கும் காரணமாக விளங்கினார் .நான்கு பல்கலைக்கழகங்களிலே பேராசிரியராக பணிபுரிந்தார். மருத்துவத் துறையின் தலைவராக மாறினார். அவர் மாணவர்களுக்காக சொற்பொழிவு நிகழ்த்திய போது பொது மக்கள் விரும்பும் நூலாசிரியராக உயர்ந்த நிலையிலுள்ள பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை தலைவராக புகழ்பெற்ற என்னை பிறவியிலிருந்தே மேதாவி என்று என்னை நினைக்கலாம் நிலமை அப்படியல்ல நான் மிகவும் சாதாரண மூளை உள்ளமனிதன் என்பது என் நெருங்கிய நண்பர்களுக்கு தெரியும் என்று கூறினார்.

கருத்துகள் இல்லை