கொக்கு கூறிய நீதி
கொக்கு கூறிய நீதி
ஒரு கிராமத்தின் பக்கத்தில் ஒரு வயலில் ஒரு கொக்கு ஜோடி வசித்து வந்தன. அங்கேயே அவைகளின் முட்டைகளும் இருந்தன. முட்டைகள் பெரிதாகி அவைகளிலிருந்து குஞ்சுகள் வந்தன. ஆனால் குஞ்சுகளுக்கு சிறகுகள் முளைத்த காலம் வரும் முன்பே பயிர் முற்றி அறுவடைக்கு தயாராக விட்டது. கொக்கு கவலையில் ஆழ்ந்தது. குடியானவன் வயல் அறுவடைக்கு வருவதற்கு முன்பே குஞ்சுகளுடன் அங்கிருந்து சென்று விட வேண்டும். மேலும் குஞ்சுகளால் பறக்கமுடியவில்லை கொக்கு குஞ்சுகளிடம் சொன்னது. நாங்கள் இல்லாத போது யாராவது வயலுக்கு வந்து ஏதாவது பேசினால் அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு நாள் இரை எடுத்துக்கொண்டு மாலையில் குஞ்சுகள் இடத்தில் வந்தது அப்போது குஞ்சுகள் கூறின. இன்று குடியானவன் வந்தான். அவன் வயலில் நாற்புறமும் சுற்றி வந்தான். ஓரிரு இடங்களில் நின்று கொண்டு வெகு நேரம் உற்றுப் பார்த்தான். அவன் சொன்னான். வயலில் அறுவடை செய்யும் நிலையில் உள்ளது. நான் கிராம ஜனங்களிடம் சென்று என்னுடைய வயலில் அறுவடை செய்து கொடுங்கள் என்று சொல்வேன். கொக்கு கூறியது நீங்கள் பயப்படாதீர்கள் வயல் இப்பொழுது அறுவடை செய்யப்பட மாட்டாது. இன்னும் வயல் அறுவடை செய்ய பல நாட்கள் உள்ளன.
பல நாட்களுக்கு பிறகு குஞ்சுகளிடம் வந்தபோது அவை கூறின. நாம் இந்த உலகை விட்டு உடனடியாக போக வேண்டும். இன்று குடியானவன் மறுபடியும் வந்தான். கிராம ஜனங்கள் தன்னலம் படைத்தவர்கள் என்று அவன் சொன்னான். அவர்கள் என் வயலில் அறுவடை செய்ய எவ்வித ஏற்பாடுகளும் செய்யவில்லை. நாளை உடன்பிறந்தார்களை அனுப்பி வயலை அறுவடை செய்வேன். கொக்கு கவலையில்லாமல் கூறியது. இப்போதும் வயல் அறுவடை செய்யப்பட மாட்டாது. இரண்டு மூன்று நாட்களில் நீங்கள் நன்றாய் பறக்க முடியும் பயப்படத் தேவை இல்லை. சில நாட்கள் மேலும் கழிந்தன. கொக்கு குஞ்சுகள் பறக்கத் தொடங்கின பயம் இல்லாமல் இருந்தன.
ஒருநாள் மாலை குஞ்சுகள் சொல்லத்தொடங்கின குடியானவன் பொய்யாக பயமுறுத்துகிறான். இன்று கூட வந்து சொன்னான். என் சகோதரர்கள் என் பேச்சை கேட்கவில்லை அனைவரும் சொல்கிறார்கள். என் வயலின் தானியங்கள் காய்ந்துஉதிர்த்து விழுந்து கொண்டிருக்கிறது. நாளை அதிகாலையில் வருவேன். நான் அதைச் செய்வேன். இதைகேட்டு பயந்து கொண்டு சீக்கிரம் இன்னும் இருட்டவில்லை. வேறிடத்திற்கு பறந்து செல்லுங்கள் நாளை கட்டாயம் வயல் அறுவடை செய்யப்படும்.
குஞ்சுகள் கேட்டன இந்த தடவை வயலில் அறுவடை செய்யப்படும் எப்படி கொக்கு கூறியது. குடியானவன் எப்போது கிராமத்து ஜனங்களிடம் தன்னுடன் பிறந்தவர்களிடமும் நம்பிக்கை வைத்தானோ அப்போது பயிர் அறுவடையாகும் என்ற நம்பிக்கை இல்லை. பிறரிடம் நம்பி வேலையை யார் விடுகிறாரோ அவர்களது வேலை நடக்காது. ஆனால் தானே வேலையை செய்ய முடிவு எடுத்தால் அவன் வேலை தடைபடாது. குடியானவன் தானே நாளை அறுவடை செய்யப் போகிறான். ஆகையால் வயல் அறுவடை ஆகிவிடும். தன் குஞ்சுகளுடன் அதேநேரம் அங்கிருந்து வேறு இடத்திற்கு சென்றது.
கருத்துகள் இல்லை