யோசிக்காமல் வேலை செய்யாதீர்
யோசிக்காமல் வேலை செய்யாதே ஒரு குடியானவன் ஒரு கீரீயை வளர்த்து வந்தான் மிகவும் கெட்டிக்காரத்தனமும் எஜமான விசுவாசம் கொண்டது கீரி குடியானவன் எங்கேயோ சென்றிருந்தால் குடியானவனின் மனைவி தன் கைக் குழந்தைக்கு பால் புகட்டி விட்டு தூங்கச் செய்துவிட்டு கீரியை அங்கேயே விட்டுவிட்டு தண்ணீர் எடுத்து வர கிணற்றடிக்கு குடத்துடன் சென்றால் குடியானவனின் மனைவி சென்ற பின்பு வீட்டிற்குள் ஒரு கருநாகம் அங்கே வந்தது தரையில் விரித்திருந்த துணியில் தூங்கி கொண்டிருந்த குழந்தையை நோக்கி வந்து கொண்டிருந்தது . கீரி குழந்தைக்கு அருகில் பாம்பை விடாமல் சண்டையிட்டு பாம்பை இரண்டு துண்டுக்கி விட்டு குடியானவனின் மனைவியின் வருகையை எதிர்நோக்கி வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தது. தண்ணீர் எடுத்து கொண்டு வீட்டிற்க்கு திரும்பினாள் அவள் வீட்டின் வெளியே கதவருகில் நின்று கொண்டிருந்த கீரி முகத்தை பார்த்ததும் அவள் தன் குழந்தையை கடித்துவிட்டது என்று நினைத்தால் கீரியின் மேல் தண்ணீர் குடத்தை போட்டால் கீரிதுடித்து இறந்து விட்டது. வீட்டின் உள்ளே ஓடினாள் அங்கே குழந்தை சுகமாகத் தூங்கிக் கொண்டிருப்பதையும் ஒரு கருநாகம் கொல்லப்பட்டி இருப்பதையும் அவள் பார்த்தால் அப்பொழுது தான் அவளுக்கு தன் தவறு தெரிந்தது அவள் ஓடிவந்து கீரியின்அருகில் வந்து இறந்த கீரியை மடியில் எடுத்து கொண்டு அழத் தொடங்கினாள் ஆனால் அவளுடைய அழுகையால் இப்பொழுது என்ன பயன் அதனால்தான் கூறப்படுகிறது யோசிக்காமல் செய்துவிட்டு வருந்துவதால் என்ன பயன் .
கருத்துகள் இல்லை