குடும்ப வாழ்வை வளப்படுத்துவது எப்படி? How To Make How To Enrich Family Life
குடும்ப அமைப்பு நலிவுறக் காரணங்கள் யாவை?
1 மோசமான திரைப்படம், 2) தொலைக்காட்சி, 3) குடி, 4) நகர்ப்புறமாதல் அதிகரித்தல், 5) திருமண வயது அதிகம் தள்ளிப் போடப்படுதல், 6) குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து பிரச்சினைகளை எதிர்கொள்ள போதுமான நேரமும், வாய்ப்பும் கிடைக்காமல் போய்விடுதல், 7) கூட்டுக் குடும்பத்தில் சிதைவு ஏற்பட்டு, தாத்தா, பாட்டிகளின் அன்பு குழந்தைகட்குக் கிடைக்காமல் போய்விடுதல், 8) அளவுக்கு மீறிய வேலைச் சுமை, 9) சுயநலமும் பணத்தாசையும், 10) தனிநபர் அதிகாரம் உரிமை பற்றிய தவறான கருத்துக்கள், 11) போகப் பொருள்களை நுகரும் அளவுக்கு மீறிய ஆசை. இவையெல்லாம் குடும்ப அமைப்பைக் கொஞ்சம் குழப்பியே வைத்திருக்கின்றன. எனினும் பெரும்பாலான குடும்பங்கள் பிரச்சினைகளை வளரவிடாமல் தீர்வுகாண மனப்பூர்வமான முயற்சி செய்கின்றார்கள். நகர்ப்புறமாதல் அதிகரித்தாலும், உறவினர்களை விட்டுக் கொடுக்காமல் போற்றும் பண்பாடு எஞ்சி இருக்கிறது. குலதெய்வ வழிபாடு புத்துயிர் பெற்றுள்ளது. குடும்ப வழிபாட்டு நெறிகளைப் போற்றிப் பாதுகாக்கும் பாங்கு மறு உயிர் பெற்றுள்ளது.
குடும்பம் சீரழிவதால் என்ன தீமை? குடும்பம் ஒற்றுமையாக இருந்தால் என்ன நன்மை ?
சீர்கெட்ட குடும்பத்தில்
1) குழந்தைகள் மனக்குறைகளுடன் வளர்கிறார்கள். அவர்களுடைய பாதுகாப்பு உணர்வு, தன்னம்பிக்கை, மனம் குவிதல் படிப்பில் கவனம் இவை குறைகின்றன. 2) பலருடன் பழகுதல், பங்கு போட்டுச் சாப்பிடுதல் ஆகிய குணங்கள் குன்றுகின்றன. 3) தலைமை ஏற்கும் பண்பு குறைகிறது. 4) தொட்டதற்கெல்லாம் பணத்தைச் செலவு செய்து பிரச்சினைகளைத் தீர்த்து விடலாம் என்ற மனப்பாங்கு வளர்ந்து விடுகிறது. 5) அன்பினாலும், பரிவு உணர்வினாலும், சக வாழ்வினாலும் தீர்த்துவிடக் கூடிய பிரச்சனைகள் அப்படியே இருக்கின்றன. 6) மனிதர்கள் அன்புக்கு ஏங்குகிறார்கள். 7) குறிப்பாக நோயுற்ற காலம், தோல்வி, துன்பம், இழப்பு, மரணம் இவற்றால் தனிமனிதர் துன்புறும் போது, மனிதமனம், துணையை நாடுகிறது. ஆறுதலைத் தேடுகிறது. பாசத்துக்குப்பறக்கிறது.
குடும்ப ஒற்றுமையின் நற்பயன்கள்:
1 குடும்பமே ஒரு மருத்துவமனை தான் என்கின்றார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஒரு நல்ல குடும்பத்தில் வாழ்பவருக்கு நோய் எதிர்ப்புச் சக்தி மருந்துகளை நன்கு சீரணித்து, நோய் தீர்க்கும் சக்தி அதிகம் இருக்கிறது. பல நோய்கட்கு மருந்தே தேவை இன்றி குடும்பத்தினரின் அன்பும், கைவைத்தியமுமே பிரச்சினைகளைத் தீர்த்து விடுகின்றன.
2) ஒற்றுமையுள்ள குடும்பத்தில் பிறந்து வளரும் ஆண், பெண்கள் தாங்கள் வயதுக்கு வந்து திருமணம் செய்து குடும்பத்தவராகும் போது பிரச்சினைகளைச் சமாளிப்பது, விட்டுக் கொடுப்பது, துன்பங்களைத் தாங்கிக் கொள்வது, இவற்றில் திறமையுடன் செயல்படுகிறார்கள். குறிப்பாக, தந்தையின் கண்காணிப்பில் வளரும் பெண் குழந்தைகள், தாங்கள் மணவாழ்க்கையில் நுழையும் போது, கணவருடன் நன்கு சரிக்கட்டிக் கொண்டு போகும் நல்ல குடும்பத் தலைவிகளாக வாழ்கிறார்கள். 3) குடும்பத்தின் சிறப்பியல்புகளான, குடும்பச் சமையல், குடும்பப் பழக்கவழக்கங்கள், உடை உடுத்தும் பழக்கம், குலமரபுகள், குடும்பச் சொத்தின் பராமரிப்பு, பங்கீடு, உறவுமுறைகள் இவற்றைக் காத்து, அடுத்த தலைமுறை வரை கொண்டு செல்வது இவற்றில் குடும்பம் பெரும்பணி ஆற்றுகிறது. 4) ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மூலதனம் அதன் குடும்ப உறுப்பினர்களின் பரஸ்பர நம்பிக்கை, தங்களுடைய கூட்டு எதிர்காலத்தில் நம்பிக்கை,
அதனால் ஏற்படும் சிறுசேமிப்பு, மூலதனச்சேமிப்பு, வீடுகட்டுதல், அசையும்,
அசையாச் சொத்து வாங்குதல் என்பது ஆய்ந்து அறியப்பட்டுள்ளது. பாரத நாட்டின் குடும்பச் சேமிப்பு வழக்கம் நம் நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு ஆகும். நேசிப்பதற்கு மனைவி மக்களே இல்லாத ஒரு சராசரி அமெரிக்கன் யாருக்காகச் சேமிப்பான்? யாருக்காக வீடுகட்டுவான்? யாருக்காகக் கனவு காண்பான்?
5) முதியவர்களைப் பேணிக் காத்து, வயதான காலத்தில் அவர்கட்குத் தொண்டு செய்து, அவர்கள் வாழ்க்கையை நிறைவு செய்யக் குடும்பத்தால் தானே முடியும்?
குடும்ப வாழ்வை வளப்படுத்துவது எப்படி?
இன்று உலகம் முழுவதும் குடும்ப வாழ்வை ஒற்றுமையுடனும், செயல் துடிப்புடனும் உருவாக்கி வைத்திருக்க முயற்சிகள் நடக்கின்றன. ஒரு ஆசிரியர் சில பொதுக் கருத்துக்களைக் கூறியுள்ளார். 1) குடும்பத்தில் ஒற்றுமையை வளர்க்க மற்றவர் தான் முதல் அடி எடுத்து வைக்கட்டுமே என்றிருக்காமல் நீங்களே முதலில் செயல்பட்டு குடும்ப நல்லுணர்வுகளைத் தூண்ட வேண்டும்.
2) ஒட்டுமொத்தமான குடும்ப ஒற்றுமையை, அன்பை, மனத்தில் வைக் எந்தக் காரியத்தையும் செய்ய வேண்டும். 3) வீடு கட்டினாலும்பாத்திரம் கழுவினாலும், காய்கறி வாங்கினா னாலும் நம் அன்புக்குரிய உறுப்பினர்களுக்காக இதைச் செய்கிறேன் என்றுணர்ந்து செயல்பட வேண்டும். 4) குடும். ஒற்றுமையும், வளமும் திடீரென்று ஒரு நாளில் உருவாகி விடா. மெள்ள மெள்ள அவற்றை உருவாக்க வேண்டும். 5) எந்தப் பிரச்சினை வந்தாலும் குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னுரிமை கொடுத்து முடிவெடுக்க வேண்டும். 6) வீட்டிலும், குழந்தைளுடனும் பழக அவர்களுக்கு என்று நேரம் ஒதுக்க வேண்டும். 7) குடும்பம் என்பது போட்டி போட்டு வெற்றி தோல்வியைத் தீர்மானம் செய்யும் இடம் இல்லை. எல்லோரையும் வெற்றி பெறச் செய்யும் இடம் ஆகும். எந்த நிலையிலும் வீட்டை ஒரு போட்டிமைதானமாக ஆக்கி விடாதீர்கள்.
8) மற்றவர்கள் தான் என்னைப் புரிந்து கொள்ளட்டுமே என்றிருக்காதீர்கள். நீங்கள் குடும்பத்தின் பிற உறுப்பினர்களைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். 9) குடும்பத்தின் ஒட்டுமொத்த சக்தி ஒருங்கிணைந்து வேலை செய்ய வேண்டும். ஒருவரையொருவர் எதிர்த்து நின்றால் குடும்பத்தி கூட்டுச் சக்தி உருவாகாது. 10) குடும்ப வாழ்க்கையில் உணர்வுகளைக் கொண்டு வரவும், சில நடவடிக்கைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். சேர்ந்து செய்யும் நற்காரியங்களுக்கு, உடற்பயிற்சிக்கு, விளையாட்டுக்கு,
உடல் உழைப்புக்கு,
மக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நம்முடைய குடும்ப அமைப்பே குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் விவசாயத் தொழிலில் கஷ்டப்பட்டு ஒன்றாக உழைத்ததில் இருந்து உருவானது தான். 11) அதுபோலவே பரஸ்பர நேசம், நகைச்சுவை உணர்வு, இவையும் குடும்பத்தைப் பலப்படுத்தும். 12) புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் போது சேர்ந்து கற்றுக் கொள்ளுதல், அன்பை வலுவாக்கும்.
13) ஆன்மீகத் தளத்தில் குடும்பம் நல்லமுறையில் உருவாக முடியும். இறை வழிபாடு நம் அகம்பாவத்தையும், போட்டி மனப்பான்மையையும், தன்னை முன்னிறுத்தும் சுயநலத்தையும் குறைத்துக் கொண்டு நம்மை குடும்பத்தின் பயனுள்ள உறுப்பினராக்க உதவி செய்யும்.
நல்ல குடும்பம் பாரதம் கண்ட லட்சியம்:
பாரத நாட்டுக் குடும்பமே அறத்தின் அடிப்படை ஆகும். துறவி கூட உலகம் முழுவதையும் ஒரு குடும்பமாகவே காண்பதற்கு முயற்சி செய்கிறார். வசுதா ஏவ குடும்பகம் (உயிர்க்குலம் முழுவதும் ஒரு குடும்பம்)
என்பது முனிவர்களுடைய வாக்கு ஆகும். குடும்பத்தை ஒற்றுமைப்படுத்த, அதை ஒரு பயனுள்ள சமுதாயம் கருவியாக, ஆன்மீக வளர்ச்சிக்கான ஏணியாக மாற்ற நம் பண்பாட்டில் நிறையக் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.
ராமாயணம், மஹாபாரதம், திருக்குறள் முதலிய மிக உயர்ந்த நூல்களும் இவற்றையே வற்புறுத்தி வந்துள்ளன. நம் அறநூல்கள் ஒரு சராசரி மனிதர் தினப்படி வாழ்க்கையில் ஐந்து வகையான பாவச் செயல்களைச் செய்து விடுகிறார் என்று கூறுகின்றன. 1) விளக்கு மாற்றால் வீட்டைப் பெருக்கும் போது பல நுண்ணுயிர்கள் அழிகின்றன. 2) தண்ணீர்ப் பானையில் பல சிற்றுயிர்கள் செத்துப் போகின்றன. 3) அடுப்பு மூட்டும் போது தீயினால் பல உயிர்கள் சாகின்றன. 4) அம்மி, கல்லுரல் இவற்றால் உயிர்கள் சாகின்றன. 5) உலக்கை முதலியவற்றால் இடிக்கும் போது உயிர்கள் அழிகின்றன. இதற்குப் பிராயச்சித்தமாக இல்லறத்தவன் செய்யும் நற்காரியங்கள்,
ஐம்பெரும் வேள்விகள் என்றும், பஞ்சமகாயக்ஞம் என்றும் சொல்லப்படும். இவற்றால் குடும்ப ஒற்றுமை வலுவடைந்து பாவங்கள் விலகும் என்று அறநூல்கள் கூறுகின்றன. அவை முறையே ) நர யஜ்ஞம் அதிதி யஜ்ஞம், 2) பூத யஜ்ஞம், 3) பித்ரு யஜ்ஞம், 4) தேவ யஜ்ஞம், 5) பிரம்ம யஜ்ஞம். ஐந்து வகையான சக்திகட்கு நாம் பட்டிருக்கும் கடன்களை பஞ்சரிணம் என்று குறிப்பிட்டு, நற்செயல்களால் கடன் தீர்ந்து, குடும்ப ஒற்றுமை வளரும் என்கின்றனர் முனிவர்கள்.
மை உணர்வுகளைக் கொண்டு வரவும், சில வடிக்கைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். சேர்ந்து செய்யும் நற்காரியங்களுக்கு, உடற்பயிற்சிக்கு,
விளையாட்டுக்கு, உடல் உழைப்புக்கு, மக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நம்முடைய குடும்ப அமைப்பே குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் விவசாயத் தொழிலில் கஷ்டப்பட்டு ஒன்றாக உழைத்ததில் இருந்து உருவானது தான். 11) அதுபோலவே பரஸ்பர நேசம், நகைச்சுவை உணர்வு, இவையும் குடும்பத்தைப் பலப்படுத்தும். 12) புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் போது சேர்ந்து கற்றுக் கொள்ளுதல், அன்பை வலுவாக்கும்.
13) ஆன்மீகத் தளத்தில் குடும்பம் நல்லமுறையில் உருவாக முடியும். இறை வழிபாடு நம் அகம்பாவத்தையும், போட்டி மனப்பான்மையையும், தன்னை முன்னிறுத்தும் சுயநலத்தையும் குறைத்துக் கொண்டு நம்மை குடும்பத்தின் பயனுள்ள உறுப்பினராக்க உதவி செய்யும்.
நல்ல குடும்பம் பாரதம் கண்ட லட்சியம்:
பாரத நாட்டுக் குடும்பமே அறத்தின் அடிப்படை ஆகும். துறவி கூட உலகம் முழுவதையும் ஒரு குடும்பமாகவே காண்பதற்கு முயற்சி செய்கிறார். வசுதா ஏவ குடும்பகம் (உயிர்க்குலம் முழுவதும் ஒரு குடும்பம்)
கருத்துகள் இல்லை