குழந்தைகள் உடல் வலிவு பெற்றவர்களாக மாற்ற How To Improve At Children Get Healthy
ஒவ்வொரு பெற்றோரும். தங்கள் குழந்தைகளைப் பேணி போற்றி வளர்க்க அரும்பாடுபடுகிறார்கள். அதிலும் தங்கள் குழந்தைகள் எந்த உணவும் விரும்பிச் சாப்பிடவில்லை , அடம் பிடிக்கிறது என்றால் நாம் அடையும் கவலைகளுக்கு எல்லையே இல்லை. குழந்தைகள் உணவு உட்கொள்வதிலோ, குழந்தைப் பருவத்துக்கே உரிய சுறுசுறுப்பு இன்றியோ, சோர்வுடனோ காணப்பட்டால் அக்குழந்தைக்கு உடல் ரீதியாக ஏதோ ஒரு பாதிப்பு நிகழ்ந்துள்ளது என்று அறிந்து கொள்ளலாம்.
குழந்தை பிறந்த முதல் நாளிலிருந்து அவர்களை ஆரோக்கியமாய் வளர்ப்பது குறித்தும் உடல் மெலிந்து காணப்படும் குழந்தைகளை எப்படி உடல் வலிவு பெற்றவர்களாக மாற்ற முடியும் என்று ஒரு எளிய வைத்திய முறையின் மூலம் பார்க்கலாம்.
கடுக்காய், ஜாதிக்காய், மாசிக்காய் மூன்றும் வாங்கிக் கொள்ளவேண்டும். ( நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்). மூன்றையும் வடிசாதத்தை வேகவைக்கும்போது அதனுடன் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவேண்டும். வேகவைத்து எடுத்துக் கொண்டபின் அதை சூரிய ஒளியில் உலர்த்த வேண்டும். ஜாதிக்காயை மட்டும் தனியே எடுத்து குழந்தை குளிப்பதற்கு என்று எடுத்து வைத்திருக்கும் நீரில் ஜாதிக்காயை பொடி செய்து கலந்து கொள்ளவும். அந்த நீரில் குழந்தையை குளிப்பாட்டும் பொழுது சருமத்தில் உள்ள கழிவுகள் நீக்கப்பட்டு உடல் ஆரோக்கியம் பெறுகிறது. இதில் உள்ள துவர்ப்புச் சுவை சருமத்திற்கு செழுமையும், பளபளப்பையும் தருகிறது.
அடுத்து வேகவைத்த மாசிக்காயை எடுத்துப் பொடி செய்து கொள்ளவும். இது குழந்தையின் நாக்கில் படிந்திருக்கும் வெண்மை நிறப் படிவை நீக்க வல்லது. நாக்கில் படிந்திருக்கும் வெண்மை நிறப்படிவு குழந்தைக்கு பசியின்மையை ஏற்படுத்தும். அதனால் குழந்தை சரிவர உணவு எடுத்துக் கொள்ளாது. இந்நிலையில் மாசிக்காயை பொடி செய்து சிறிது நம் விரல்களால் எடுத்து அக்குழந்தையின் நாக்கில் தடவி எடுக்கும்பொழுது அந்த வெண்மை நிறப் படிவும் முழுவதுமாக வெளியே வந்துவிடும். அதன் பிறகு குழந்தைக்கு நல்ல பசி உணர்வு தூண்டப்படும்.
அதேபோல கடுக்காயை பொடி செய்து நீரில் சிறிதளவு கலந்து தரும்பொழுது வயிறு சம்பந்தமான உபாதைகள் நீங்கும். சில குழந்தைகள் மலம் கழிப்பதில் சிரமப்படும். சில குழந்தைகளுக்கோ ஆசனவாயில் (மலம் கழிக்குமிடத்தில்) சிறு புண்கள் கூட ஏற்பட்டிருக்கலாம். சில குழந்தைகளுக்கும் மிகுந்த எரிச்சலுடன் மலம் கழிப்பதால் சிரமப்படும். அந்த வேளைகளில் கடுக்காயை நீரில் கரைத்துத் தர இந்தத் தொந்தரவுகள் நீங்கும். மீண்டும் ஒரு முறை நினைவு கொள்வோம். ஜாதிக்காயை நீரில் கலந்து குளிக்கப் பயன்படுத்துவோம். அதனால் புறத்தில் ஏற்படும் நோய்கள், சருமப் பிரச்சினைகள் தீரும். மாசிக்காயை நாக்கில் உள்ள வெண்படிவத்தை நீக்கப் பயன்படுத்துவோம். கடுக்காய் வயிறு சம்பந்தமான கோளாறு ஆகியவற்றிக்கு தீர்வு காணபயன்படுத்துகிறோம்.
கருத்துகள் இல்லை