ocean waves




Breaking News

HELTH AND BEAUTY TIPS AND TO CREATE HEALTHY HUMAN BEINGS PLEASE FOLLOW THE OCEAN WAVES BLOGGER

வலி நிவாரண மாத்திரைவேண்டாம் The Secret Guide To Do Not Pain Relief Pill

 வலி நிவாரண மாத்திரைவேண்டாம் The Secret Guide To Do Not Pain Relief Pill

 

வலிகளை நீக்குவதற்கு வலி நிவாரண மாத்திரைகளை விழுங்க வேண்டாம். உங்கள் ஆட்காட்டி விரல் ஒன்றே போதும் The Secret Guide To Do Not Pain Relief Pill

 

வியாதி இல்லாதவர் இல்லை. மாத்திரை விழுங்காத மனிதரும் இல்லை . வியாதியும் மாத்திரைகளினால் குறைவது போன்று மறைந்து, நாளும் பொழுதும் திரும்ப திரும்ப வந்து கொண்டேயிருக்கிறது. இதற்கு எத்தனையோ காரணங்கள். அவற்றில் சில நமக்கு தெரிந்தவைகளே.

வலி நிவாரண மாத்திரைவேண்டாம் The Secret Guide To Do Not Pain Relief Pill

ஊட்டச்சத்து குறைவான உணவு. சரிவிகித உணவு இல்லாதது. சரியான நேரத்தில் உணவு உண்ணாதது. ரசாயன கலப்பட உணவுகள் உண்பது. தூங்கும் நேரத்தில் விழித்திருப்பது. விழித்திருக்க வேண்டிய நேரத்தில் ஒரு தூங்குவது. எப்பொழுதும் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்து எதையாவது பார்த்துக்கொண்டே இருப்பது. இடைவெளி இல்லாமல் செல்போனில் தொடர்ந்து உரையாடுவது, சிறுநீர், மலம் அடக்குவது. வியர்வை வெளியே வரவிடாமல் எப்பொழுதும், ஏர்கண்டிசன் அறையில் இருப்பது சம்பந்தா சம்மந்தம் இல்லாமல் எதையாவது எப்பொழுதும் சிந்தித்து கொண்டேயிருப்பது.

வயதானவர்கள் ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது. நின் விசிறியை அதிக வேகத்தில் சுழலவிட்டு அதனடியில் எப்பொழுதும் நாள் முழுவதும் இருப்பது. இது போன்றவைகளே உடலில் வலிகள், வியாதிகள் வருவதற்கு காரணங்களாக அமைகின்றன.

என்னதான் காரணங்கள் கூறினாலும், வலிகள் ஏரும்பொழுது அவஸ்தைபடுபவர்கள் நாம் தான். வலிகள் எந்ததின் காரணத்தை நினைத்து வருந்தாமல், எந்த வலியை போக்குவதற்கு உடனே ஏதாவது செய்ய நினைக்கின்றோம். வலிகளை நீக்குவதற்கு மாத்திரைகளை முழுங்கவும் வேண்டாம்! அந்த மாத்திரைகளின் பக்க விளைவு களினால் அவதிப்படவும் வேண்டாம்! வலி நிவாரண தைலம் எதையும் உடலில் தேய்க்கவும் வேண்டாம்! அந்த வலிகளை சில நிமிங்களில் போக்குவதற்கு உங்கள் ஆட்காட்டி விரல் ஒன்றே போதும்.

நமக்கு அடிக்கடி ஏற்படுகின்ற தலைவலி, கழுத்து வலி, தோள்பட்டை வலி, முதுகுவலி, இடுப்பு வலி, தொடை வலி, முழங்கால் வலி, கணுக்கால் வலி, பாதவலி, கைமூட்டு, கால் மூட்டு வலி, தசை வலி, வயிற்று வலி முதலியவைகள் நம்மை எந்த வேலையையும் செய்ய விடாமல் சோர்வடையச் செய்கின்றன.

முதலில் உடலில் வலி எப்படி ஏற்படுகிறது, என்று அறிவோமானால் அவைகளை நீக்குவது எளிது.

நாம் உண்ட ஆகாரம் இரைப்பையில் சென்று, ஜீரண நீர்களால் சத்துக்களாக மாறி குழம்பாக சிறுகுடலில் செல்லும் பொழுது, திறுகுடலில் உள்ள குடல் உறிஞ்சிகளால் உறிஞ்சப்பட்டு இரத்தத்தில் சேருகிறது. அந்த இரத்தம் உடலில் உள்ள கல்லீரல், மண்ணீரல், கணையம் மற்றும் உள்ள எல்லா சுரப்பிகளிலும் உள்ளே சென்று சுற்றி வரும் பொழுது, அவைகளுக்கு வேண்டிய சத்துகளை கொடுத்துவிட்டு, அவைகளில் ஏற்பட்ட கழிவுகளை இரத்தத்தில் ஏற்றுக்கொண்டு வரும்பொழுது, இரத்தத்தில் கழிவுகள் அதிகம் சேருமானால், அதன் காரணமாக இரத்தத்தில் அடர்த்தி அதிகமாகிறது. அடர்த்தி காரணமாக இரத்த ஓட்டம் மெதுவாக தேங்க ஆரம்பிக்கிறது. எந்த இடத்தில் இரத்தம் தேங்க ஆரம்பிக்கின்றதோ உடலில் அந்த இடத்தில் வலியை உண்டாக்குகிறது.

வீட்டில் உள்ள வாய்க்காலின் நடுவே கழிவுகள் சேருமானால், பின்னால் வரும் நீர் தேக்கமடைந்து வாய்க்கால் அடைத்து விடும். அப்பொழுது வாய்க்காலின் நடுவே அடைத்த கழிவுகளைத் தள்ளிவிடுவோமானால் பின்னால் வரும் கழிவநீர் விரைவாகச் சென்று வாய்க்கால் சுத்தமாகிவிடும். அதுபோல நமது உடலில், கழிவுகள் சேர்ந்த இரத்த ஓட்டத்தையே நீக்கி, விரைவாக செல்ல வழி செய்வோமானால், நமது உடலில் ஏற்பட்ட வலி நீங்கிவிடும் இரத்தத்தில் உள்ள கழிவுகள் இருவகைப்படும்.

 1. நீரில் கரையும் கழிவுகள்,

2. காற்றில் கரையும் கழிவுகள்.

 

கழிவுகளை ஏற்றுக்கொண்ட இரத்தம், சிறுநீரகத்திற்கு சென்று, நீரில் கலந்த கழிவுகளை பிரித்து சிறுநீரகம் மூலம், சிறுநீர் பைக்கு அனுப்பி சிறுநீரை உடலிலிருந்து வெளியேற்றுகிறது. காற்றில் கரையும் கழிவுகள் நிறைந்த இரத்தத்தை நுரையீரலுக்கு அனுப்பி நாம் மூச்சுக்காற்றை உள்ளே இழுக்கும் பொழுது, அதிலுள்ள ஆக்ஸிஜனைப் பெற்று இரத்தம் சுத்தமடைந்து, தன்னிடமுள்ள காற்றுக் கழிவுகளை கரியநில வாயுவாக மாற்றி மூக்கின் மூலம் இரத்தம் இருவழிகளில் சுத்தமடைந்து உடல் சுறுசுறுப்பு அடைகிறது.

நமது உடலில் கழிவுகள் வெளியேற நான்கு வழிகள் உள்ளன. கழிவுகள் தினமும் உடலைவிட்டு வெளியேறினால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடலில் வியாதிகள் ஏற்படாது வலிகளும் உண்டாகாது.

1. நாம் உண்ட ஆகாரத்தில் சத்துக்கள்ஏற்றுக்கொண்டது போக மீதி சக்கையான கழிவுகள் மலமாக உடலைவிட்டு வெளி யேறுகிறது.

 2. உடலுக்கு வேண்டாத உப்புச்சத்துக்கள் வியர்வைமூலமாக, தோலின் மேல் வியர்வை துவாரங்கள் மூலமாக வெளியேற்று கிறது. இதில் தடை ஏற்பட்டால் தோல் சம்பந்தமான வியாதிகள் உண்டாகிறது.

 3. இரத்தத்தில் கலந்துள்ள கழிவுகள் சிறுநீரகத்திற்கு சென்று வடிகட்டி, கழிவுகள் சிறுநீர் மூலம் உடலிலிருந்து வெளியேறுகிறது. இரத்தம் சுத்தமாகிறது.

 4. நுரையீரலுக்குச் சென்ற கழிவுகள் நிறைந்த இரத்தம் நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆக்ஸிஜனைப்பெற்று சுத்தமடைந்து , இரத்தத்திலுள்ள கழிவுகளை கார்பன்-டை, ஆக்ஸைடு வாயுவாக மாற்றி மூக்கின் மூலம் வெளியேற்றுகிறது.

இப்படி நான்கு வழிகளிலும் வெளியேறாத கழிவுகள் உடலின் உள்ளே இருந்து இரத்த ஓட்ட தடை ஏற்படுத்தி வலியை உண்டாக்குகிறது. நாம் அவதிப்படுகிறோம்.

தலை, கழுத்து, தோள்பட்டை, முதுகு, இடுப்பு, தொடை, முழங்கால், கணுக்கால், பாதம், கைகள் வயிறு முதலிய பகுதிகளில் கழிவுகள் சேர்ந்த இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும் பொழுது வலிகளை உண்டாக்குகிறது. அந்த இடங்களில், நரம்புகளில் தேங்கும் கழிவுகள் கலந்த இரத்த ஓட்டத்தை ஓட வைத்து விட்டால் வலிகள் குறைந்து, சிறிது நேரத்தில் முற்றிலுமாக வலி போய்விடும்.

உடலில் ஏற்பட்ட வலியை நீக்க நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை பார்ப்போம்.

உடலில் வலி ஏற்பட்டுள்ள இடத்திலும், அதைச் சுற்றியும் உங்கள் ஆட்காட்டி விரலால் மெதுவாக அழுத்தம் கொடுத்துக் கொண்டே வாருங்கள். வலியுள்ள குறிப்பிட்ட இடத்தில் மட்டும் வலி தெரியும். மற்ற இடங்களில் உங்கள் ஆட்காட்டி விரலின் வெறும் விரல் அழுத்தம் மட்டுமே தெரியும். வலியுள்ள இடத்தை கண்டு கொள்ளுங்கள். அந்த இடத்தில் பத்து தடவை உங்கள் ஆட்காட்டி விரலால் சிறிது அழுத்தம் கொடுத்து, விட்டு விட்டு, திரும்ப திரும்ப அழுத்தம் கொடுங்கள். மூன்று, நான்கு தடவை அழுத்தம் கொடுங்கள். நீங்கள் திரும்ப திரும்ப கொடுத்த அழுத்தத்தினால், நரம்புகளில் தேங்கியிருந்த கழிவுகலந்த இரத்தம் மெதுவாக போக வேண்டிய இடத்திற்கு நகர ஆரம்பிக்கும். இரத்தம் ஓட ஓட நமக்கும் வலி குறைய ஆரம்பிக்கும். சிறிது நேரத்தில் முற்றிலும் வலி போய்விடும். உங்கள் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படுத்தி வலி உண்டாக்கிய கழிவு கலந்த இரத்தத்தை உங்கள் ஆட்காட்டி விரலால் தட்டுதல் மூலம் உடலில் அப்பகுதியிலிருந்து விரைவாகச் செல்ல வழி செய்துள்ளீர்கள். இது தான் உங்கள் வலி குறைவதற்கான காரணம்.

இதனால் உடலுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது. பக்க விளைவுகளும் இல்லை . மருந்து, மாத்திரை தேவையில்லை . நிகவும் சுலபமான வழி, உடலில் வலி வரும் பொழுது உங்கள் ஆட்காட்டி விரலால் அழுத்தம் கொடுத்துத்தான் பாருங்களேன்! உங்கள் உடலின் வலியைப் போக்க, உங்கள் ஆட்காட்டி விரல் ஒன்று மட்டும் போதுமே!

 

 

 

கருத்துகள் இல்லை

1: #blog-pager{clear:both;margin:30px auto;text-align:center; padding: 7px;} 2: .blog-pager {background: none;} 3: .displaypageNum a,.showpage a,.pagecurrent{padding: 5px 10px;margin-right:5px; color: #F4F4F4; background-color:#404042;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);} 4: .displaypageNum a:hover,.showpage a:hover, .pagecurrent{background:#EC8D04;text-decoration:none;color: #fff;} 5: #blog-pager .showpage, #blog-pager, .pagecurrent{font-weight:bold;color: #000;} 6: .showpageOf{display:none!important} 7: #blog-pager .pages{border:none;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);}