மாதவிடாயின் போது ஏற்படும் வலி நீங்க Relieves pain during menstruation
.
மகளிர் இலகு மருத்துவம்
மாதவிடாயின் போது ஏற்படும் வலி நீங்க Relieves pain during menstruation
மாதவிடாயின் போது ஏற்படும் வலி நீங்க
1 கருஞ்சீரகம், சோம்பு, ஓமம்-மூன்றையும் ஒன்றாகப் பொடித்து கலந்து ஒன்றரைக் கரண்டி வீதம் மூன்று வேளை உண்டு வர வலி குறையும். தொடர்ந்து உண்டு வர நாட்பட்ட வலி நீங்கும். 2.மலை வேம்பு என்ற மரத்தின் இலை, நாவல்பழ மரத்தின் இலை இவ்விரண்டையும் எலுமிச்சைப் பழ அளவு நீர் மோரில் அரைத்து வெறும் வயிற்றில் இருவேளை குடித்து வர வலி குறையும்.
மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான இரத்தப்போக்கை நிறுத்த:
1. இலவம் மரத்தின் பிசின் பொடி-100 கிராம், மாசிக்காயப் பொடி
100 கிராம் - இவ்விரண்டையும் ஒன்றாக கலந்து ஒன்றரைக் கரண்டி (8 கிராம்) நீரில் மூன்று வேளை உண்டு வர உடன் இரத்தப்போக்குக் கட்டுப்படும்.
2. சீனாக்காரம் (சட்டியிலிட்டு நீர்வற்றப் பொரித்தது ) 100 கிராம்,
காவிக்கல்-100 கிராம் இவ்விரண்டையும் தனித்தனியாக நன்கு பொடித்து ஒன்றாகக் கலந்து அதைத் தேக்கரண்டி (3 கிராம்) வீதம் மூன்று வேளை மோரில் உட்கொள்ள இரத்தப் போக்கு கட்டுப்படும்.
3. மங்குஸ்தான் பழ ஓடு, மாதுளைப்பழ ஓடு, காய்ச்சுக்கட்டி
மூன்றையும் சமபங்கு எடுத்து பொடித்து சூரணமாக்கி 5 முதல் 10 கிராம் மூன்று வேளை தினசரி உண்டு வரலாம்.
கருத்துகள் இல்லை