அறிவோமா..? நம் உடலை Read more Our human body
அறிவோமா..? நம் உடலை
இறைவனால் தோன்றிய தோன்றிய உயிர்கள் யாவையும் உன்னதமானவை. என இருப்பினும் ஆறறிவு கொண்ட இந்த மனிதகுலம் சற்று மேலானது. சித்த மருத்துவமான. நமது பாரம்பரிய மருத்துவம் உடலை கோவிலுக்கு இணையாக கூறுகிறது. இவ்வுடலும்/ பஞ்ச பூதங்களை உள்ளடக்கிய அண்டமும்) ஒன்றே என்று அறிவுறுத்துகிறது. உடலை . அறியாமல் இருக்கச் செய்கிற காய சித்தி எனும் காயகற்ப வழிநிலையை நம் மருத்துவம். உடலைக் கொண்டு அனைத்தையும் செய்யலாம் என்ற வழிமுறை கூறுவது நம் மருத்துவம். இவ்வாறு சிறப்பு கொண்ட இப்புனித உடலை அறிவது ஒரு நபரும் கலையாகும். உடலை அறியாமல் மருத்துவம் செய்தால் எந்த வித பயனும் இல்லை. உடலை அறிந்தவன் ”வைத்தியன்”, உடலை வென்றவன் "யோகி”, என்ற வழக்கை நாம் அறியலாம்.
ஒவ்வொருவரும் நவீன விஞ்ஞான முறைப்படி இரத்தப்பிரிவை எங்ஙகனம் தெரிந்து கொள்கிறோமோ அல்லது கட்டாயம் தெரிந்து கொள்ள அறிவுறுத்துகிறோமோ அதே போல கண்டிப்பாக கட்டாயம் தத்தம் உடல்நிலையை பாரம்பரிய சித்த மருத்துவ முறைப்படி அறிந்து கொள்வது மிக அவசியமாகும்.
மூன்று வித உடல்களை உள்ளடக்கியயுள்ள இவ்வுடலுக்குத் தக்கப்படி நம்முடைய நிலை, செயல்படுநிலை, சுற்றுச்சூழல் நிலை உணவு இருத்தல் நல்லது.
(1)
பருவுடல் - கண்ணால் காணும் உடல்
(2) நுணவுடல் - உணரப்படும், மனதையும், உயிர்க்காற்றையும்
மையமாகக் கொண்ட உடல்
(3)காரணவுடல் - மேற்கூறிய இரு உடல்களும் தோன்றுவதற்கு
காரணமாயும், பற்றற்றும் இருப்பது.
நுண்மையாக அறிந்து அதற வகுத்து கொள்ள வேண்டும்,
ஒவவொரு உடலுக்குள்ளும் இருக்கிற இந்த மூன்று உடல்களை " அறிந்து அதற்குத் தக்கபடி வாழ்க்கை முறையை வழி கொள்வது மிக அவசியமாகும்.
மூன்று உடல் உள்ளடக்கிய தேகமானது மனம், செயல், உடல் அமைப்பு இவைகளை பொறுத்து மூன்று வகையாக
பிரித்துக் கூறலாம். அ அவை
வாதம் - "காற்றின் அசைவுத் தன்மை அதிகம் கொண்டு உடல் அசைவை கட்டுப்படுத்துகிற - வாதவுடல் (வாததேகி)
பித்தம் - தீயின் வெம்மை தன்மையினால் உடல் வளர்சிதை
மாற்றத்திற்கு காரணமாகிய-பித்தவுடல் (பித்ததேகி)
கபம் - நீரின் குளிர்மை தன்மையில் உடல் அமைப்புக்கு காரணமாகிற கபவுடல் (கப தேகி)
பெரும்பாலும் யாவருக்கும் மேற்கூறிய தனிப்பட்ட உடல்கிடையாது. அதாவது வாததேகி. பித்த தேகி, கப தேகி என்று மூன்று உடல்களும் சேர்ந்துதான் இருக்கும். இருப்பினும் ஏதாவது ஒரு உடல் தன்மை இயல்பாக அதிகப்பட்டு தொந்தமாகத்தான்காணும்.
மொத்தம் நம்முடைய உடல் தன்மையைக் கீழ்க்கண்ட வகைகளாக பிரிக்கலாம்.
வாதத்தன்மை+வாதத்தன்மை = வாதவாத உடல் வாதத்தன்மை+பித்தத்தன்மை = வாதபித்த உடல் வாதத்தன்மை+ கபத்தன்மை = வாதகப உடல் பித்தத்தன்மை+வாதத்தன்மை -- = பித்தவாத உடல் பித்தத்தன்மை+பித்தத்தன்மை = பித்தவாத உடல் பித்தத்தன்மை+ கபத்தன்மை = பித்தகப உடல் கபத்தன்மை+வாதத்தன்மை = கபவாத உடல் கபத்தன்மை+பித்தத்தன்மை = கபபித்த உடல் கபத்தன்மை +கபத்தன்மை = கபகப உடல்
இதைத்தவிர வாதமும், பித்தமும், கபமும் மூன்றும் சேர்ந்த வாதபித்த கப உடல் உண்டு. இது மிக அரிது.
மேற்கூறிய உடலை தவிர, மேலும் பல பிரிவுகளாக பிரிக்கலாம் உதாரணமாக.
வாதம் + வாதம் + பித்தம்= வாத வாத பித்த உடல் பித்தம் + பித்தம்+ வாதம் = பித்த பித்த வாத உடல் கபம்+ கபம் + வாதம் = கப கப வாத உடல்.
இவ்வாறு இன்னும் அநேக வாத, பித்த, கப, தன்மை கொண்ட உடல்களால் அதிகம் பிரித்து அறியலாம். இவ்வாறு எத்தனை முறை பிரித்து அறிந்தாலும், முதலில் கூறப்பட்ட வாத, பித்த, கப, உடல் தன்மை குணங்கள் சிற்சில மாற்றங்கள் மட்டும் காணப்படும். அநேகம் பொதுவானவை. இதில் அதிகமாக எந்தவித பெரும் மாற்றமும் இருக்காது.
கருத்துகள் இல்லை