ocean waves




Breaking News

HELTH AND BEAUTY TIPS AND TO CREATE HEALTHY HUMAN BEINGS PLEASE FOLLOW THE OCEAN WAVES BLOGGER

சீனி வெள்ளை சர்க்கரை How To Use White Sugar

 

சீனி வெள்ளை சர்க்கரை How To Use White Sugar 

ரும்பு ஏன் அதிகம் பயிரிடப்படுகிறது?

நாம் இன்று இந்த வினாவினை எவரிடமாவது கேட்டால் உடனே நமக்கு கிடைக்கும் பதில் என்னவென்றால் சர்க்கரை தயாரிப்பு. வெள்ளை சர்க்கரை இன்று அனைவரின் வாழ்க்கையில் ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. சரி, இந்த சர்க்கரை தயாரிக்கத்தான் கரும்பு பயிரிடப்படுகிறதா என்று ஆராய்ந்தால் உண்மை பலருக்கு அதிர்ச்சியாக இருக்கும். ஆம். எந்த ஒரு கணத்திலும் நாம் கணக்கெடுத்து பார்ப்போமேயானால் எட்டு பூமிக்கு தேவையான சர்க்கரை நம்மிடம் இருக்கிறது. பின் எதற்காக இத்தனை கரும்பு பயிரிடப்படுகிறது என்று நாம் யோசித்ததில்லை. தண்ணீர் இல்லை என்று போராட்டம் நடத்துகிறோம். பின்னர் மிகவும் தண்ணீர் தேவைப்படும் கரும்பை அதிக அளவில் தேவை இல்லாமல் தயாரிக்கிறோம். ஏன் இந்த முரண்பாடு?

இதனை புரிந்து கொள்ள வெல்லப்பாகை பளபள சர்க்கரையாக மற்றும் தொழில்நுட்பத்தை ஆராய வேண்டும். இந்த தொழில் நுட்பத்தினால் நமக்கு கிடைக்கும் இரண்டு பொருட்கள் வெள்ளை சர்க்கரை மற்றும் சாராயம்! ஆம். சுத்திகரிப்பு முறையின் ஒரு முக்கிய உப உற்பத்தி (byproduct) சாராயம். நூறு கிலோ கரும்பிலிருந்து இருநூறு லிட்டர் மொலாசஸ் (Molasses) கசடு கிடைக்கும். இந்த திரவம் பதப்படுத்தப் சாராயத்தின் முக்கிய மூலப்பொருளான எத்தில் ஆல்கஹாலாக  (Ethyl Alcohol) மாறுகிறது. இந்தியா தான் உலகக் மொலாசஸ் கசடை அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடு என்பது மற்றொரு வேதனைக்குரிய விசயம்.

சீனி வெள்ளை சர்க்கரை How To Use White Sugar


White Sugar முதலில் வெள்ளை சர்க்கரையை பற்றி  தெரிந்துகொள்வோம். கரும்பிலிருந்து சர்க்கரையை பிரித்து எடுக்கும்நவீனமுறையில், பசு முதலான கால்நடைகளின் எலும்புதுகள்களும், வெள்ளை நிறம் கொடுக்க இரும்பிலிருந்து அகற்றும் பாஸ்பாரிக் அமிலமும் பெருமளவி பயன்படுத்தப்படுகின்றன. மேலும், அந்தச் சர்க்கரை எப்போதும் கட்டி ஆகாமல் துகள்களாக இருப்பதற்கு ஒரு இரசாயனம், நீர் புகாமல் இருப்பதற்கு ஒரு இரசாயனம், வருடங்களுக்கும் கெடாமல் இருப்பதற்கு ஒரு இரசாயனம் என ஒரு நீண்ட இரசாயனக் குளியலை முடித்துதான் நம் வீட்டிற்கு வருகிறது. இதனை ஒவ்வொரு முறை காபி அல்லது தேநீருடன் கலக்கும் பொது நினைவில் கொள்ள வேண்டும். நான் எனது குழந்தைகளிடம் இதை எல்லாம் விளக்கி நாட்டு சர்க்கரை வேண்டுமா, மாட்டு சர்க்கரை வேண்டுமா என்று நகைச்சுவையாக கேட்க தொடங்கியவுடன் எளிதில் நாட்டு சர்க்கரைக்கு மாறிவிட்டனர். உண்மையை கூற வேண்டுமானால், வெள்ளை சர்க்கரை நமக்கு தேவை இல்லாத பொருள். நாம் ஒவ்வொருவரும் நலமாக இயங்குவதற்கு நமக்கு குளுக்கோஸ் அவசியம். நாம் உண்ணும் அனைத்து உணவுகளிலும் (பாகற்காய் உடபட குளுக்கோஸ் இருக்கிறது. இதற்கு இயற்கை இனிப்பு Sugars) என்று பெயர். இயற்கை இனிப்பு, சர்க்கரை நார்ச்சத்து, இரும்புச்சத்து, தாது உப்புக்கள், வைட்டமின்கள் சேர்ந்தது இதனை உட்கொண்டால்  நம் உடல்  ரத்தத்தில் சர்க்கரை சத்தை தேவையான அளவு மட்டும்,மிக சீராக வெளியேற்றும். இது உடலுக்கும் நல்லது, ஆரோக்கியமானது. ஆனால் வெள்ளை சர்க்கரை வடிவத்தில் நாம் உண்பது செயற்கை இனிப்பு (Simple Added Sugars). இது குறுகிய நேரத்தில் மிக அதிக சர்க்க ரை சுமையை (High Glycaemic) ரத்தத்தில் ஏற்றி உள்ளுறுப்புகளை பாதிக்கும். எனவே உற்று நோக்கினால் நம் தொழில் நுட்பம் நம்மை நோயாளியாகத் தான் மாற்றுகிறது என்ற புரிதல் ஏற்படும்.

வெள்ளை சர்க்கரை நேரடி வடிவில் ஏற்படுத்தும் தீமைகள் சிலருக்கு புரிந்திருக்கலாம். ஆனால் மறைமுகமாக இந்த வெள்ளை விஷம் பன்னாட்டு நிறுவனங்களால் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்களில் கலந்துள்ளது. நாம் காலையில் தொடங்கும் பற்பசையிலிருந்து, ஹார்லிக்ஸ் காம்பிளான் போன்ற சத்து பானங்கள், பழச்சாறுகள், ஜாம், ரொட்டி, பிஸ்கட், கேக், நொறுக்கு தீனிகள் என ஒவ்வொரு பொருளிலும் ஏராளமான சர்க்கரை கொட்டப்படுகிறது. ஏன் நாம் உண்ணும் 50-50, மொனாகோ போன்ற உப்பு பிஸ்கட்டின் உறையை பார்த்தால் அதிலும் 40 சதவிகிதத்திற்கு மேல் வெள்ளை சர்க்கரையை சேர்க்கப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம். லேஸ், குர்குரே போன்ற அனைத்திலும் வெள்ளை சர்க்கரை மறைந்துள்ளது.

நம் மண்ணின் நீரை உறிஞ்சி வளர்க்கப்படும் இந்த கரும்பினால் நமக்கு கிடைக்கும் அடுத்த விஷம் சாராயம். இதனால் ஏற்படும் கேடுகள் நம் அனைவருக்கும் தெரிந்ததே. போதைக்கு அடிமையாகி சீரழிந்த குடும்பங்கள் பல. இதில் அரசாங்கமே ஈடுபடுவது வெட்கக் கேடான விசயம். விவசாயி என்பவன் உணவை விளைவிப்பதால் இறைவனாக போற்றப்படுகிறான். ஆனால் வெறும் பணத்தில் மீது மோகம் கொண்டு நமது நீர்நிலை பற்றிய அக்கறை இல்லாமல் விஷங்களை விளைவிப்பவன் விவசாயியா? உணவை விளைவிக்கும் விவசாயிக்கு கிடைக்காத மானியம் இத்தகைய விஷங்களை விளைவிப்பு கிடைக்கிறது. நமது சுற்றுசூழலையும் நீராதாரத்தையும் பாழ்படுத்தி பணத்தையே நோக்கமாக கொண்டு கரும்பு விளைவிக்க வேண்டுமா? உலகில் சர்க்கரை உற்பத்தியில் இரண்டாம் சர்க்கரை பயன்பாட்டில் முதலிடம் நம் தாய்த்திரு நாட்டிற்கே என்பது நாம் பெருமை கொள்ள வேண்டிய விஷயமா? - முக்கால் நூற்றாண்டில் பல்கிப்பெருகிய இவ்வணிகக் வளர்ச்சியும், நம்மிடையே உயர்ந்து வரும் உடற்பருமன், சர்க்கரை நோய், இருதய நோய், கேன்சர் நோயாளிகளின் எண்ணிக்கைக்க நேரடித் தொடர்பு இருப்பதை அறிவியலாளர்கள் நேரடியாக அறிவிக்கத் தொடங்கிவிட்டனர். மேலும் வெள்ளை சர்க்கரையை தவிர்த்து நாட்டு சர்க்கரை, கருப்பட்டி என்று அழைக்கப்படும் பனை வெல்லம் போன்ற பொருட்களுக்கு மாற வேண்டும். கருப்பட்டியால் நமக்கு கிடைக்கும் பயனை விட பனை மரத்தால் நம் நிலத்திற்கு கிடைக்கும் நன்மை பன்மடங்கு. நிலத்தடி நீரை உயர்த்தும் திறன் பனை மரத்துக்கே உரிய சிறப்பு. கள்ளை ஒழிக்கிறேன் என்று பனை மரங்களை அழித்தது நமது அறியாமையின் உச்சம். கள்ளை ஒழித்து விட்டு தண்ணீரை உறிஞ்சும் கரும்பை பயிரிட்டு சாராயம் தயாரிப்பது தான் நாம் அறிந்த விஞ்ஞானம்.


சீனி வெள்ளை சர்க்கரை How To Use White Sugar

"வெள்ளைச் சர்க்கரை ஒரு விஷம்!" என முன்னோடி மருத்துவர்களும் சொல்லத் தொடங்கிவிட்டனர். சர்க்கரை நோய், இரத்தகொதிப்பு முதலான பெரும்பாலான நோய்களுக்கு, கொழுப்புச்சத்தை குறை கூறும் நாம், வெள்ளைச் சர்க்கரை சேர்ந்த பொருட்களில் இருந்து கிடைக்கும் இனிப்புச்சத்தும் முக்கிய காரணம் தான் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். மேலும், மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதி, நாம் உண்டு முடிக்கையில், "உண்ட உணவு போதும்என நமக்கு அறிவிக்கிறது. ஆனால் வெள்ளைச் சர்க்கரை சேர்ந்த பண்டங்களை (கோலாபானம்/பாஸ்ட் புட்) சாப்பிடும்போது, அதிலுள்ள


சுக்ரோஸ் (Sucrose) எனும் சர்க்கரை மூலப்பொருள் அதிகப்படியாக இருப்பதால், அது மூளையின் குறிப்பிட்ட பகுதியின் செயலை அச்சமயம் பழுதாக்கி விடுகிறது. அதனால் "உண்டது போதும்" என்னும் அறிவிப்பு நமக்கு மூளையிடமிந்து கிடைப்பதில்லை. இதனால்தான், நவீன பாஸ்ட் புட் மையங்களில் உணவோடு கோலா பானங்களும் கொடுக்கப்படுகின்றன. அவர்களுக்கு வியாபாரம்! நமக்கு வியாதி! என்ன ஒரு உடன்படிக்கை பார்த்தீர்களா?

ஏன் டாக்டர், காலை காபிக்கு ஒரு ஸ்பூன், மாலை டீக்கு ஒரு ஸ்பூன்! அதுக்கு இவ்வளவு அக்கப்போரா?" என்று நீங்கள் நினைக்கலாம். அந்த காபி, டீ மட்டும் இல்லாமல், போகிற போக்கில் நாம் அருந்தும் ஒரு கோலா பானத்தில் 10 ஸ்பூன் சர்க்கரையை உள்ளிழுப்பதும், ஒரு கேக், ஜாம் பன், பப்ஸ், பிஸ்கட்டில் 3 ஸ்பூன் சர்க்கரை உண்பதும், எளிதாக நம் கண்ணை மறைக்கும் சமாச்சாரங்கள். நம் உடல் இயக்கத்திற்குத் தேவையான சர்க்கரை நம் தானியங்களிலும், காய்கனியிலும் கிடைக்கிறது. இது தவிர நாம் அதிகப்படியாக உட்கொள்ளும் அனைத்துமே தேவை இல்லாத சர்க்கரை தான் என்பதும், தேவையை மீறிய ஒரு ஸ்பூன் சர்க்கரையை எரிப்பதற்கு 20 நிமிட துரித நடைப்பயிற்சி வேண்டும் என்பதும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

இது தெரியாமல் தானோ, என்னவோ நம்மில் நான்கில் ஒருவர் சர்க்கரை நோயாளியாகவும், மூன்றில் ஒருவர் இருதய பாதிப்பு உடையவராகவும் மாறி இருக்கிறோம் என்பதை நினைவில் வைப்பது நல்லது.

நான்கில் ஒருவராக உள்ள அந்த சர்க்கரை நோயாளி பற்றிய கவலை இப்போது இல்லை. இயற்கையே அவர்களுக்கான சர்க்கரைப் பத்தியத்தைத் தந்தாகிவிட்டது! மீதமுள்ள மூவரில் நீங்களும் ஒருவராக இருந்தாலோ, உங்கள் இல்லத்தில் வளரும் குழந்தை இருந்தாலோ வெள்ளை சர்க்கரைக்கு முழுக்குப்போட்டுவிட்டு நம் பாரம்பரிய இனிப்பூட்டிகளுக்கு மாறும்   நேரம் இதுதான்!


இடித்த மாவினை வேக வைத்து வெல்லப்பாகினை சேர்த்துக்கட்டிய எள்ளுருண்டை, பாசிப்பயறு மாவு உருல அக்கார வடிசல் (சர்க்கரைப் பொங்கல்), அதிரசம், மோதகம், பணியாரம், பஞ்சாமிர்தம், பொரி விளங்காய் வகை வகையாய், இனிப்போடு உடலுக்கும் ஊட்டம் ள்ள பண்டங்களை நாம் ஒன்றும் அறியாமல் இருந்ததில்லை. ஒவ்வொன்றுமே நார்ச்சத்து, புரதம், கனிமச் சத்துக்களை வள குழந்தைகளுக்கும், விடலைப் பருவத்தினருக்கும் இனிப்பாய் அள்ளி வழங்கியவை. இவை அனைத்திற்குமே இனிப்பின் மூலப்பொருளாய் இருந்தது பெரும்பாலும் தேன், வெல்லம் மற்றும் கருப்பட்டி மட்டுமே.

நாட்டு சர்க்கரை மற்றும் வெல்லத்திலும் வெண்மை நிறம் ஏற ஆக்ஸாலிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது. இது உடலுள் சென்று சிறுநீரகக் கல்லை உண்டாக்குகிறது. கெமிக்கல் கலப்படம் அல்லாத நாட்டு சர்க்கரை / வெல்லம் கடைகளில் கிடைக்கும். இவை கருப்பு ஏறியதும், இள மஞ்சளுமாக இருக்கும். மேலும் பூச்சிமருந்து கலக்காத கரும்பு பயிர்களின் ஆர்கானிக் வெல்லமும் கடைகளில் கிடைக்கிறது. இவற்றை பயன்படுத்துவதே சிறந்தது. மேலும், நீரை உறிஞ்சம் தன்மை கெமிக்கல் கலப்படமில்லாத வெல்லத்திற்கு உண்டு. ஆதலால், பிசுபிசுத்துப் போகலாம். கவலை வேண்டாம். பானையிலோ, பீங்கான் பாத்திரத்திலோ பத்திரப்படுத்தி வைக்கலாம்.

வளரும் குழந்தைகளை அடிமைப் பழக்கத்திற்குத் தள்ளும் சாக்லட்டுகளிலிருந்து காத்து, ஆரோக்கியம் தரும் பாரம்பரிய இனிப்புக்கு மாற்றுவது ஒவ்வொரு பெற்றோரின் தார்மீகக் கடமை


 

கருத்துகள் இல்லை

1: #blog-pager{clear:both;margin:30px auto;text-align:center; padding: 7px;} 2: .blog-pager {background: none;} 3: .displaypageNum a,.showpage a,.pagecurrent{padding: 5px 10px;margin-right:5px; color: #F4F4F4; background-color:#404042;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);} 4: .displaypageNum a:hover,.showpage a:hover, .pagecurrent{background:#EC8D04;text-decoration:none;color: #fff;} 5: #blog-pager .showpage, #blog-pager, .pagecurrent{font-weight:bold;color: #000;} 6: .showpageOf{display:none!important} 7: #blog-pager .pages{border:none;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);}