இயற்கை உடல்நிலை ஆய்தல்
(வாத, பித்த, கபஉடல்கள்)
How To Make Natural Health Analysis (Rheumatism, bile, Kapha bodies)
கீழ்க்கண்ட கேள்விகள் மூன்று பகுதிகளாக உள்ளது: ஒவ்வொன்றிலும் 25 கேள்விகள் வீதம் மொத்தம் 75 கேள்விகள் உள்ளது. ஒவ்வொரு கேள்விகளையும் மிகமிக கவனமாக தக்கபடி உங்கள் உடல்நிலை, மனநிலை, செயல்நிலை ஆகியவைகளை கருத்திற்கு கொண்டு சரியாக கூற வேண்டும். 25 மதிப்பெண் - எனக்கு பொருந்தாது
50 மதிப்பெண் - ஏறக்குறைய பொருந்தும் (அல்லது)
சிலநேரங்களில் மட்டும் பொருந்தும்.
100 மதிப்பெண் - எனக்கு முழுவதும் பொருந்தும
(அல்லது) மிக அதிகமாக பொருந்தும்.
ஒவ்வொரு பகுதியிலும் உள்ள 25 கேள்விகளுக்கு பதில் கூறிய பின்பு கடைசியாக அந்த பதில் மதிப்பெண்ணைக் கூட்டிக் கொண்டு வாதம், பித்தம், கபம் என மூன்று பகுதியில் எப்பகுதியில் அதிகம் மதிப்பெண்கள் பெற்று இருக்கிறீர்கள் என்பதைப் பாருங்கள் . இரண்டாவதாக அதிக மதிப்பெண்கள் எந்த பகுதி என்பதையும் பாருங்கள் உதாரணத்திற்கு முதலாவதாக பித்தம் பகுதி அதிக மதிப்பெண்ணும், இரண்டாவதாக வாதம் பகுதி அதிக மதிப்பெண்கள் பெற்றால் பித்தம் + வாதம் = "பித்தவாதம்" என்பது உங்களுடைய உடல் நிலையாகும். அல்லது ஏதாவது ஒன்று அதிகமும், மற்ற இரண்டும் சரி சம் மதிப்பெண்கள் என்றால் அதிகப்பட்ட உடல் நிலையை மட்டும் கருத்தில் கொள்ள வேண்டும், மூன்றுமே சரிசம மதிப்பெண்கள் எனில் திரும்ப திரும்ப இக்கேள்விகளை படித்து விடை காண வேண்டும், அல்லது குழப்பமாக இருந்தால் அருகிலுள்ள சித்த மருத்துவரை நாட்ட வேண்டும்.
பகுதி - (அ) வாதம்
1. என்னுடைய செயல்பாடுகள், செய்கைகள் மிக வேகமாக இருக்கும்
2. எனக்கு நல்ல ஞாபக சக்தி கிடையாது இருப்பினும் சிறிது
நேரத்திற்கு பின் ஞாபகத்திற்கு வந்துவிடும்.
3. எனக்கு இயல்பாகவே துடிப்புடன் அதிக வேகத்துடன், படபடப்புடன் செயல்படக்கூடிய குணமுண்டு.
4. என்னுடைய உடல் மெல்லியது. உடல் எடை மிக எளிதில்
அதிகரிக்காது, உடல் இலேசானது.
5. நான் வெகு சீக்கிரத்தில் புது புது விஷயங்களை அறிந்து
கொள்கிறேன்.
6. என்னுடைய நடை வேகமாகவும், இலேசாகவும் இருக்கும்.
7.எனக்கு ஏதாவது முடிவு (அ) தீர்மானம் எடுப்பதற்கு இயல்பாகவே சிரமம் உண்டு.எளதில் தீர்மானம் எடுக்க முடியாது.
8. எனக்கு வாயு தொந்தரவு (அ) மலச்சிக்கல் இயல்பாகவே ஏற்பட வாய்ப்புண்டு.
9. என்னுடைய கை, கால், பாதங்கள், குளிர்மையாக இருக்க
வாய்ப்புண்டு.
10. நான் அடிக்கடி கோபம் (அ) கவலையால் பாதிக்கப்பட வாய்ப்புண்டு
11. மற்றவர்களை போல எனக்கு குளிரை தாங்கச் சக்தி கிடையாது.
12. நான் மிக வேகமாக பேசுவேன். இதனால் நண்பர்கள் என்னை "வாயாடி" என்று அழைப்பார்கள்.
13, எனது உணவு பழக்க வழக்கம், தூக்கம் பழக்கம் இயல்பாகவே மாறுபட்டதாகவே இருக்கும்.
14. நான் சீக்கிரத்தில் புரிந்து கொள் வேன், அதே சமயத்தில்
சீக்கிரத்தில் மறந்து விடுவேன்.
15. நான் புளிப்புச் சுவையும், உப்புச் சுவையும் இயல்பாகவே அதிகமாக விரும்புவேன்.
16. எனக்கு சீரணசக்தியும், நீர் தாகமும் மாறுபட்டு ஒழுங்கீனமாக இருக்கும்.
17. என்னுடைய பற்கள் மங்கிய வெண்மை நிறத்துடனும்,
ஒழுங்கீனமாகவும், வெடிப்பு வரும்படியாகவும் இருக்கும்,
18. எனது முடி சற்று ப்ரௌன் நிறத்திலும் உலர்ந்தும், கருமை
நிறத்துடன் இருக்கும்.
19. எனது உதடு உலர்ந்தும், சிறிது வெடித்தும், கருமையாகவும்,
மென்மையாக சிறிதாக இருக்கும்.
பகுதி - ( ஆ ) பித்தம்
1.நான் மிக திறமையானவன் என்றும் நன்றாக செயல்படக் கூடியவன் என்றும் எனக்குத் தெரியும்.
2. என்னுடைய செயல்பாடுகள், நடவடிக்கைகள் மிக நேர்மை ஆகவும் மிக சரியாகவும், ஒழுங்காகவும் இயல்பாகவே அமைந்திருக்கும்.
3. நான் நல்ல உறுதியான மனத்திடத்துடனும், சற்று தூண்டும்
உந்துதல் சக்தியுடன் இருக்கும்.
4. கடும் வெயிலை (அ) உஷ்ணத்தால் எளதில் சோர்வு அடைந்து விடுவேன் (அ) என் உடல், மனம் அதை (ஒத்துழைக்க அவதிப்படும்) ஏற்றுக் கொள்ளாது.
5.இயல்பாக எளிதில் எனக்கு வியர்வை அதிகம் வரவாய்ப்புண்டு.
6. நான் எளிதில் எரிச்சலும், கோபமும் அடைவேன், இருப்பினும் எப்போதும் அதை வெளிப்படுத்த மாட்டேன்.
7. சரியான உணவு நேரத்திற்கு உண்ணாமலோ (அ) காலந்
தாழ்த்தியே உண்ணுவது என்னால் ஏற்றுக் கொள்ள முடியாததாகி விடும்.
8.இளநரையும், சீக்கிரத்தில் தலை வழுக்கையும் வர வாய்ப்புண்டு, மெல்லிய, நீளமான சந்தன (அ) செந்நிறத்தில் ஓடியும் தன்மையுடன் முடியானத காணும்.
9.எனக்கு மிக நன்றாக பசி உண்டு, நினைத்தால் நல்ல பசியில் மிக அதிகமான அளவு உண்ண முடியும்.
10. எனக்கு இயல்பாக மலம் சரிவர கழியும், மலச்சிக்கலை விட இலகுவாக கழிச்சல அதிகமாக வர வாய்ப்புண்டு.
11. மிக எளிதில் இரக்கப்படும் தன்மை உண்டு.
12. திடமான மனநிலை என்று பலரும் நினைக்கும் வகையில் இருக்கும். எளிதில் என் மனநிலையை மாற்றிவிட முடியாது. 13. ஒழுங்கான, சரியான கருத்துக்களை மட்டுமே ஏற்றுக் கொள்ள கூடிய மனநிலை உண்டு. எந்த ஒரு குறிப்புகளுக்கு சரியான விளக்கம் கேட்கும் திறனுள்ளவன்.
14. எளிதல் கோபப்படுவேன் ஆனால் எளிதில் அதை மறந்துவிடுவேன், மனதில் வைக்கமாட்டேன்.
15. எனக்கு குளிர்ந்த உணவுப் பொருட்கள் மீது அதிக ஆர்வமுண்டு.
16. ஒரு அறையில் குளிர்ச்சியை விட, சூட்டை எளிதாக உணரும் தன்மை உடையவன், உடன் என் உடல் மனம் எளிதில் வெளிக்காட்டிவிடும்.
17. என்னால் மிக சூடான உணவுக-ளையும், காரம், உணவையும் ஏற்றுக் கொள்ளமுடியாது, உடலும் ஏற்றுக் கொள்ளாது.
18. இனிப்பு, கசப்பு சுவைகள் அதிகம் பிடித்தமானவை 19. நீர்த்தாகம் அடிக்கடி ஏற்படும் மிக அதிகமாக உணர்ச்சிவசப்படக்
கூடிய தன்மையுண்டு.
20. உதடு மென்மையாகவும், ஈரமுடனும், சிவப்பு நிறத்துடனும், இருக்கும்
21. பற்கள் சிறிதாகவும் மஞ்சள் நிறத்துடன் காணப்படும்.
22. தோல் மென்மையாகவும், சற்று இளம் சூட்டுடன் காணும்.
23. சப்தங்களை, சவால்களை சந்திக்க ஆசைப்படக் கூடிய
திறணுண்டு, காரியங்களை நன்கு திட்டம் தீட்டி, சரிவர செயல்பட்டு சக்திகளை சரிவர செலவழிக்க கூடிய விவேகமுண்டு.
24. கூடியவரை மற்றவர்களின் தவறு - களையும், எனது தவறுகளையும் கண்டறிந்து கூறக்கூடிய தன்மை இயல்பாக அமைந்திருக்கும்.
25. நாக்குப்புண், பல் ஈறுகளில் இரத்தம் அடிக்கடி வரல், தலைச்சுற்று, படபடப்பு, வாகன போக்குவரத்தில் வாந்தி ஆகியன அடிக்கடி ஏற்பட வாய்ப்புண்டு.
பகுதி - ( இ) கபம்
1.நான் இயல்பாகவே மெதுவாகவும், படபடப்பு இன்றியும் இருப்பேன்.
2.உடல் (எடை) மற்றவர்களைவிட மிக எளிதில் பருத்துவிடும். அதே சமயத்தில் மற்றவர்களைவிட மிக மெதுவாகத் தான் உடல் எடை குறையும்.
3. எளிதில் எரிச்சல், உணர்ச்சி வசப்படக் கூடியவன் அல்ல, அமைதியாகவும், பொறுமையாகவும் இருப்பேன். தொந்தரவுகளை கண்டு எளிதில் ஆவேசமடையமாட்டேன். 4.பசியை பொறுத்துக் கொள்ளும் சக்தி உண்டு. ஒருவேளை உணவு உண்ணவில்லை என்றாலும் எனக்கு எந்தவித பாதிப்பு இருக்காது.
5. சளி, இருமல், மூக்கடைப்பு (ஆஸ்த்மா ) இரைப்பு, நீர்க் கோர்வை (சைனஸ்) ஆகிய பிணிகள் இயல்பாகவே அதிகம் ஏற்பட வாய்ப்புண்டு.
6. எனக்கு மிக நல்ல தூக்கம் இருந்தால் தான் அடுத்த நாள் என்னால் சரிவர பணிகள் செய்ய முடியும், குறைந்தது 8 மணி நேரம் தூக்கம் தேவை.
7.தூங்கும்போது எனக்கு மிக ஆழ்ந்த உறக்கம் உண்டாகும்.
8. நான் மிக அமைதியாக இருப்பேன், எளிதில் கோபப்படமாட்டேன்.
9. என்னால் எளிதில் எதையும் புரிந்து கொள்ள முடியாது. இருப்பினும் எனக்கு வெகுநாள் ஞாபகத்திறனும் அதனை வெளிப்படுத்தும் விதமும் மிக நன்றாக இருக்கும்.
10. குளிர்ச்சியும், சூடும் இதைக் கண்டு அதிகம் கவலையில்லை
இதனை தாங்கும் திறன் உண்டு.
11. எனக்கு குளிரும், ஈரமும் (ஈரக்காற்றும்) பாதிப்பை ஏற்படச் செய்யும் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது.
12. என்னுடைய முடி கடினமாகவும், கருமையாகவும் அடர்த்தியாகவும் அதிகமாகவும் இருக்கும்.
13. என்னுடைய தோல் மென்மையாக ஆகவும், இலேசாகவும் வெளுப்பு நிறத்துடன் இருக்கின்றது.
14. எனது தேகம் அதிக உயரமாகவும், தடித்தும் பருத்தும்
காணப்படுகிறது.
15. இயல்பாகவே இனிமையான அமைதியான பாசமுடைய எதையும் மன்னிக்கும் குணங்கள் உண்டு.
16. எனக்கு இயல்பாகவே சீரணம் மெதுவாகவே நடை பெறும்
சீரணச்சக்தியின் வேகம் குறைவு. எனவே உணவு உண்டவுடன்,
வயிறு அதிகம் உண்டது போல் தென்படும்.
17. எனக்கு வளமான உடற்கட்டும், வலுவான உடல் சக்தியும்
இருக்கின்றது.
18. நான் பொதுவாக மெதுவாக நடப்பேன். நடை ஒன்று போல்
இருக்கும்.
19. எனக்கு இயல்பாகவே அதிக தூக்கமும், எளிதில் கண் விழிக்க முடியாத தன்மையும் காணப்படும்.
20.நான் மெதுவாக உணவு உண்பேன், என்னுடைய செயல்பாடுகளும், செய்கைகளும் மெதுவாகவும், நிதானமாகவும் இருக்கிறது.
21. புளிப்பு, துவர்ப்பு சுவைகள் அதிகம் பிடித்தமானவை.
22. பெரிய தடித்த கண் இமைகளும், எளிதில் கவரக் கூடியதாகவும் இருக்கும்.
23. உதடு கடினமாகவும், வெளுப்பு நிறத்துடனும் காணப்படும். 24. பற்கள் மிக பெரியதாகவும், வலுவாகவும், வெண்மை நிறத்துடனும் காணப்படும்.
25. நெஞ்சு அகலமாகவும், பலமாகவும் இருக்கும், பொருத்துகள் நன்கு சதையால் சூழப்பட்டு உறுதியாகவும் கடினமாகவும் காணப்படும்.
மொத்த மதிப்பெண்கள்
அ) வாதம் ஆ) பித்தம் இ) கபம் என்னுடைய உடல் நிலை
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக