ocean waves




Breaking News

HELTH AND BEAUTY TIPS AND TO CREATE HEALTHY HUMAN BEINGS PLEASE FOLLOW THE OCEAN WAVES BLOGGER

தினசரி நாம் பருகும் நீர் வகைகளும் அதன் குணங்களும் How To Make Drink Water Types And Properties

தினசரி நாம் பருகும் நீர்

வகைகளும் அதன் குணங்களும் How To Make Drink Water Types And Properties

1. பழைய சோற்று நீர்

கிராமப்புறங்களில் பெரும்பாலும் பருகப்படுகின்றது. இதனால் பித்த மயக்கம், சோபை வீக்கம், அசீரணம், வாத நோய்கள் ஆகியன நீங்கும். மருந்துண்ணும் காலத்தில் இதனை விலக்க வேண்டும்

தினசரி நாம் பருகும் நீர்  வகைகளும் அதன் குணங்களும் How To Make Drink Water Types And Properties

2.சுத்தமான நீர்:

 வாத, பித்த, கப நோய்களை நீக்கும். உடல் வறட்சியை போக்கும்உடல் சக்தியை மிகுபடுத்தி அழகுதரும்.

3. வெந்நீர் :

புளித்த ஏப்பம், குன்மம் எனப்படும் வயிற்றுப் புண்கள், காய்ச்சல், இருமல், வயிற்றுக் கழிச்சல் ஆகியன நீங்கும்

4.காய்ந்து ஆறிய வெந்நீர்:

விக்கல், அசீரணம், பித்த நோய், மூர்ச்சை , வாந்தி, மயக்கம், மேகம், கண்-காது நோய்கள், கால்-கை உளைச்சல், இருமல்-சளி, வாத நோய் ஆகியனத் தீரும்.

5. கருங்காலி ஊறிய நீர்

கேரளத்தில் பெரும்பாலும் பருகி வரும் நீராகும். இதனால் தோல் நோய்கள், பித்த இருமல், இளைப்பு, பித்தத்தினால் ஏற்படும் வயிற்றுப்பிணிகள், வயிறு-உடல் வீக்கம், நீரழிவு, வயிற்றுப்பூச்சிகள், திமிர்வாதம் உள்ளிட்ட நோய்கள் உடலில் அண்டாது காக்கும்.

 

 

 

6.சீரக வெந்நீர்:

இரத்தச் சூடு, இரத்தக் கொதிப்பு, தலைச்சுற்று, பித்த நோய்கள், வயிறு, குடல் பிணிகள், உடல் சூடு, மயக்கம், மூர்ச்சை , வாயுப்பிணிகள், ஆகியனத் தீரும்

(ii). பாத்திர பேதங்களில் ஏற்படும் நீரின் 

குணங்கள் 

நீரை நன்கு காய்ச்சி, தாமிரப் பாத்திரத்தில் வைத்து இருந்து பருகும் போது கண் நோய்களும், இரத்தத்தில் உண்டாகும் பித்த நோய்களும் நீங்கும்

வெண்கலப் பாத்திரத்தில் வைத்திருந்து பருகும்போது இரத்த விருத்தி உண்டாகும்

வெள்ளிப்பாத்திரத்தில் வைத்திருந்து பருகும் போது கபநோய் உஷ்ணச் சூடு, தாகம், வயிற்றுப்பிணிகள் நீங்குவதுடன் உடல் வன்மை உண்டாகும்

பஞ்சலோகப் பாத்திர நீரால் வாத, பித்த, கபம் எனப்படும் முக்குற்றங்களும் விலகும்

இரும்புப் பாத்தி நீரால் பாண்டு, சோகை நோய் விலகும், உடற்பலமும். நரம்பு பலமும் கிடைக்கும்.

மண் பாத்திர நீர்

பித்தச் சூடு, மேக நோய்கள், பித்த மயக்கம், பித்த மூர்ச்சை , நீர்க்கட்டு, நீர் எரிச்சல், உடற் வறட்சி ஆகியன நீங்கும். மனக்குளிர்ச்சி, நரம்பு உறுதி, விந்துச் சக்தி மேம்படல் ஆகியன உண்டாகும். நாவிற்கு ருசியையும், கண்ணிற்கு குளிர்ச்சியைத் தரும்

எவர்சில்வர், அலுமினிய, பிளாஸ்டிக் பாத்திரங்கள் எதுவும் பழங்கால நூற்களில் கூறப்படவில்லை. இருப்பினும் மாறுபட்ட பாத்திரங்களால் உடலுக்கு துன்பம் விளையும் என்று கூறப்பட்டுள்ளது

 

 

 


கருத்துகள் இல்லை

1: #blog-pager{clear:both;margin:30px auto;text-align:center; padding: 7px;} 2: .blog-pager {background: none;} 3: .displaypageNum a,.showpage a,.pagecurrent{padding: 5px 10px;margin-right:5px; color: #F4F4F4; background-color:#404042;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);} 4: .displaypageNum a:hover,.showpage a:hover, .pagecurrent{background:#EC8D04;text-decoration:none;color: #fff;} 5: #blog-pager .showpage, #blog-pager, .pagecurrent{font-weight:bold;color: #000;} 6: .showpageOf{display:none!important} 7: #blog-pager .pages{border:none;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);}