இரத்தக் குழாயில் அடைப்பு சரியாக How To Lose Blood Vessel Blockage
இரத்தக் குழாயில் அடைப்பு சரியாக
இன்றைய சூழ்நிலையில் யாருக்கு வேண்டுமானாலும் எந்த நேரத்திலும், ஆரோக்கியம் இல்லாமல் போகலாம் (ஹார்ட் அட்டாக் வரலாம்). ஐந்து நிமிடத்தில் உயிர் போனவரும் உண்டு. ஐந்து மணிநேரம் தாக்குபிடித்து வைத்தியம் பார்த்து உயிர் பிழைத்தவரும் உண்டு. ஹார்ட் அட்டாக்கிற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்.
ஆனால் ஹார்ட் அட்டாக்கிற்கு இருதயம் மட்டும் காரணம் அல்ல! |
இருதயம் ஒரு பம்பிங் ஸ்டேஷன் மட்டுமே. தனக்குள் வரும் இரத்தம் ஒரே சீராக வராமல் இருக்கும்பொழுது இருதயம் திணறும். அதே மாதிரி தனக்குள் வந்த இரத்தத்தை அழுத்தமாக வெளியே போகும் இரத்தக்குழாய்க்குள் தள்ளும்போது சரியாக போகாவிட்டால் வலி ஏற்படும். இருதய துடிப்பும் நிற்க துவங்கும். இதுவே ஹார்ட் அட்டாக். இப்பொழுது உடலில் நுரையீரல் காற்றை உள்ளே இழுத்து, வெளியில் விடுவதை நிறுத்த ஆரம்பிக்கும். இந்த நிலையில் மருத்துவமனையில் டாக்டர்கள் நுரையீரல் பகுதியை மேலும் கீழுமாக அழுத்தி, அந்த உடல் சுவாசித்து மூச்சை இழுத்துவிட முயற்சி செய்வார்கள்.
முடியாதபொழுது செயற்கை முறையில் அந்த உடல் சுவாசிக்க ஆக்ஸிஜன் சிலிண்டர் குழாயில் இணைத்த முகமூடியை மூக்கின் மேல் மாட்டி சுவாசிக்க விடுவார்கள். சில நேரங்களில் லேசான மின் அதிர்ச்சி கொடுத்து நுரையீரலை இயக்க முயற்சி செய்வார்கள்.
சில நேரங்களில் முயற்சி வெற்றி பெறும். சில நேரங்களில் முடியாமல் போகும்.
இருதயத்திற்கு வரும் இரத்தக் குழாயிலும், வெளியேறும் இரத்தக் குழாயிலும் கடுமையான அடைப்பு காரணமாக, இருதயம் இரத்தத்தை பம்ப் செய்யமுடியாது. அப்பொழுது ஹார்ட் பீட் குறைய ஆரம்பிக்கும் அவரது நுரையீரல் காற்றை உள்ளே இழுத்து வெளியே விடும் செயலும் சிறிது சிறிதாக ஸ்தம்பிக்க ஆரம்பிக்கும். இருதய துடிப்பு குறைய ஆரம்பிக்கும். இரத்தம் உடலில் ஓடாததால் உடல் ஜில்லிட்டு உயிர் போய்விடும். இந்த நிலை உடலில் உடனே ஏற்படுவதில்லை. இதற்கு முன் இரண்டு தடவை இதேமாதிரி லேசாக ஏற்பட்டிருக்கும். இது மூன்றாவது தடவை. இந்த தடவை கடுமையாக ஏற்பட்டிருக்கிறது.
சிறிது காலமாகவே அவருடைய இரத்தக்குழாய்களில் கால்சியமும், கொழுப்பு சத்தும் படிந்து இரத்த ஓட்டத்தை தடை செய்திருக்கும். சில வேளைகளில் அவருக்கு மூச்சுத் திணறல் வர ஆரம்பிக்கும். அப்பொழுதே இரத்தக் குழாய்களில் படிந்துள்ள கால்சியத்தையும், கொழுப்பையும் சிறுநீரில் வெளியேற்றியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.)
இதற்கு எளியவழி இரத்தக் குழாய்களின் உட்பகுதியில் கால்சியமும், கொழுப்பும் படியாமல் இருக்க முயற்சி செய்திருந்தால் அடைப்பு ஏற்பட்டிருக்காது. இந்த அடைப்பு ஏற்படாமல் நம்மால் செய்ய முடியும்.
கால்சியம் உடல் உறுதியாவதற்கும், எலும்புகள் வளர்ந்து உடலை தாங்கும் சக்தி பலமாவதற்கும் வேண்டும். உடலில் கால்சியம் சேமித்து வைக்க முடியாது... தேவைக்கு போக மீதம் இருக்கும் கால்சியம் சிறுநீரில் வெளியேறிவிடும். இதை நம் உடல் செய்துவிடும்.
கொழுப்பு அவசியம் தேவை உடலுக்கு, தேவையான கொழுப்பு சத்தை நமது உடலிலுள்ள கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. தேவையான கொழுப்பு மட்டுமே சேமிக்கப்படுகிறது. மீதம் உள்ள கொழுப்புகள் மனிதனின் தசைப்பகுதியில் தேங்க ஆரம்பிக்கிறது. இப்பொழுதுதான் உடல் பருமனாக குண்டாக ஆக்கப்படுகிறது. இப்படித்தான் உடல், கணமான தோற்றத்தை உருவாக்கிக் கொள்கிறது. மேலும், மேலும் கொழுப்பு சத்து உணவையே உட்கொள்ளுவதால், இரத்தக் குழாய் உட்புறமும் கொழுப்பு படிய ஆரம்பிக்கிறது.
கொழுப்பும் நரம்புகளின் பாதையை குறுகலாக ஆக்கிவிடுகிறது. இதனால் இருதயத்திற்கு வெளியேயும், உள்ளேயும் செல்லும் நரம்புகளில் முற்றிலும் தடை ஏற்படுத்தி இரத்தம் இருதயத்திற்கு உள்ளே செல்ல முடியவதில்லை . இருதயம் செயல் இழந்து ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு மரணம் சம்பவிக்கின்றது.
இதற்கு எளிய வழி ஒன்று இருக்கிறது. 'சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை
சுப்ரமணிய சுவாமிக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை ' என்று கிராமங்களில் கூறுவார்கள்.
பிரசவித்த தாய்மார்களுக்கு சிறிது காலத்திற்கு பிறகு இஞ்சி சாறு எடுத்து கஷாயம் செய்து தருவார்கள். பிரசவித்த கர்ப்பப்பை சுருங்கி உடலில் அது இருந்த இடத்தில் பழையபடி அமைந்து, அடுத்த பிரசவம் ஆரோக்கியமாக இருப்பதற்கும் தயாராகி விடும்.
கிராமங்களில் சுக்குமல்லி காபி குடிப்பது வழக்கம்.
இது ஒரு ஆரோக்கிய பானம். இதன் விபரம் அறிந்தவர்கள் இன்றும் இந்த காபியை அருந்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்த காபியை காலையும், மாலையும் அருந்திவந்தால் நரம்புகளில் படிந்து இரத்த ஓட்டத்தை தடை செய்யும் கால்சியத்தையும் கொழுப்பையும் முற்றிலும் கரைத்து, சிறுநீரில் வெளியேற்றிவிடும். இருதயத்திற்கு இரத்த நாளங்களிலிருந்து இரத்தம் தடையில்லாமல் வந்து உடம்பிலுள்ள எல்லா பாகங்களுக்கும் இரத்தம் தடையில்லாமல் போய் சேரும். ஹார்ட் அட்டாக் வரவே வராது. இரத்தம் வேகமாக சீராக உடலின் எல்லா பாகங்களில் உள்ள நரம்புகளில் ஓடுவதால் எந்த வகை வலிகளும் ஏற்பட வழியில்லை . இடுப்புவலி, முதுகுவலி, கால் வலி, கைவலி, தலைவலி, கழுத்துவலி எந்த வலியும் ஏற்படாமல் ஆரோக்கியமாக இருக்கலாம். கொழுப்பை கரைக்கும் சக்தி கொத்துமல்லி விதைக்கு உண்டு.
சுக்குமல்லி காபியை நாமே தரமாக தயாரித்துக் கொள்ளலாம். அந்த முறையைப் பார்ப்போம். தரமான நாட்டு மருந்து கடையில் நூறு கிராம் சுக்கு வாங்கிக் கொள்ளுங்கள். சுக்கை நன்றாக பதப்படுத்தி வைத்திருப்பார்கள். இஞ்சிதான் காய்ந்து சுக்காக மாறுகிறது. இஞ்சி தரையின் கீழ் பூமியில்உண்டாகிறது. இஞ்சி தனக்கு வேண்டிய காரசத்தினை, பூமியிலிருந்து உறிஞ்சும்போது வேண்டாத கழிவுகளை, இஞ்சியின் மேல்தோல் தடுத்து காரசத்தை மட்டும் இஞ்சி எடுத்துக் கொள்கிறது. |
இஞ்சியை நாம் சமையலுக்கு பயன்படுத்தும்போது தோலை நன்றாக சீவி எடுத்து விட்டுத்தான் பயன்படுத்தவேண்டும். அதேபோல சுக்குமல்லி காபிக்கு பயன்படுத்தும் பொழுது, சுக்கின் மேலுள்ள தோலை நன்கு அறவே நீக்கித்தான் பயன்படுத்தவேண்டும். நீங்கள் வாங்கிய சுக்கை நன்றாக கத்தியால் தோலை நீக்கி, ஒரு மண்சட்டியில் போட்டு சூடாக்கி வறுத்தெடுங்கள், பொன்வறுவலாக லேசாக வறுத்தால் போதுமானது. கருகவிட்டு விடாதீர்கள். பிறகு 50 கிராம் கொத்தமல்லி விதையை புதியதாக உள்ளதையும், மண்சட்டியில் போட்டு பொன்வருவலாக லேசாக, வாசனை வரும்படி வறுத்தெடுங்கள். இரண்டு பொருட்களையும் நன்றாக பொடி செய்து கொள்ளுங்கள். இப்பொழுது சுக்குமல்லி காபி பொடி தயார்.
அடுப்பில் இரண்டு டம்ளர் நீர் வைத்து கொதிக்க விடுங்கள். இப்பொழுது சுக்குமல்லி காபி பொடியை இரண்டு கரண்டி அளவு போட்டு சிறிது நேரம் கொதிக்க விடுங்கள். பிறகு அதில் உங்கள் ருசிக்கு ஏற்ற அளவு பனங்கருப்பட்டி சேர்த்துக் கொள்ளுங்கள். சுக்கின் காரம் நம் நாக்கு ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு மிக குறைவான அளவே பனங்கருப்பட்டி சேர்க்க வேண்டும். எந்த காரணம் கொண்டும் வெள்ளை சர்க்கரையை கண்டிப்பாக சேர்க்கக்கூடாது. சர்க்கரையை சிலபேர் அ-ஜீனி என்று கூறுவார்கள். இதேபோல பாலும் சேர்க்கக் கூடாது. |
இந்த பானத்தை தினசரி காலை மாலையில் பருகிவந்தால், உங்கள் ரத்தக்குழாயில் படிந்துள்ள கால்சியமும், கொழுப்பும் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து, சிறுநீரில் வெளியேறிவிடும். ஹார்ட் அட்டாக் எந்த காலத்திலும் வராது. இரத்த தடையினால் ஏற்படும் வலிகள் ஏதும் வராது. இது ஒரு ஆரோக்கிய பானம். இது மருந்தில்லா மருத்துவம். சுக்கும் மல்லியும் நாம் பயன்டுத்தும் சமையல் அறை பொருட்களே இதனால் எந்த பக்கவிளைவுகளும் உண்டாகாது. நாம் செய்து பயனடையலாமே!
கருத்துகள் இல்லை