ocean waves




Breaking News

HELTH AND BEAUTY TIPS AND TO CREATE HEALTHY HUMAN BEINGS PLEASE FOLLOW THE OCEAN WAVES BLOGGER

முழங்கால் வலி, மூட்டு வலி தீர்வு How To Improve At Knee Pain joint pain In few Month

 

முழங்கால் வலி, மூட்டு வலி  தீர்வு  How To Improve At Knee Pain  joint pain In few Month


ஆரோக்கியமான வீட்டை அமைத்துக் கொள்ளுங்கள்!

 

காலத்தின் மாற்றத்தால் கடுமையான விலை ஏற்றத்தால், நடுத்தர குடும்பங்கள் வீட்டு வாடகை கொடுத்து சிக்க முடியாத ஏக்கத்தால், எப்படியாவது ஒரு சொந்த வீடு கட்டிக் கொள்ள வேண்டும் என்ற தகுதிக்கு மீறிய ஆசையால் தூண்டப்படுகிறார்கள். T.V.யில் வரும் விளம்பரத்தைப் பார்த்து மனம் தடுமாறுகிறார்கள். சின்னத்திரை நடிகர்களும், நடிகைகளும் பேசும் கவர்ச்தியான பேச்சுக்களால், அவர்கள் குறிப்பிடும் வீட்டுமனைகளை, தாங்கள் வாங்கியதாகவே கனவு காணுகிறார்கள். வீட்டுமனை அருகிலேயே கல்லூரிகள், பிரசித்தி பெற்ற கோயில்கள், 10 நிமிடங்கள் நடந்தால் மெயின் ரோடு, சுத்தமான காற்று, சுவையான குடிநீர், இருபத்தி நான்கு மணிநேரமும் எங்கு செல்ல வேண்டுமானாலும் வசதியாக செல்ல போக்குவரத்து வாகன வசதிகள் என்று அவர்கள் பேசும் அழகில் மெய்மறந்து போகிறார்கள். இந்த போன் நம்பருக்கு நீங்கள் தொடர்பு கொண்டால், நாங்களே உங்கள் இருப்பிடத்திற்கு வந்து சொகுசு பஸ்ஸில் அழைத்துச் சென்று, காலை, மதியம் சுவையான உணவுகளுடன் கூட, நீங்கள் வாங்கும் வீட்டு மனையை காண்பிக்க, அழைத்துச் செல்ல காத்திருக்கிறோம் என்று விளம்பரம் செய்கிறார்கள். பரிசுப் பொருட்களுடன் தங்க நாணயங்களும், கொடுப்பதாக அறிவிப்பு செய்கிறார்கள்.

நகரங்களிலும், கிராமங்களிலும், முக்கியமான இடங்களில் டிஜிட்டல் போர்டில், வீட்டின் அழகான தோற்றத்தைக் கட்டுவதற்கு முன்பாகவே கட்டப்பட்டுள்ளதாக

விளம்பரம் வைக்கப்படுகிறது. அந்தப் படத்தைப் பார்ப்பவர்கள், இவ்வளவு அழகான வீட்டை , இவ்வளவு வசதிகளுடன் தாமே வாங்கியதாக நினைத்து மகிழ்கிறார்கள்.

இடம் வாங்கி வீடு கட்டி விற்பவர்கள், நல்ல விலைக்கு விற்க வேண்டும் என்ற எண்ணத்தால் வீட்டின் உள்புறம் முழுவதும் பளபளப்பான டைல்ஸ் பதித்தோ, அல்லது சலவைக்கல் பதித்தோ பளபளவென்ற தோற்றத்தில் விற்று விடுகிறார்கள். வீடு வாங்குபவர்களும் வீட்டின் தரை பளபளப்பில் மயங்கி சொன்ன விலைக்கு வாங்கி குடியேறுகிறார்கள். வாசல் படி முதல், சமையல் அறை, பாத்ரூம், கழிவறை முதற்கொண்டு எல்லா இடத்திலும் பளபளப்பு டைல்ஸ் பிரகாசிக்கிறது.

முழங்கால் வலி, மூட்டு வலி  How To Improve At Knee Pain  joint pain In few Month

வீடு வாங்கிய சி மாதங்களிலேயே அதில் வசிப்பவர்களுக்கு, தொல்லைகள் ஆரம்பிக்கிறது. வயதானவர்களாக இருந்தால், தரையில் தண்ணீரோ அல்லது எண்ணையோ விழுந்திருந்தால், 'டைல்சின் பளபளப்பில் தெரிவதில்லை. தெரியாமல் சிந்திய தண்ணீரிலோ, எண்ணையிலோ காலை வைத்தால் வழுக்கி விழுந்து இடுப்போ அல்லது காலோ உடைந்து மாவு கட்டு போட்டு நிரந்தர நோயாளியாக படுக்கையில் கிடக்கிறார்கள். அவர்களை பராமரிப்பதற்கே தனியாக ஒரு நபர் நாள் முழுவதும் அருகிலேயே இருக்கவேண்டும். இளைஞர்களாக இருந்தால் வழுக்கி விழாமல் சமாளிக்கிறார்கள். என்றாவது ஒருநாள் அவர்களுக்கும் எலும்பு முறிவு ந்து சேரும். மேலும் பலருக்கு மூட்டு வலி, முழங்கால் வலி, கணுக்கால் வலி, பாதவலியால் நாள் முழுவதும் அவதிப்படுகிறார்கள். வாங்கிய வீடு ராசியில்லையோ என்று வாஸ்து பரிகாரம் செய்பவர்களும் இருக்கிறார்கள்.

மூட்டு வலி, முழுங்கால் வலி, கணுக்கால் வலி, பாதவலி முதலியவைகள் பளபளப்பான டைல்ஸ்தினாலும், மார்பிள் சலவைக் கல்லினாலும் வருகிறது என்று பல பேர் உணர்வதே இல்லை! தெரிவதும் இல்லை.

டைல்ஸ்சும், மார்பிலும் சுற்றுச் சூழ்நிலையில், வெய்யில் காலத்தில் அதிக உஷ்ணத்தையும், குளிர் காலத்தில் அதிக குளிர்ச்சியையும் கிரகித்து அப்படியே வெளிவிடுகிறது. வெய்யில் காலத்தில் எப்பொழுதும் டைல்ஸ் தரை சூடாகவே இருக்கிறது. அதில் நடப்பதால், அதன் சூடு கால்களில் ஏறி, பாதவலி, கணுக்கால் வலி, மூட்டு வலி வருகிறது. குளிர் காலத்தில் டைல்ஸ் தரை அதிக குளிர்ச்சியை கிரகித்து வெளியிடுவதால், ஜலதோசம், கால் மரத்துப்போதல், கால்கள் நடப்பதற்கு சிரமப்படுதல் போன்ற வியாதிகள் நிரந்தரமாக ஏற்படுகின்றன. சில வீடுகளில் சுவர் முழுவதும் 3 அடி உயரத்திற்கு டைல்ஸ் பதித்து இருப்பதால், சுவற்றிலும் சாய முடிவதில்லை . தரையிலும் உட்கார முடிவதில்லை . நடமாடவும் முடிவதில்லை . குளிர்காலத்தில் தரையில் படுக்கவும் முடிவதில்லை. நடக்கவும் முடிவதில்லை.

இதற்காக சிலபேர்கள் வீட்டிற்குள் செருப்பு அணிந்து நடமாடுகிறார்கள். குளியலறை செல்லும் பொழுது வேறு செருப்பு, கழிவறை செல்ல மற்றொரு செருப்பு , வீட்டிற்குள் நடமாட செருப்பு , வீட்டிற்கு வெளியே செல்லும்பொழுது வேறு செருப்பு, இப்படி செருப்பு மயம்தான். வீட்டில் நான்கு பேர் இருந்தால் பதினாறு ஜோடி செருப்பு வேண்டும். வீட்டில் செருப்புகள் போடுவதற்கென்றே ஒரு தனியான இடம் ஒதுக்க வேண்டும்.

வீட்டிற்குள் செருப்பு போட்டு நடக்க மனம் இல்லாதவர்கள் கால்களில் ஏற்படும் வலிகளால் அவதிப்படுகிறார்கள். இதற்கு இரண்டு வழிகளில் தீர்வு உண்டு.

ஒன்று (1) : வீடு கட்டும்பொழுதே வீட்டின் தரை முழுவதும் கொல்லம் இரட்டை யானை மார்க் சதுர செங்கல்லை பதித்து இருக்கவேண்டும் என்று தீர்மானித்திருக்கவேண்டும். அல்லது வீடு வாங்கவேண்டும் என்று முடிவெடுத்து, வாங்கும்பொழுது கட்டிட காண்டிராக்டரிடம், வீட்டின் தரை முழுவதும் கொல்லம் சதுர செங்கல் பதித்த வீடுதான் வேண்டும் என்று உறுதியாக சொல்லியிருக்க வேண்டும். அப்படி என்ன கொல்லம் சதுர செங்கல்லின் தன்மை என்று நீங்கள் உணர்ந்தால் மனம் மகிழ்வீர்கள். கோடை காலத்தில் வெப்பத்தை ஈர்த்து, குளிர்ச்சியை வெளியிடும். குளிர்காலத்தில், அதிக குளிர்ச்சியை உறிஞ்சி, கால்களுக்கு இதமான லேசாக சூடாக இருக்கும். பாதவலி, கணுக்கால் வலி, முழங்கால் வலி, மூட்டு வலி வரவே வராது. தண்ணீரோ, எண்ணையோ செங்கல்லில் விழுந்தால் உறிஞ்சிக் கொள்ளும். ஏழுக்கவே வழுக்காது. தவறி அந்த இடத்தில் நிதித்தாலும் கால் வழுக்கி காலோ, இடுப்போ, உடைந்து போகாது. செங்கல் தரையை சுத்தம் செய்வது எளிது. பண்டிகை, மங்கல நாட்களில் கோலங்கள் போடலாம். பளிச்சென்று தெரியும். டைல்ஸ், மார்பிள் தரையில் கோலங்கள் போட்டால் கண்ணுக்கே தெரியாது. இவ்வளவு வசதிகள் உள்ள கொல்லம் சதுர செங்கல்லை நாம் கட்டும் வீட்டில் தரையில் ஏன் பதிக்கக் கூடாது.

2வது தீர்வு : நாங்கள் ஏற்கனவே மார்பிள், டைல்ஸ் பதித்த வீட்டை வாங்கி விட்டோம் என்ன செய்வது? இதற்கு ஏதாவது தீர்வு உண்டா? என்று கேட்பது தெரிகிறது. அதற்கும் தீர்வு உண்டு.

சோடாக்கள் இருக்கும் அறையில், அதற்கு கீழே விரிக்க அழகான விரிப்புகள் இருக்கிறது. அவைகளை வாங்கி சோபாக்களின் முன்னால் கீழே விரித்தால், தரையில் கால்கள் படாமல், விரிப்பின் மேல் வைத்துக் கொள்ளலாம். சூடு அல்லது குளிர்ச்சி கால்களை தாக்காது. நாற்காலிகள் உள்ள வீட்டில், அதன் கீழே போடக் கூடிய விரிப்பும் கிடைக்கிறது. அதைப் போட்டுக் கொண்டால் தரையில் கால்கள் நிதிக்காமல் இருக்கலாம். சமையல் அறையில் நின்று கொண்டே சமையல் செய்யும் பெண்களுக்கு அவர்கள் காலடியில் போட்டுக்கொள்ள நிருதுவான நிதியடிகளும் கிடைக்கிறது. அதில் நின்று கொண்டு சமையல் செய்வதால் டைல்தினால் வரும் சூடு, குளிர்ச்சியினால் கால் வலிகள் வருவதற்கு வாய்ப்பில்லை. குளியலறை, கழிப்பறை முன்னால் பாதையில் போடக்கூடிய தேங்காய் நார் நிதியடிகள் கிடைக்கிறது. அவைகளைப் பயன்படுத்தலாம். அவை நீரை உறிஞ்சும். வழுக்காது.

மற்றும் வீட்டின் ஒவ்வொரு அறையின் நடைபாதையிலும், தேங்காய் நாரில் செய்த பலவர்ண நடைபாதை விரிப்புகள் வாங்கிப் போட்டுக் கொண்டால், வெறும் தரையில் நடப்பதால் வரும் கால் வலிகள் வராது. வழுக்கி விழவும் தேவையில்லை .

மேலே கூறியபடி உங்கள் வீட்டை ஆரோக்கியமாக அமைத்துக்கொண்டால், வாழ்நாட்கள் முழுவதும் வசந்தமாக அமையும்.

கருத்துகள் இல்லை

1: #blog-pager{clear:both;margin:30px auto;text-align:center; padding: 7px;} 2: .blog-pager {background: none;} 3: .displaypageNum a,.showpage a,.pagecurrent{padding: 5px 10px;margin-right:5px; color: #F4F4F4; background-color:#404042;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);} 4: .displaypageNum a:hover,.showpage a:hover, .pagecurrent{background:#EC8D04;text-decoration:none;color: #fff;} 5: #blog-pager .showpage, #blog-pager, .pagecurrent{font-weight:bold;color: #000;} 6: .showpageOf{display:none!important} 7: #blog-pager .pages{border:none;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);}