உடலுக்கு ஏற்ற உணவுகள் Foods that are suitable for the body
உடலுக்கு ஏற்ற உணவுகள் Foods that are suitable for the body
குளிர்ச்சியுடலினருக்கு (கபஉடல்) ஏற்ற உணவுகள்
எல்லா உணவு வகைகளும் முறையுடன் உண்டு வந்தால் நல்லது தான் என்றிருந்தாலும், கீழ்க்காணும் உணவு வகைகளை எங்கெல்லாம் எப்போதெல்லாம் உண்ண முடிகிறதோ கண்டிப்பாக கடைபிடித்தல் நல்லது.
கறி வகை
பாகற்காய், கத்திரிக்காய், பேய்ப்புடல், அத்திக்காய், அவரை, அத்தி, களாக்காய், வெண்பூசணி, வாழைத்தண்டு-பூ, முள்ளங்கி, கண்டங்கத்திரி, பலா, சுரை. பீர்க்கு பிஞ்சு முருங்கை இலை, பூ. வெங்காயம். வள்ளிக்கிழங்கு. கருணைக்கிழங்கு காயம், ஓமம், சதகுப்பை, கடுகு, வெந்தயம், தும்பை, குறிஞ்சான்
கீரை
சிவப்பு தண்டங் கீரை, சிவப்பு சிறு கீரை, கற்றாழை, சுக்கு, துாதுவளை, மணத்தக்காளி, பொன்னாங்கன்னி, பீர்க்கு, மருக்காரை, முன்னை , சிற்றகத்தி, புடல், புளியாரை, நீராரை முசுமுசுக்கை, வரிக்கோவை, பொன்னாவரை, குப்பைமேனி, துயிலிக்கீரை, ஆரை, முருங்கை, காராமணி, கடலைபுளி கீரை, முசுட்டை, பிண்ணாக்கு கீரை
ரசம் வகை
மல்லி, சுக்கு, அகத்தி, தும்பை, மணத்தக்காளி, சுண்டை, தூதுளை, பிரண்டை ஆதண்டை, நெல்லி, கண்டங்கத்திரி, நாரத்தை பிஞ்சு, அவரை, முள்ளி, பேய்ப்புடல், கத்திரிப்பிஞ்சு.
ஊறுகாய்
சுண்டை , மிளகு, மாம்பிஞ்சு, தூதுவளை, பாகல் பிஞ்சு, வாழைத்தண்டு, மஞ்சள், ஆலம் பிஞ்சு, அத்திபிஞ்சு
சூட்டுடலினருக்கு (பித்த உடல்) ஏற்ற உணவு வகைகள்
கறிவகை
வள்ளிக்கிழங்கு, வாழைப்பூ, வெங்காயம், வெள்ளரி, பீர்க்கங்காய், அவரை, புடல், கத்தரிக்காய், முருங்கை, வாழை, பாகற்காய், பீர்க்கங்காய், முள்ளிப்பபூ, பூசணி, களா
கீரை
புளியாரை, முருங்கை, பொன்முசுட்டை, கோவை, வல்லாரை, சிறுகீரை, ஓரிதழ் தாமரை, பசலி, சுரை, பாலை, முசுமுசுக்கை ,
துாதுவளை, சுரை, மணத்தக்காளி, (சிறு) கீரை
வற்றல் வகை
பிரமி, தைவேளை, தரா, பேய்ப்புடல் கண்டங்கத்திரி, காட்டு சுண்டை, தாமரை, முள்ளி, வல்லாரை, கத்திரி, மணத்தக்காளி.
ஊறுகாய்
மிளகு, இஞ்சி, தான்றிக்காய், நாரத்தை, விளா, தேற்றான் கொட்டை, மா, எலுமிச்சை, துாதுவிளை, புன்னை, மாவிலிக்கிழங்கு
வறட்சியுடலினருக்கு (வாத உடல்) ஏற்ற உணவுகள்
சாம்பல் பூசணி, முருங்கை பிஞ்சு, கருணை, வெள்ளாவரை, மாங்காய், பாகல், கத்திரிக்காய்.
கீரை
மணத்தக்காளி, முக்கிரட்டை முன்னை, ஆரை, கோவை, யானை நெருஞ்கில், பொன்னாங்கன்னி, சாரணை, முருங்கை, தூதுவளை, சுண்டை, பேய்ப்புடல், நெல்லி, மணத்தக்காளி, ஆரைக்கீரை, முன்னைக்கீரை, சிறுகீரை.
ஊறுகாய்
நாரத்தை, தான்றிக்காய், கடுக்காய், தெற்றான் கொட்டை, இஞ்சி, களா, மாங்காய்.
இரச வகை
சிறுகீரை, வெள்ளைச்சாரணை, பாகல், முருங்கை, இளந்தண்டுக்கீரை, துாதுவளை பொன்னாங்காணி
வற்றல் வகை
சுண்டக்காய், பேய்புடலங்காய், துாதுவளைக்காய், நெல்லிக்காய். மணத்தக்காளி, அவரை, முள்ளிக்காய், பிரண்டை.
கருத்துகள் இல்லை