தொண்டைச் சதை வளர்ச்சி -throat flesh growth-tansil
தொண்டைச் சதை வளர்ச்சி-
தொண்டைச்சதை வளர்ச்சி -
அ) தேவையான சரக்குகள்:
சுக்கு - 10 கிராம்
மிளகு - 10 கிராம்
திப்பிலி - 10 கிராம்
கடுக்காய்த் தோல் - 10 கிராம்
நெல்லித் தோல் - 10 கிராம்
தான்றித் தோல் - 10 கிராம்
இவைகளைத் தனித்தனியாகப் பொடித்து, பின் ஒன்றாகக் கலந்து கற்பூரவள்ளிச்சாறு விட்டு 11/2 மணி நேரம் நன்கு அரைத்துச் சுண்டைக்காய் அளவு மாத்திரைகளாக உருட்டி நிழலில் காய வைத்து உலர்த்திக் கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் விதம்
ஒரு மாத்திரை வீதம் 3 வேளை வாயில் ஒதுக்கி கொண்டு உமிழ் நீரை மட்டும் உட்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு இரு வேளை (மாத்திரையை பொடித்து தேனில் கலந்து) கொள்ளலாம்.
குறிப்பு:
அறுவைச் சிகிச்சைதான் வழி என்று இல்லாமல் இம்மருந்து சிறப்பாக குணப்படுத்த உதவுகிறது. இதனால் தொண்டை வலி அடிக்கடி ஏற்படுகிற சலதோடம், வறட்டு இருமல் ஆகியன தீரும். மற்ற மருந்துகள் உட்கொள்ளும் போதும் இம்மருந்தை கொள்ளலாம். உணவில் பூண்டு, வெங்காயம் ஆகியன சற்று அதிகம் உண்ண வேண்டும்.
கருத்துகள் இல்லை