ocean waves




Breaking News

HELTH AND BEAUTY TIPS AND TO CREATE HEALTHY HUMAN BEINGS PLEASE FOLLOW THE OCEAN WAVES BLOGGER

நோயற்ற வாழ்வுக்கு பாரம்பரிய வாழ்வியல் வழிமுறைகள் How I Improved My URINE BLOOD In few Days


நோயற்ற வாழ்வுக்கு பாரம்பரிய வாழ்வியல் வழிமுறைகள்

 How I Improved My URINE BLOOD In few Days


 பல பேருக்கு மலம், சிறு நீர் கழிக்கும் முறை கூட தெரிவதில்லை . இவ்விரண்டும் தான் அநேக நோய்களுக்கு காரணம் என்றும் புரிவதில்லை . மலம், சிறுநீர் கழித்தல் என்பது ஒரு கடன் கிடையாது. இது ஒரு உடலைக் காக்கும் உன்னதக் கலை என்று பாரம்பரிய நூற்களும் முன்னேர்களும் கூறுகின்றனர். இந்த உன்னதக் கலை நாளடைவில் மெல்ல மெல்ல மறைந்து தற்போது மருந்துக்கடைகளை நம்பி மக்கள் வாழும் நிலை உள்ளது. முன்னோர்கள் கூறிய மலம், சிறுநீர் கழிக்கும் கலையை நாம் காண்போமா?. 

நோயற்ற வாழ்வுக்கு பாரம்பரிய வாழ்வியல் வழிமுறைகள்   How I Improved My URINE BLOOD In few Days

 

பாரம்பரி வாழ்வியல் முறைப்படி "மலம்-சிறுநீர் கழிக்கும் முறை

 How I Improved My URINE BLOOD In few Days

 

1. "அறுநீர்'", "மும்மலம்” - என்று சித்தர்கள் கூறுவதால் ஒரு 

நாளைக்கு ஆறு தடவை சிறுநீரும், மூன்று முறை மலமும் கழித்தல் வேண்டும் குறைந்தது 5 தடவை சிறு நீரும் 2 தடவையாவது மலமும் கழித்தால் நல்லது.

 

 

 

2. மலம் அதிகமாக உடலில் சேரச் சேர உடலில் வாத சம்பந்தப்பட்டப் பிணிகள் வரக் காரணமாகின்றன. அதே போல் உடலில் சிறுநீர் மாறுபட்டு கழியும் போது பித்த சம்பந்தப்பட்ட நோய்கள் தோன்ற ஏதுவாகின்றன. இவ்விரண்டும் சரிவர இருந்தால் தான் உடலில் செரித்தல் உள்ளிட்ட அனைத்துச் செயல்பாடுகளும் சரியாக நடை பெறும்.

 

"பேதியால் வாதந்தாழும்...'' "பிரிந்திடும் பித்தம் தீராச் சலத்தினாலேஎன்றும் "இரு மலங்கள் தங்காதிறங்குங்கால்..சமனாக்கினி சாரும் சாரா நோயீட்டம்..” என்று சித்தர்கள் கூறுவதை அறியலாம்.

 

3. சிறுநீரை கழிக்கும் முன் அதற்குரிய முறைப்படி அமர்ந்து, நம்முடைய இடது கையால் வலப்பக்கத்திலுள்ள அடிவயிற்றை பிடித்தோ அல்லது மெதுவாக அமிழ்த்தோ விட முழுவதும் பலன் கிடைக்கும்

 

இவ்வாறு சிறுநீர் சரிவர வரவில்லை எனிலும், சிறுநீர்ப்பிணிகள் ஏதும் இருந்தாலும் கழிக்கும் முன், வலப்பக்கமாக சற்றே படுத்துக் கொண்டு பின் சிறுநீர் கழிக்கச் செல்ல வேண்டும். நின்று கொண்டும், தவிர்க்க முடியாத பிறநிலைகளையும் விடுத்து, மற்ற நேரங்களில் இதை நாம் கடைபிடிக்கலாம்.

 

 

4. மலம் சரிவர கழிய வேண்டுமாயின் நம்முடைய வலது கையால் இடப்பக்கம் அடிவயிற்றை பிடித்தோ அல்லது மெதுவாக அமிழ்த்தோவிட நல்ல பயன்கிடைக்கும். மலச்சிக்கல் அல்லது மற்றப்பிணிகள் இருந்தால் கழிக்கும் முன், சற்ற இடப்பக்கமாக படுத்து, வலது பக்க நாசியில் பிராண வாயு (சுவாசம்) வரும்படி செய்து பின் மலம் கழிக்கச் செல்லல் நல்லது.

5. மலம், சிறுநீர் கழிக்கும் போது இதிலே தான் கவனம் இருத்தல் வேண்டும்.

 

6. உணவு உண்ணும் முன், உடற்பயிற்சி செய்யும் முன் மலம், சிறுநீர் உடலில் இல்லாதிருக்க வேண்டும். நன்கு கழித்துப் பின்னர் செல்லல் நல்லது.

 

 7. மலம் போக வேண்டிய நேரத்தில் போகாமல் தடுத்து (அடக்கும்நிறுத்தும் போது வயிற்றுப் பிணிகள். வாயுப்பிணிகள், பொருத்துவலி உள்ளிட்ட வாதப் பிணிகள், மார்பு படபடப்பு, உட்சூடு, அசீரணம் உள்ளிட்ட பல நோய்கள் உண்டாகக் காரணமாகிறது. எனவே மலம் வரும் போது உடன் அது கழிவதற்கு ஆய்த்தம் செய்தல் நல்லது.

 

8. அதே போல சிறுநீர் போக செல்லாமல் தடுத்து அடக்கும் போது நீர் எரிச்சல், நீர்க்கட்டு, கல்லடைப்பு, நீர்த்தாரைப்புண், மூட்டுக்கள் வீக்கம், உட்சூடு முதலிய நோய்கள் உண்டாக காரணமாகி விடும். எனவே சிறுநீர் வரும் போது உடன் கழிவதற்கு ஆயத்தம் செய்தல் நல்லது.

 

9. மலம், சிறுநீர் இரண்டும் கழியும் போது தடுத்து அடக்கும் போது மனச் சிதைவு, உடல் படபடப்பு, எரிச்சல் உள்ளிட்ட பிணிகளும் உருவாக காரணமாகிவிடும்.

10. மலம் கழித்தவுடன் ஆசன (மல) வாயை 11 தடவை நீர் விட்டு அலம்பிக் கொள்ள சித்தர் நூற்கள் அறிவுறுத்துகிறது. அதே போல சிறுநீர் கழித்தவுடனும் உறுப்பை நீரில் கழுவ அறிவுறுத்துகிறது. இவைகள் நடைமுறையில் சாத்தியமா என்ற கேள்வி எல்லோருக்கும் எழும். உடலுக்கு நல்லது என்று கூறும் போது இதற்கும் நேரம் விட்டு அல்லது கூடிய வகையில் வீட்டில் இருக்கும் போதாவது மேற்கொள்ளலாம்

 

11. மலம், சிறுநீர் சரி வர கழிவதற்கு உணவு முறையும் ஒரு காரணம் என்பதால் உணவு, வகைகளையும் சரி வர உண்ண வேண்டும்.

12. மலம், சிறுநீர் செல்லும் போது அதிக இறுக்கத்துடன் ஆடைகள் இருக்கக் கூடாது. பாதம் அழுந்தும்படியும் அமர்ந்து இருக்கக் கூடாது.

13. மலம், சிறு நீர் நோயில்லாத போதும் அடிக்கடியும் கழிதல் கூடாதுமுறைப்படுத்த வேண்டும். இவைகள் ஒழுங்குப்படுத்தக் கூடியவைஒழுங்குப்படுத்துவதற்கு கட்டுப்படக் கூடியவை.

14. மலம், சிறுநீர் கழிதல் என்பது இயற்கையான உடலில் ஏற்படும் வேகம் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். அந்தளவுக்கு இதை புனிதமாகக் கூறியுள்ளனர்.

15. சுற்றுப்புறத்தில் இயல்பாக காணும் சூழ்நிலை, காலநிலை 

இவைகளுக்குத் தக்கபடி மலத்தின் அளவும், மற்ற குணங்களும் சிறிது மாறுபடும். ஆனால் மலம் கழிக்கிற முறையை, காலத்தை மாற்றக் கூடாது என்கிறது நம் முன்னோர் நூற்கள்.

 

16. பட்டினி (உபவாசம்) இருக்கும் முன்னும், உடலுறவு கொள்ளும் முன்னும், குளிக்கும் முன்னும், பிற நோய்களுக்கு மருந்து எடுக்கும் முன்னும், மலம், சிறுநீர் சரி வர கழித்தல் வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக சுகமான தூக்கத்திற்கு செல்லும் முன்னும், பசித்து இருந்து நல்ல உணவு, உண்ணும் முன்னும் சரி வர மலம் கழித்தல் வேண்டும் என்று முன்னோர்கள் கூறுகின்றனர். ஆக, மலம், சிறுநீர் ஆகியன கழிக்கும் போது முன்னோர்களின் வழிமுறைகள் நெடுநாள் நோயில்லாமல் வாழ்வதற்கு வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை. அவர்கள், அறிவுறுத்துகிற ஒவ்வொரு வழி முறைக்கும் எண்ணற்ற நன்மைகள், உண்மைகள் புதைந்துள்ளது .என்பதை மறத்தல் கூடாது.

 

 

 

மேற்கூறிய முன்னோர்களின் வழிமுறைக்கு ஆதரவாக வெளிவந்துள்ள விஞ்ஞானக் குறிப்புகள்:

 

1) மலம், சிறுநீர் இவ்விரண்டும் உடலின் ஆரோக்கியத்தை 

வெளிப்படுத்துபவை என்பதை நவீன மருத்துவ உலகம் ஏற்றுக் கொண்டு இதனை மையமாகக் கொண்டு தான் நோய் நிலையையும் கணிக்கிறார்கள்.

 

2) மலம். சிறுநீர் சரிவர செல்லும் போது உடலை நோய்வாய்ப்படுத்தும் (Stress) (ஸ்டிரெஸ்) மன உளைச்சல் அதன் பின் வரும் உடல் உளைச்சலுக்கான காரணிகள் வெகுவாக குறைகிறது என்றும் ஆய்வு தெரிவிக்கின்றது.

 

3. மலம் சரி வரச் செல்ல வயிற்றிலுள்ள உள் அழுத்தம், மலக்குடல் அசைவு ஆகியன முக்கிய காரணமாகும். இதற்கு புறப்பக்கத்திலிருந்து கொடுக்கப்படும், இயல்பான அழுத்தம் நல்லது . என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 

4) வயிற்றிலுள்ள உள் அழுத்தம், மலக்குடல் அசைவு, மலக்குடலிலுள்ள அழுத்தம், வயிற்றின் தசை, முதுகுப் பகுதியின் தசை இவைகள் மலம், சிறுநீர் கழிக்கும் போது சரிவர இயங்குவதற்கு அதற்குரிய முறைப்படி அமர்ந்து கழிக்கும் போது மட்டுமே நல்ல விதத்தில் ஏற்படுகிறது என்று உடல் செயலியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மாறுபட்டு அதாவது நின்று கொண்டு கழிக்கும் போது வயிற்றின் அழுத்தமும் மற்ற அழுத்தமும் மாறுபட்டு மலம், சிறுநீர் சரிவர கழிய முடியாதபடி செய்கின்றன என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 

5.சமீபத்தில் மாஸ்கோ பல்கலைக்கழக ஆய்வின் படி, நின்று கொண்டு, அதிக வேகத்துடன் மலம், சிறுநீர் கழியும் போது ஆண் தன்மை குறைவுக்கு ஒரு காரணமாகிறது என்று நீரூபித்துள்ளது.

 

6) மலம் சரி வர சென்றால் தான் பித்தநீர் சுரப்பும் சரியாக இருக்கும் என்றும், சீரணம் சரிவர இருக்கும் என்றும் ஆய்வு தெரிவிக்கின்றன

மேலும் எண்ணற்ற விஞ்ஞான ஆய்வுகள் வந்துள்ளன. இந்த ஆய்வுகள் யாவும் முன்னோர்கள் கூறியுள்ள வழிமுறையை எதிர்த்து ஒன்றும் கிடையாது, ஆனால் நடைமுறைப்படுத்த இயலாது தயங்குவதுதான் இந்த நல்வழி முறைகள் கொஞ்சம், கொஞ்சமாக மாறி, நவீன உலகத்திற்கு ஏற்ப வெஸ்டான் கழிப்பறை, இரு தினங்களுக்கு ஒரு முறை கழித்தல் போன்ற குளறுபடிகள் வருகின்றன

நம்முடைய பலம், மலத்தில் தான் என்பதை மறவாதீர்கள். மலச்சிக்கல் என்பது வேறு. இயல்பான மலம்-சிறுநீர் கழித்தல் என்பது வேறு. ஆக மலம், சிறுநீர் சிக்கலுக்கும் முன்னோர்கள் கூறியுள்ள இயற்கை வழிமுறைகளை கடைப்பிடித்து நோயின்றி வாழ்வோம்

 

 


கருத்துகள் இல்லை

1: #blog-pager{clear:both;margin:30px auto;text-align:center; padding: 7px;} 2: .blog-pager {background: none;} 3: .displaypageNum a,.showpage a,.pagecurrent{padding: 5px 10px;margin-right:5px; color: #F4F4F4; background-color:#404042;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);} 4: .displaypageNum a:hover,.showpage a:hover, .pagecurrent{background:#EC8D04;text-decoration:none;color: #fff;} 5: #blog-pager .showpage, #blog-pager, .pagecurrent{font-weight:bold;color: #000;} 6: .showpageOf{display:none!important} 7: #blog-pager .pages{border:none;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);}