எப்படி நோயை தடுக்கலாம் how can you prevent diseases
எப்படி நோயை தடுக்கலாம்how can you prevent diseases
நோய் தோன்றத் தோன்ற அதைக் குறித்து அல்லல் படும் மாந்தர் இருக்கின்றனர். அல்லல்படுவதால் நோயின் வேகம் அதிகரிக்கிறது. அமைதியுடன் அதைப் பொறுத்துக்கொள்வதால் தோயின் வேகம் தணிகிறது. சதிப்புத்தன்மை உள்ளத்துக்குரியது. அது உடலுக்குரியதன்று. உடல் நோய்வாய்ப்படுவது இயற்கையின் கூறு. உள்ளம் அதைக் குறித்து அல்லல்படுவது மனிதனுடைய மடமையின் விளைவு. மனநோய் மேனியின் நோயைவிடக் கொடியது. மேனியின் நோயை மருந்தைக்கொண்டும், காலத்துக்கு உட்படுத்தியும் களையலாம். மருத்துவர்களும், வைத்தியர்களும், டாக்டர்களும் உடலைப் பிடித்துள்ள பிணிகளை அகற்ற வல்லவர்கள். மனதைப் பிடித்துள்ள மனநோய் என்னும் பிணியைத் தானே அகற்றிப் பழகவேண்டும். அது எல்லார்க்கும் சாத்தியப்படாது. பயிற்சி பண்ணுபவர்க்கே அது இயலுகிறது.மனிதன் ஒருவன் கையில் கட்டி கிளம்புகிறது. அதனால் வலிமிக உண்டாகிறது. நாள் ஏறஏற அது பழுத்து வருகிறது. வலியும் அதிகரிக்கிறது. அடுத்த நாள் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய் அந்தக் கட்டியை அறுத்தெடுப்பது அவசியம் என டாக்டர் முடிவு கட்டுகிறார்.
அந்த முடிவை நோயாளியிடம் தெரிவிக்கிறார். இனி, நோயாளிகளுள் மூன்று தரத்தார் இருக்கின்றனர். கடைத்தரமான நோயாளி நாளைக்குக் கட்டி அறுபடுவதை முன்னிட்டு இன் றைக்கே கதறிப்பதறி அழ ஆரம்பிக்கிறான். அதை அறுக்க வேண்டாமெனக் கெஞ்சிக் கேட்கிறான். தன் தலைவி தியை நொந்து கொள்கின்றான். இங்ஙனம் துயரத்தை அவன் பன் மடங்கு பெரியதாக்கிக்கொள்கிறான். உடல் நோய்க்கு உறு துணையாக மனநோய் இருந்து கொண்டு அதன் கொடுமையை அதிகப்படுத்துகிறது. இடைத்தரமான நோயாளி கட்டியை அறுக்கின்றபொழுது மட்டும் துயரப்படுகிறான். தலைத்தரமான நோயாளியோ அந்த வலியைச் சகித்துப் பழகுகிறான். மன உறுதி படையாதவன் அனாவசியமாகத் துன்பப்படுகிறான். மனதை உடைத்திருப்பவன் மனிதன். இந்த மனதினிடத்துச் சிறப்பு ஒன்று உண்டு. இதை மகோன்னதமான கிலைக்கு எடுத்துச் செல்லலாம். இதை அதிவிரைவில் பாழ்படுத்தலாம். அறியாமையினால் பாழ்படுத்தப்பட்ட மனதை விவேகத்தால் மீண்டும் விரைவில் திருத்தி அமைக்கலாம். ஈல்ல விவேகம் படைத்திருப்பவனுக்கு மனதைத் திருத்திமைக்க நெடுநாள் தேவையில்லை.
இருட்டு அறைக்குள் தீபத்தைக் கொண்டு வந்தவுடனே இருள் மாயமாய் மறைந்து போவது போன்று விவேகத்தின் துணைகொண்டு மனிதனுக்கு மனதை அதிவிரைவில் அல்லது அக்கணத்திலேயே திருத்தியமைக்க முடியும். உடலை வாட்டுகிற நோய் பிராரப்த கர்மத்தின் விளைவு. முன்வினைப்பயன் என்பது அதன் பொருள். நேற்றுச் செய்ததும் முன் வினையாகும். முற்பிறப்பில் செய்ததும் முன் வினையாகும். உடலை அது வாட்டுதற்கிடையில் மனது அதில் சம்பந்தப்படாதிருக்க லாம். அதற்கொரு சான்று:
சுமார் எழுபது வருஷங்கட்கு முன்பு சென்னைக்கு அரு கில் பெரம்பூர் என்னும் பகுதியில் சித்தபுருஷர் - ஒருவர் இருந்தார். அவரைப் பலர் பைத்தியம் என எண்ணினர். சிலர் அவரைச் சித்த புருஷர் எனப் போற்றினர். அவரு டைய கெண்டைக்காலில் கொப்புளம் ஒன்று உ.தித்தது. அது உடைந்து புண் ஆனது. பின் அது ஆறவில்லை. அது புழுப்புழுத்துப் போயிற்று. சித்த புருஷரோ அதைக் கருத் தில் வாங்கவில்லை. ஒருநாள் அவர் ஒரு மரத்தடியில் அமர்ந் திருந்தார். கெண்டைக்கால் புண்ணில் நெளிந்து கொண்டி ருந்த புழு தரையில் விழுந்து திணறியது. சித்தபுருஷர் அதை உலர்ந்துபோன சருகு ஒன்றில் எடுத்தார். “உன் சொந்த இடத்தினின்று விலகி நீ ஏன் வேதனைப்படுகிறாய்?" என்று இயம்பிக்கொண்டு அதைப் புண்ணில் போட்டு வைத்தார். நோயாளிகளுக்கு இதில் பாடம் இருக்கிறது. உடலைத் தன்னுடையது என்று அவர் அபிமானிக்கவில்லை. புண்ணைப் புழுக்களுக்கு இருப்பிடம் எனப் பொருள் படுத்தினார். ஆதலால் கீழே விழுந்த புழுவை மீண்டும் எடுத்து அதற்குச் சொந்தமான இடத்தில் வைத்தார். அவர் செய் தது போன்று மனதை மேனியினின்று பிரித்தெடுக்கத் தெரிந்து கொள்கிறவர்களுக்கு மேனியைப் பிடித்துள்ள நோய் மனதைத் துன்புறுத்தமாட்டாது.
பயிற்சியால் சற்று ஏறத்தாழ மக்கள் எல்லாரும் இப்பெருநிலையை அடையப் பெறலாம். மனிதன் எப்பொழுது வேண்டுமானாலும் மன நோய்களை அகற்றலாம். நல்லறிவே அந்த நோய்களை நீக்குதற் கேற்ற நல்ல மருந்தாகிறது. உடலுக்கு விருத்தாப்பிய தசை உண்டு. ஆனால் மனதை மனிதன் யாண்டும் இளமையிலேயே வைத்திருக்கலாம். இது மனதிற்குரிய மற்றொரு மகிமையாகிறது. யாண்டும் அமைதியாயிருத்தல், விருப்பு, வெறுப்புக்கு ஆளாகாதிருத்தல், புகழ்ச்சி, இகழ்ச்சிகளைப் பொருள் படுத்தாதிருத்தல், வெற்றியையும் தோல்வியையும் நடுநிலையிலிருந்து ஏற்றுக்கொள்ளுதல் ஆகிய பண்புகளில் மனிதன் ஊறி வளரவேண்டும். அங்ஙனம் மனதை யாண்டும் நடுநிலையில் வைத்திருக்கிறவனுக்கு வாழ்நாள் முழுவதும் நல்ல வாய்ப்பாகிறது. துயரப்படுதல் பொல்லாத மனநோய் ஆகிறது.
எக்காரணத்தை முன்னிட்டும் துயரப்படாத மேலான மன நிலையை மனிதன் வளர்க்கலாம். இன்பமே எந்நாளும் துன்பமில்லை' என்றார் அப்பர் சுவாமிகள். இப்பெருநிலையை யார் வேண்டுமாலுைம் பழக்கத்தால் கொண்டு வரலாம். உடலை எடுத்துள்ள மக்கள் எல்லாரும் இடை யிடையே நோய்க்கு ஆளாக வேண்டும். யாருமே இதைத் தவிர்க்க முடியாது. மற்று நோய்வாய்ப்பட்டிருப்பது கடவுள் பக்தியை வளர்ப்பதற்கு நல்ல சந்தர்ப்பமாகிறது. கடவுள் பக்தி இல்லா தவனுக்கும் கொடிய நோய் தோன்றி வாட்டு கிறபொழுது கடவுள் பக்தி தானாக வடிவெடுக்கிறது. பக்தி ஓங்க ஓங்க நோயின் கொடுமை மறைந்துபட்டுப்போகிறது. பக்தர்களுள் தீவிரமான பக்தி வாய்க்கப்பெற்றவர்கள் நோயை நினைப்பதில்லை. நோயின் கொடுமை ஓங்க ஓங்க அவர்கள் கடவுள் சிந்தனையையே உறுதிப்படுத்துகின்றனர். இரண்டாந்தரமான பக்தர்கள் இன்னொரு போக்கில் வழுத்து கின்றனர். ' நோயைக் கொடுத்துள்ள இறைவா, இந்த நோயைச் சகிப்பதற்கான உறுதியையும் கொடுத்தருள் வாயாக' என்று வேண்டுகின்றனர். பின்பு நோயைச் சகித்துப் பழகுகின்றனர். சகித்திருத்தல் சிறந்த ஆத்ம சாதனம் எனக் கருதப்படுகிறது. சகிப்பை வளர்ப்பதற்கு நோய் மறைமுகமாக உபகாரம் செய்கிறது.
ஆதலால் நோயாளிகள் கடவுள் சிந்தனையை வளர்ப்பதன் வாயிலாக, சகிப்புத் தன்மையை வளர்த்து வருவார்களாக. கடைத்தர மான பக்தர்கள் இறைவனிடம் குறை கூறுகிறார்கள். 'இறைவா, இந்த நோயை அகற்றியருள்வாயாக, இதைச் சகிக்க என்னால் முடியாது” என்று கண்ணீரும் கம்பலைய மாகப் பிரார்த்தனை பண்ணுகிறார்கள். அது கடைத்தரமான பிரார்த்தனை என்றாலும் அதில் ஈடுபடுதற்கேற்ப நோயாளியினிடம் பக்தி உருவெடுக்கிறது. ஆக, கடவுள் பக்தியை வளர்ப்பதற்கு நோயை நன்கு பயன்படுத்துதல் வேண்டும். இக்கோட்பாட்டை நோயாளி உறுதியாக உள்ளத்தில் வைத்துக்கொள்வாகை.நோய்வாய்ப்பட்டிருக்கும் பொழுது மனிதன் மனம் கலங்கியவனாக இருக்கின்றான்.
மதவாதிகள் அந்தச் சந்தர்ப்பத்தைத் தங்கள் மதப்பிரசாரத்துக்குப் பயன் படுத்து கிறார்கள். ''நீங்கள் வழுத்தும் தெய்வம் வலிவற்றது அல்லது உயிரற்றது, அல்லது பிசாசு போன்றது. அதை வழுத்த வேண்டாம். நாங்கள் வழுத்தும் தெய்வமே உண்மையான கடவுள். அவர் உங்களைக் காப்பாற்றுவார். உள்ளன்போடு அவரை வழுத்துங்கள். உங்களுக்காக எங்கள் தெய்வத் திடம் நாங்கள் பிரார்த்தனை பண்ணுகிறோம்.” இப்படியெல்லாம் நயமாகவும், கவர்ச்சிகரமாகவும் மதபோதனை பண்ணு வார்கள், பேசுவார்கள். ஆனால் நோயாளிகள் அக்கூற்றில் மயங்கிவிடலாகாது. எங்கள் தெய்வம் வேறு உங்கள் தெய்வம் வேறு என்று நல்லறிஞர்கள் ஒருநாளும் சொல்ல மாட்டார்கள். தெய்வம் ஒருவரே. அவருக்குப் பெயர்கள் பல. தாகசாந்தி பண்ணுகிற ஒரே பொருளைத் தண்ணீர் என்றும், ஜலம் என்றும், பானி என்றும், வாட்டர் என்றும் பலப்பல மொழிகளில் பலப்பல பெயரிட்டு அழைப்பது போன்று ஒரே பரம்பொருள் கணக்கற்ற பெயர்களால் அழைக்கப்பெறுகிறார். அந்த ஒரே பொருளைச் சிவம் என்றா லும், விஷ்ணு என்றாலும், அம்பிகை என்றாலும், கணபதி என்றாலும், முருகன் என்றாலும், அல்லா என்றாலும், கர்த்தர் என்றாலும் இப்பெயர்களெல்லாம் ஒரே மெய்ப்பொருளைத் தான் குறிக்கின்றன.
இவ்வுண்மையினின்று நல்லறிஞர்கள் எக்காரணத்தைக் கொண்டும் பிசகலாகாது. அவரவர்க்கு ஐதிகமாக வந்துள்ள சமயத்தை உறுதியாகப் பிடித்துக் கொண்டு கடவுள் பக்தியை வளர்த்து வரவேண்டும். மனதை ஒருமுகப்படுத்தவேண்டும். உள்ளத்தினுள்ளே பேரானந்த சொரூபமாகவும், பேரறிவு சொரூபமாகவும். நோய்க்கு இடம் கொடேல் அருட்பெருஞ்ஜோதியாகவும் கடவுள் வீற்றிருக்கிறார் என்று ஆழ்ந்து உணரவேண்டும். இந்த உணர்விலே சில நிமிஷ நேரம் உறுதி பெற்றிருந்தால் இப்பயிற்சிக்குத் தியானம் என்று பெயர். காலையிலும், மாலையிலும் இதை உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும்.நோயினின்று குணமடைந்த பிறகு கோயிலுக்குச் சென்று இன்னின்ன பாங்குகளில் கோரிக்கைகளை நிறை வேற்றுவேன் என்று சிலர் பிரார்த்தனை பண்ணிக்கொள் கின்றார்கள்.
அப்படிப் பிரார்த்தனை பண்ணுவதும் நல்ல சாதனை முறையென அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கோரிக்கையை நிறைவேற்றுவது பக்திக்குரிய நல்ல சாதனமாம்.கடவுள் பக்தியை ஊட்டுகிற நூல்களை நோய்வாய்ப் பட்டிருக்கும் பொழுது படிப்பதும், படிக்கக் கேட்பதும், கேட்ட விஷயத்தைச் சிந்தனை பண்ணுவதும் நல்ல ஆத்ம சாதனமாகும். ஆத்ம சாதனம் ஓங்குவதற்கேற்ப நோயின் கொடுமை மனதை வந்து தாக்குவதில்லை. ஆதலால் மனதைத் தெய்வ சிந்தனையிலேயே நிலைபெற்றிருக்கச் செய்வது நோய்க்கு இடம் கொடாது தடுப்பதற்கு உற்ற உபாயமாகிறது. நோய்வாய்ப்பட்டிருக்கிறவர்கள் இறைவன் அருளால் மனத்திட்பம் வாய்க்கப்பெற்றவர்கள் ஆவார்களாக.
I
|
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக