நோய் cause of diseases
நோய் cause of diseases
நோய்cause of diseases
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது முதுமொழி. நோய்வாய்ப்படாது நல்லவாழ்வு வாழ்வது சொர்க்க வாழ்வுக்கு நிகர். நோய் ஒன்றும் இல்லாத சுகஜீவனம் அரிதிலும் அரிதாக யாரோ சிலர்க்குத்தான் வாய்க்கிறது. பெரும்பான்மையோர் பிணிக்கு ஆளாகின்றனர். பிறந்ததிலிருந்து இறக்கும் வரையில் ஏதாவது இன்னலுக்கு உடல் உட்படுகிறது. நோய்களில் சில சாமானியமானவைகளாயிருந்து பிறகு அவைகள் தாமே குணம் அடைகின்றன. இயற்கை அத்தகைய அரிய செயலைச் செய்து வைக்கிறது. வேறு சில வியாதிகள் நெடுநாள் நிலைத்திருந்து மனிதனை வாட்டுகின்றன. அப்பொழுது வருத்தப்படாது இருக்க யாருக்குமே இயலாது. வருந்துதற்கு இடையில் வைத்தியம் பண்ணி வியாதியை விலக்க மனிதன் கடமைப்பட்டு இருக் கிறான். நோயைக் களைவதற்கு நல்ல வைத்திய முறையைக் கையாளுவது முற்றிலும் அவசியம்.
cause of diseases |
1. நோயில் இரண்டு விதம் உண்டு. ஒன்று உடலைப் பற்றியது; மற்றது உள்ளத்தைப் பற்றியது. உ.டலைப்பற்றிய நோயை மருத்துவர் கண்டு பிடிக்கின்றனர். மருந்து கொடுக் கின்றனர். பிறகு அதைக் குணப்படுத்துகின்றனர். ஆனால் உள்ளத்தைப் பிடித்துள்ள நோயைப் பிறர் கண்டு பிடிக்க முடியாது. கண்டு பிடித்தாலும் பிறர் அதை அகற்ற வல்லவர் அல்லர். மனநோயை மனிதன் தானே சரிப்படுத்தவேண்டும். யனநோயை நீக்குதற்கு நல்லறிவு ஒன்றே உற்ற உபாய் மாகிறது.
2. உடலை அடிக்கடி தாக்குகிற நோய்களுள் ஒன்று தணுப்பு மயமானது; மற்றது வெப்ப மயமானது. முதலில் சொல்லப்பட்டது சளி என்றும் ஜலதோஷம் என்றும் தடிமல் என்றும் பெயர் பெறுகிறது. இரண்டாவதாக சொல்லப் பட்டது காய்ச்சல் என்றும், ஜுரம் என்றும், வெப்ப நோய் என்றும் பெயர் பெறுகிறது. வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு முதலியன ஜீரணக் கருவியோடு சம்பந்தப்பட்டவை. இனி நெஞ்சுவலி, தலைவலி, மண்டையிடி முதலியன உண்டு. பல்வலியில் பல பிரிவுகள் உள்ளன. சிறுநீர் அல்லது மூத்திரத்தைப் பற்றிய பிணிகள் பல உள
கபம், வாதம், பித்தம் ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்ட ரோகங்கள் கணக்கில் அடங்கா. சர்ம ரோகங்கள் என்பன தோலைத் தாக்குகின்றன. சொறி, சிரங்கு, கட்டி, கொப்புளம் முதலியன இந்த இனத்தைச் சேர்ந்தவைகளாம். பிளேக், காலரா, வைசூரி, முறைக்காய்ச்சல், தாகஜுரம் முதலியன சூழ்நிலையை முன்னிட்டு வருகின்றன. உள்ளத்தை வாட்டுபவைகள் மன நோய் எனப்படுகின்றன. பேராசை, பொறாமை, கடுஞ்சினம், துயரம் ஆகிய வைகள் யாண்டும் மனதை வாட்டிக்கொண்டேயிருக்கின்றன. அறியாமையை முன்னிட்டு மனிதன் மன நோயை வரவழைத்துக் கொள்கிறான். பேராசைக்கு வரம்பு கிடையாது.
அதற்கு அடிமைப்படுகிறவன் அல்லும் பகலும் அவதிப்பட்டுக் கொண்டேயிருக்கிறான். சிற்றுயிர்களுக்கும் மானுட சிசுக்களுக்கும் பேராசை கிடையாது. ஆகையால் அவைகள் பரமானந்தத்தில் திளைத்திருக்கின்றன. பொறாமைப்படுகிற மனிதன் தன்னிடத்துள்ள சிறப்புக்களையெல்லாம் சிதறடையப் பண்ணுகின்றான். இதற்கு மாறாக யாரொருவன் பிறர் முன்னேற்றத்தில் மகிழ்வடைகிறானோ அவனுக்கு நலன்கள் மேலும் மேலும் அதிகரிக்கின்றது. பொங்கி வருகின்ற கோபம் மனிதனைப் பைத்தியக்காரன் ஆக்குகிறது. கடுஞ்சினத்துக்கு அடிமைப்பட்டிருக்கிற
பொழுது அவன் பித்துப் பிடித்தவன் போன்று நடந்து கொள்கிறான். அதுமட்டுமல்ல, குரோதம் கொள்கின்றபொழுது மனிதனுடைய உடல் முழுதும் விஷமாகிறது.
கோபத்தில் கடிக்கும்பொழுது கடிவாய் நஞ்சாக மாறுகிறது. கோபம் அவ்வளவு கொடியது. இனி, விசனம் மனிதனை உருக்குகிறது. துயரப்பட்டுக் கொண்டிருப்பவனுக்கு விரைவில் விருத்தாப்பியம் வருகிறது. இக்காரணங்களை முன்னிட்டு மனநோய் மிகக் கொடியது. மனிதன் அதை அறவே அகற்றவேண்டும். நல்ல மனம் படைத்திருப்பவனுக்கே அது சாத்தியமாகிறது.உடலும் உள்ளமும் ஒன்றோடொன்று சம்பந்தப் பட்டவைகள். ஸ்தூலமாயிருப்பது உடல், சூக்ஷ்மமாய் இருப்பது உள்ளம். உடல் தளர்வடைந்தால் உள்ளமும் தளர்வடைகிறது. உள்ளத்தில் ஊக்கமில்லாது போனால் உடலும் வலிவற்றதாகிறது.. உடலுக்குக் கள், சாராயம் போன்ற போதை வஸ்துக்களைக் கொடுத்தால் உள்ளமும் தடுமாற்றமடைகிறது. உள்ளத்தில் பேருணர்ச்சி கிளம்பினால் உடல் அதற்கு இணங்கிப் பணிவிடை ஆற்றுகிறது.
உள்ளத்தில் சினம் சீறியெழுந்தால் உடல் அப்பொழுது விகாரப்படுகிறது. உள்ளத்தில் பித்துப் பிடித்துவிட்டால் உடல் பொலிவை இழக்கிறது. உடலும் உள்ளமும் ஒன்றோடொன்று இணங்கியிருப்பதால் இவையிரண்டையும் நல்ல நிலைமையில் வைத்திருத்தல் வேண்டும். நோயற்ற நிலை ஆரோக்கியம் என்று இயம்பப்படு கிறது. ஆரோக்கியத்துக்கு அறிகுறி இருக்கிறது. ஆரோக் கியமாயிருப்பவனுக்கு உடலைப்பற்றிய உணர்வு வருவதில்லை. சரீரத்தை நினையா திருப்பது சான்றோர் பாங்கு. சரீரத்தை மகிழ்வோடு பாராட்டுவது உலகப்பற்றுடையவர்களது பாங்கு ஆகும். சரீரத்தை வருத்தத்தோடு நினைவுக்குக் கொண்டு வருவது நோயாளியின் நிலைமையாகும்.
உதாரணம் ஒன்று எடுத்துக்கொள்வோம். காலில் சிறுவிரல் இருக் கிறது. அதை யாரும் நினைப்பதில்லை. ஆனால் கல்லில் மோதி அது காயப்பட்டுவிட்டால் அதைப் பற்றிய உணர்வு அடிக்கடி வருகிறது. உணவைச் செமித்து ஜீரணம் பண்ணுவது வயிறு. பொதுவாக வயிற்றை யாரும் நினைப்பதில்லை . மற்று வயிற்று வலி வந்துவிட்டால் வயிற்றைப்பற்றிய எண்'ணமே சித்தமிசை குடிகொள்கிறது. பெரிய பெரிய எண்ணங்களை எண்ணுதற்குத் தலை உதவுகிறது. அத்தகைய தலையை ஆரோக்கியமாக இருக்கிற மனிதன் நினைப்பதில்லை. ஆனால் தலைவலி வந்தால் எண்ணுகிற எண்ணங்கள் எல்லாம் தலையைப்பற்றியவைகளாம்.
உடலைப்பற்றிய உண்மையும் இதுவே. உடலை நினையாதிருப்பது நோயற்ற நிலை. நிழல் உடலைச் சார்ந்திருப்பது போன்று உடல் நோயற்ற மனிதனைச் சார்ந்திருக்கிறது. உடலை யோகபூமியாக ஆத்ம சாதகன் உணர்கிறான். உடலைப் போக பூமியாக உலகத்தவன் உணர்கிறான். உடலை ரோக பூமியாக நோயாளி உணர்கிறான். உடலை யாண்டும் மறந்திருப்பது வாழ்வின் குறிக்கோள். நோயற்றிருக்கும்பொழுதே அதை மறந்திருக்க மனிதனுக்கு முடியும்
இவ்வுலகம் இன்பம் துன்பம் ஆகிய இரண்டும் நிறைந்தது. துன்பம் கலவாத இன்பம் வேண்டுமென்று சிலர் விரும்புகின்றனர். ஆனால் அது சாத்தியப்படாது. உலகில் பிறந்துள்ள உயிர்களனைத்தும் துன்பம் என்கிற விலை கொடுத்து இன்பத்தைப் பெறுகின்றன.
துன்பப்படுதற்குக் காரணங்கள் சில உள. அவைகளுள் நோய்வாய்ப்படுவது மிக முக்கியமானது. நோய்கள் பலவற்றைத்
நோய்க்கு இடம் கொடேல் தவிர்க்க மனிதனுக்கு முடியும். தவிர்க்க முடியாத நோய்களின் கொடுமையை மனத்திட்பத்தால் வெல்லலாம். மனத் திட்பத்தை மனிதன் தனக்குத்தானே தேடிக்கொள்ளமுடிமும். மனதில் திண்ணியனாய் இருப்பவனை எந்த நோயும் அசைக்க முடியாது.
கருத்துகள் இல்லை