ocean waves




Breaking News

HELTH AND BEAUTY TIPS AND TO CREATE HEALTHY HUMAN BEINGS PLEASE FOLLOW THE OCEAN WAVES BLOGGER

தலைவலி இயற்கை வைத்தியம்

 தலைவலி, ஒற்றைத் தலைவலி, மைக்ரேன், தலைபாரம் - இயற்கை வைத்தியம் 


 தலைவலி, ஒற்றைத் தலைவலி, மைக்ரேன், தலைபாரம் - இவைகளுக்கு வைத்தியம் சொல்ல முடியாது!!!!!.???


வியப்பாக இருக்கிறதா!!!??  இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள் புரியும்.

ஓஷோவிடம் சென்று ஒருவர் தலைவலிக்கு வைத்தியம் கேட்டிருக்கிறார். ஓஷோ அவரிடம் உங்களுக்கு எந்த வகை தலைவலி என்று திரும்ப கேள்வி கேட்டிருக்கிறார். இவர் தலைவலியில் எத்தனை வகை இருக்கிறது என்று கேட்டிருக்கிறார். அதற்கு ஓஷோ தலைவலியில் ஆயிரம் வகை இருக்கிறது அதில் உங்களுக்கு எந்த வகை என்று கேட்டிருக்கிறார்.

அதாவது நண்பர்களே ஒவ்வொருவரின் தலைவலிக்கும் வேறு வேறு காரணங்கள். அவரவர் தலைவலிக்கு காரணம் கண்டுபிடிக்காமல் தீர்வு சொல்ல முடியாது.

உதாரணமாக உங்கள் வீட்டில் கரண்ட் மீட்டரில் உள்ள பியூஸ் கேரியரில், பியூஸ் போய்விட்டது என்றால் அதற்கு ஒரு காரணத்தை குறிப்பிட்டு சொல்ல முடியுமா?

கீழ்க்கண்ட காரணங்களில் ஏதாவது ஒன்று இருக்கலாம் அல்லவா?

1. மின்விசிறியில் காயிலில் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டிருக்கலாம்.
2. அயன் பாக்ஸில் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டிருக்கலாம்.
3. வீட்டில் எந்த மூலையிலாவது மழை நீரோ குழாய் நீரோ கரண்ட் வயரில் பட்டு ஷார்ட் சர்க்யூட் ஆகி இருக்கலாம்.
4. யாராவது கையை வைத்து இருக்கலாம்.
5. ஏதாவது ஒரு மின் உபகரணம் பழுதடைந்து இருக்கலாம்.
6. மெயின் கரண்ட் அழுத்தம் குறைவாக வந்திருக்கலாம்.
7. மெயின் கரண்ட் விட்டு விட்டு வந்திருக்கலாம்.

இப்படி ஆயிரம் காரணம் சொல்லிக் கொண்டே போகலாம் அல்லவா!?

இதுபோலத்தான் தலைவலியும், அதன் காரணங்களையும் சொல்லிக்கொண்டே போகலாம்.

எனவே ஒரு மனிதனுக்கு தலைவலி வர இங்கே குறிப்பிட்டுள்ள ஏதாவது ஒரு காரணம் இருக்கலாம்.

1. சரியான உணவு சாப்பிடாததால்.
2. சரியான தூக்கமின்மை.
3. கடன் தொல்லையில் மனக்கவலை.
4. வாகனத்தில் வெகுநேர பிரயாணம்.
5. அதிக சத்தத்தை கேட்டல்.
6. கெட்டுப்போன உணவை சாப்பிட்டு இருந்தால்.
7. தண்ணீர் குடிக்காமல் இருந்தால்.
8. கணவருடன் அல்லது மனைவியுடன் மனக்கசப்பு / சண்டை.
9. வியாபாரத்தில் நஷ்டம்/ மனக்கவலை.
10. அளவுக்கு அதிக வெய்யில்/ குளிர்.
11. அலுவலகத்தில் டென்ஷன்.
12. இறப்புச் செய்தியைக் கேட்ட அதிர்ச்சி.
13. செல்போனை, டிவியை, கம்ப்யூட்டரை தொடர்ந்து பார்த்தல்.
14. வேலைச்சுமை.
15. வயிற்றில் பித்தம்.
16. அளவுக்கதிக உணவு விருந்து.
17. பிடிக்காத சாப்பாடு/ இடம்/ வேலை/ மனிதர்களின் சந்திப்பு.
18. உடற்பயிற்சி, யோகா, உடல் உழைப்பு,  இல்லாமல் வாழுதல்.
19. உடற்பயிற்சி, யோகா, உடல் உழைப்பு அதிகமாக செய்தல்.

இப்படி ஆயிரம் ஆயிரம் காரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.

எனவே நண்பர்களே, புரிந்துகொள்ளுங்கள் தலைவலி வந்தால் முதலில் நாம் யோசிக்க வேண்டும். கடந்த 24 /  48 / 96 மணி நேரத்தில் நமது உடம்புக்கு என்ன என்ன துரோகம் செய்தோம், தொல்லை கொடுத்தோம் என்று முதலில் யோசித்து கண்டுபிடிக்க வேண்டும்.

பிறகு அந்த தொல்லைக்கு துரோகத்திற்கு ஈடான மாற்று விஷயங்களைச் செய்தால் மட்டுமே தலைவலி குணமாகும்.

உதாரணமாக, கடந்த நான்கு நாட்களில் ஒழுங்காக சாப்பிடாமல் ஹோட்டலிலேயே சாப்பிட்டு இருந்தால்,  உடனடியாக பிடித்த வீட்டு சாப்பாடு சாப்பிட்டால் தலைவலி குணமாகும்.

உதாரணமாக, கடந்த மூன்று நாட்களாக தண்ணீர் சரியாக குடிக்காவிட்டால், சுத்தமான நல்ல தண்ணீரை ஆசை தீர குடித்தால் தலைவலி குணமாகும்.

உதாரணமாக, கடந்த ஒரு வாரமாக சரியாக தூங்காமல் இருந்தால் உடனடியாக தூங்கினால் சரியாகும்.

உதாரணமாக, கடந்த இரண்டு நாட்களில் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு இருந்தால்,  உடனடியாக பட்டினி இருந்தால் அல்லது விரதமிருந்தால் சரியாகும்.

உதாரணமாக, கடந்த 48 மணி நேரத்தில் அதிக சத்தத்தை கேட்டு இருந்தால், உடனடியாக சத்தம் இல்லாத இடத்தில் சிறிது நேரம் இருந்தால் குணமாகும்.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

எனவே தலைவலி, ஒற்றைத் தலைவலி,  மைக்ரேன்,  தலைபாரம் என்று இனிமேல் உங்களுக்கு வந்தால், நீங்கள் முதலில் யோசியுங்கள், என்ன துரோகம் செய்தோம் என்று கண்டுபிடியுங்கள். அதன்பிறகு ட்ரையல் அண்ட் எரர்  ( Triyal and Error ) பயன்படுத்தி ஒவ்வொன்றாக மாற்றி மாற்றிப் பாருங்கள். ஏதாவது ஒன்றில் குணமாகும்.

ஒவ்வொரு முறை நமக்கு தலைவலி வரும் பொழுதும் அதற்கு வேறு வேறு காரணமும் வேறுவேறு தீரும் இருக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

ஒருவேளை காரணத்தை சரியாக கண்டுபிடிக்க முடியாமல் போனால் கடைசியாக " TPGB"  என்ற முறையை பயன்படுத்தி குணப்படுத்திக் கொள்ளுங்கள்.

" TPGB"  என்றால் என்னவென்றால் "  Take A Pillow Go To Bed "  அதாவது " தலையணை எடு தூங்கு "  என்று அர்த்தம்.

ஆம் நண்பர்களே, தலைவலிக்கு காரணம் தெரியவில்

லை என்றால்,  படுத்து தூங்குங்கள்,  அல்லது உட்கார்ந்து தூங்குங்கள் அல்லது ஓய்வெடுங்கள் சரியாகிவிடும்.

தலைவலிக்கு தைலம் தடவலாமா?

தலைவலிக்கு தைலம் தடவலாம். தைலத்தின் வேலை நமது கவனத்தை வேறு எங்கும் சிதறவிடாமல் தலைப்பகுதியில் உள்ள எரிச்சலை கவனிக்க வைப்பதே. இப்படி தலையை கவனிக்கும் பொழுது நமது உடம்பில் உள்ள ரத்த ஓட்டம், பிராண ஓட்டம், உயிர் சக்தி ஆகியவை தலைப்பகுதிக்கு வந்து நமக்கு சக்தி அளித்து குணப்படுத்துகிறது.

தைலம் ஒரு எரிச்சலை ஏற்படுத்தி நம்மை தலையை கவனிக்க வைக்கிறது. எனவே தைலம் தலைவலியை குணப்படுத்துவதில்லை. நமது எண்ணங்களே குணப்படுத்துகிறது அதற்கு தலம் உதவுகிறது.



உணவு, குடிநீர், தூக்கம்,உழைப்பு, மூச்சுக்காற்று, மனம் ஆகிய ஆறு விஷயங்களில் ஏற்படும் குளறுபடிகளே அனைத்து தலைவலிக்கும் காரணம்
இப்படிக்கு .

இந்த ஆறு விஷயத்தை ஒழுங்காக வைத்துக் கொள்பவர்களுக்கு தலைவலி வரவே வராது. வந்தாலும் உடனடியாக சரி செய்யலாம்.



கருத்துகள் இல்லை

1: #blog-pager{clear:both;margin:30px auto;text-align:center; padding: 7px;} 2: .blog-pager {background: none;} 3: .displaypageNum a,.showpage a,.pagecurrent{padding: 5px 10px;margin-right:5px; color: #F4F4F4; background-color:#404042;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);} 4: .displaypageNum a:hover,.showpage a:hover, .pagecurrent{background:#EC8D04;text-decoration:none;color: #fff;} 5: #blog-pager .showpage, #blog-pager, .pagecurrent{font-weight:bold;color: #000;} 6: .showpageOf{display:none!important} 7: #blog-pager .pages{border:none;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);}