தலைக்கு எந்த எண்ணெய் பயன்படுத்துவது
தலைக்கு எந்த எண்ணெய் பயன்படுத்துவது
தலைக்கு எந்த எண்ணெய் பயன்படுத்துவது
தலைக்கு பொதுவாக தேங்காய், எண்ணெய் நல்ல, எண்ணெய் விளக்கு எண்ணெய் என்று மூன்று எண்ணெய்களை பயன்படுத்துவார்கள்.
உடல் உழைப்பு மிகவும் அதிகமாக இருப்பவர்களுக்கு உடலில் உஷ்ணம் அதிகமாகும் அதைக் குறைப்பதற்கு விளக்கு எண்ணெய் சிறந்தது.
சுமாராக வேலை செய்பவர்களுக்கு உடலின் உஷ்ணம் சுமாராக இருக்கும் இவர்களுக்கு நல்ல எண்ணெய் சிறந்தது.
குறைந்த உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு உடலின் உள்உறுப்புகள் சூடு குறைவாக இருக்கும் இவர்களுக்கு தேங்காய் எண்ணெய் சிறந்தது.
தேங்காய் எண்ணெய் உஷ்ணம். நல்லெண்ணெய் குளிர்ச்சி. விளக்கெண்ணெய் மிகவும் குளிர்ச்சி. இந்த தத்துவத்தை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.
எனவே 21 நாள்கள் இந்த மூன்று எண்ணெய்களில் ஏதாவது ஒரு எண்ணையை பயன்படுத்தி உங்களை சோதனை செய்யுங்கள். எந்த எண்ணெய் தலையில் தடவும்போது உங்களுக்கு ஆரோக்கியமாக, நிம்மதியாக, சந்தோஷமாக, இருக்கிறதோ அந்த எண்ணையை நீங்கள் பயன்படுத்துங்கள்.
ஒவ்வொருவரின் உடல்வாகு வேறு, ஒவ்வொருவரின் நாடிகள் வேறு, ஒவ்வொருவரின் வெப்பநிலை வேறு, ஒவ்வொருவரின் மன நிலை வேறு, ஒவ்வொருவரின் நாட்டின் தட்பவெப்பம் வேறு எனவே இதற்கு தகுந்தாற்போல் நாம் என்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக நீங்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் பொழுது நல்ல எண்ணையை தடவி கிறீர்கள். திடீரென சவுதி அரேபியாவிற்கு சென்று விட்டால் அங்கு உஷ்ணம் அதிகமாக இருக்கும் பொழுது அங்கு நீங்கள் விளக்கெண்ணையை பயன்படுத்தலாம்.
அடுத்தபடியாக திடீரென நீங்கள் காஷ்மீர் சென்று விட்டீர்கள். அங்கு குளிர் அதிகமாக இருக்கிறது அப்பொழுது நீங்கள் நல்லெண்ணையை பயன்படுத்தலாம்.
நண்பர்களே ஒரு கேள்வி கேட்கும் பொழுது நான் ஏன் விரிவாக பேசுகிறேன் என்றால் நீங்கள் கேள்விக்கு பதிலை எதிர்பார்க்கிறீர்கள். நான் உங்களுக்கு புரிய வைத்துக் கொண்டிருக்கிறேன்.
எப்பொழுது பல விஷயங்கள் நமக்கு புரிகிறதோ. அப்பொழுது கேள்விகளுக்கு நாமே சொந்தமாக பதில் கொடுக்க முடியும்.
எனவே இனிமேல் கேள்விகளுக்கு பதில் தெரிந்துகொள்ள நினைக்காமல் விஷயங்களை புரிந்து கொள்ள நினைத்தால் பல கேள்விகளுக்கு நாம் பதில் சொல்லலாம்.
கேரளாவில் காலையில் தலையில் எண்ணை தேய்த்துவிட்டு ,;பிறகு குளித்து விட்டு, அதன்பிறகு எண்ணை தடவ மாட்டார்கள்.
எது சரி? எது தவறு? என்பது முக்கியமல்ல எது உங்களுக்கு உகந்தது என்பதே முக்கியம்.
கருத்துகள் இல்லை