புழுவெட்டு இயற்கை வைத்தியம்
புழுவெட்டு அல்லது பூச்சி பெட்டுக்கு இயற்கை வைத்தியம்
1.: மாங்கொட்டை பருப்பை தண்ணீர்விட்டு அம்மியில் அல்லது மிக்ஸியில் அரைத்து காலை தலையில் தேய்த்து , கால் மணி நேரம் காத்திருந்து, அதன் பிறகு குளித்து வந்தால் புழுவெட்டு பூச்சிவெட்டு சரியாகும்.
2 : நிலை அவரை பொடியையும் கசகசாவையும் சேர்த்து அரைத்து , பாலில் கலந்து , புழுவெட்டு உள்ள இடங்களில் தேய்த்து , கால் மணி நேரம் காத்திருந்து பிறகு குளித்து வந்தால் சரியாகும்.
3. ஆறு வேப்பம் விதையையும் , இரண்டு வெண் மிளகையும், கொஞ்சம் கடுக்காய் பொடியையும், கொஞ்சம் காய்ந்த நெல்லிக்காய் பொடியையும் கலந்து தண்ணீர் விட்டு அரைத்து அதை புழுவெட்டு உள்ள இடங்களில் தடவி , கால் மணி நேரம் காத்திருந்து பிறகு குளித்தால் சரியாகும்.
4. விளக்கு எண்ணெயில் நிலை அவரை பொடியை அரைமணி நேரம் ஊறவைத்து, அதை எடுத்து புழுவெட்டுள்ள இடங்களில் தடவி கால் மணி நேரம் காத்திருந்து அதன் பிறகு குளித்தால் சரியாகும்.
கருத்துகள் இல்லை