நல்ல பொருளில் வண்டு/பூச்சி வராமல் இருக்க
நல்ல பொருளில் வண்டு/பூச்சி வராமல் இருக்க ஐடியா
நல்ல பொருளில் வண்டு/பூச்சி வராமல் இருக்கஆர்கானிக் எனப்படும் இயற்கையான நல்ல பொருள்களில் வண்டு, பூச்சி, புழு வருவது இயல்பு மற்றும் சகஜம்.
இருந்தாலும் நல்ல பொருளாகவும் இருக்க வேண்டும், அதேசமயம் வண்டு, புழு, பூச்சி வரக்கூடாது என்றால் அதற்கும் சில ஐடியாக்கள் இருக்கிறது.
குளியல்பொடி, சத்துமாவு போன்ற இயற்கையான, பாரம்பரிய, ஆர்கானிக் பொருட்கள் தயாரிக்க வேண்டுமென்றால், அதற்கான மூலப் பொருட்களை விவசாயி இடமிருந்து நேரடியாக வாங்கலாம் அல்லது கடைக்கு வந்த உடனே புதிய பொருட்களாக வாங்க வேண்டும்.
விவசாயிடம் இருந்து கடைக்கு வந்து பல மாதங்கள் அல்லது பல வருடத்திற்கு பிறகு வாங்கினால் அதில் புழு வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.
பொதுவாக இயற்கை பொருள்கள் தயாரிப்பதற்கான மூலப் பொருள்கள் தை, மாசி, பங்குனி போன்ற மாதங்களில் வாங்கினால் புதுப் பொருளாகவும் நல்ல பொருளாகவும் இருக்கும்.
எனவே தை,மாசி, பங்குனி மாதத்தில் பொருட்களை புதிதாக வாங்கி, உடனடியாக பதப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.
கெட்ட பொருள்கள் தயாரிப்பவர்கள் பொருளை பதப்படுத்துவதற்கு, கெட்டுப்போகாமல் இருப்பதற்கும் ,புழு வராமல் இருப்பதற்கு
விஷத்தன்மை உடைய கெமிக்கலை பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் இயற்கைப் பொருள் தயாரிக்கும் நமக்கு சூரியனே பதப்படுத்தும் முக்கியமான நண்பன்.
இயற்கை பொருள்களை வெயிலில் வைத்து காய வைத்து உலர்த்தி பாதுகாத்து வந்தால் புழு, பூச்சி, வண்டு வராது.
இயற்கைப் பொருள்களை சேகரித்து வைக்கும் பொழுது எவர்சில்வர் டப்பாவில் அல்லது கண்ணாடி டப்பாவில் சேகரிக்க வேண்டும்.
சேகரிக்கும் டப்பாவை சுத்தமாக ஒரு துளி தண்ணீர் இல்லாமல் ஈரமில்லாமல் நன்றாக உலர்த்தி, துடைத்து விட்டு அதன் பிறகு பொருள்களை அதில் சேமிக்க வேண்டும்.
டப்பாவின் அடியில் 5 கிராம்பு அல்லது வசம்பு போட்டு விட்டு அதன் பிறகு இயற்கை பொருள்களை போட்டு அதன் மேற்பகுதியில் மீண்டும் 5 கிராம்பு அல்லது வசம்பு வைத்து, காற்று புகாமல் மூடி வைக்கவும்.
மூடியையும் சுத்தமாக தண்ணீர் இல்லாமல் துடைக்க வேண்டும்.
இயற்கை பொருள்களை மாதம் ஒருமுறை டப்பாவில் இருந்து எடுத்து வெய்யிலில் உலர்த்தி வைக்க வேண்டும்.
இப்படி பாதுகாத்தால் நல்ல பொருளாகிய இயற்கை பொருள்களை பல காலம் நாம் புழு, பூச்சி, வண்டு வராமல் சேகரிக்க முடியும்.
கருத்துகள் இல்லை