நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த
நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தநோய்
எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த துளசி மஞ்சள் சார வடிநீர்.:
தேவையான பொருட்கள்.:
துளசி இலைகள் – ஒரு கைப்பிடி அளவு,
சுத்தமான விரளி மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
தண்ணீர் – 200 மில்லி,
சீரகம், மல்லி (தனியா) – தலா கால் டீஸ்பூன்,
இந்துப்பு – ஒரு சிட்டிகை.
செய்முறை :
200 மில்லி தண்ணீரைச்
சூடாக்கி அதில் துளசி இலைகள், சீரகம், மல்லி, விரளி மஞ்சள்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். 100 மில்லியாக வந்ததும் வடிகட்டி, இந்துப்பு கலந்து பருகலாம்.
பயன்கள்.:
துளசி மற்றும் மஞ்சளில் ஏராளமான மருத்துவக் குணங்கள் உள்ளன.
துளசி மஞ்சள் சார வடிநீர் நுரையீரல் நோய்த்தொற்றைச் சரி செய்து, ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, இதய துடிப்புக்கு மிகவும் துணைபுரியும்.
நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும்.
மூளை செல்கள் சிதைவடையாமல் காத்து மன அமைதிக்கு வழிவகுக்கும். செரிமான மண்டலத்தைச் சீர்செய்யும்.
குறிப்பு.:
இதில் இந்துப்பைத் தவிர்த்து, பால் மற்றும் பனங்கற்கண்டு சேர்த்தும் வளரும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்
கருத்துகள் இல்லை