அல்சர் தீர்வு
அல்சர் தீர்வு
அல்சர் தீர்வு அல்சர் இருப்பவர்களுக்கு பத்தில் எட்டு பேருக்கு மனதில் பயம் வருகிறது , உடல் நடுங்குகிறது .இதற்கு காரணம் என்ன? தீர்வு என்ன?
அல்சர் இருப்பவர்களுக்கு பயம் வரும் , உடல் நடுக்கம் வரும்.
இதற்கு காரணம் அல்சர் அல்ல உடலில் சக்தி குறைவதே.
நாம் சாப்பிடும் சாப்பாடு தான் சத்துப் பொருளாக மாறி எல்லா செல்களுக்கும் போகிறது .
எப்பொழுது அல்சர் இருக்கிறதோ அப்போது சாப்பாடு ஒழுங்காக ஜீரணம் ஆகாது .எனவே செல்களுக்குத் தேவையான சத்து கிடைக்காது. எனவே உடல் நடுங்குகிறது மேலும் எப்போது நாம் வீக்காக இருக்கிறோமோ அப்போது பயமாக உணர்வோம். எப்பொழுது சக்தி அதிகமாக இருக்கிறதோ அப்போது தைரியம் வரும் .
தைரியம் என்பது சக்தி மிகுதி . பயம் என்பது சக்தி குறைவு .
அல்சரினால் மட்டும்தான் பயமும் நடுக்கமும் வரும் என்று அர்த்தமில்லை. உடலில் எப்பொழுது சக்தி குறைகிறதோ அப்போது இயற்கையாகவே பயமும் நடுக்கமும் வரும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
எனவே பயத்துக்கும் நடுக்கத்திற்கு தனியாக சிகிச்சை செய்ய அவசியமில்லை. உடலில் சக்தி அதிகம் செய்வதற்கு பயிற்சி செய்தால் கண்டிப்பாக நடுக்கத்தையும் பயத்தையும் வராமல் பார்த்துக்கொள்ளலாம்
அல்சருக்கு என்று தனியாக சிகிச்சை கிடையாது .
உடலில் சக்தி அதிகமாகி அதன் மூலமாக அல்சர் குணமாகும். அல்சர் குணமான பிறகு தான் பயமும் நடுக்கமும் நிற்கும்.
.
உதாரணமாக , காலில் ஆணி வந்தால் மஞ்சள் தூளையும், மருதாணி தூளையும் கலந்து வைத்தால் 30 நாளில் சரியாகிவிடும் .இதற்கு ஐந்து நாள் வகுப்புக்கு வர வேண்டிய அவசியமில்லை.சில வியாதிகளுக்கு வீட்டு வைத்தியம் செய்து சரி செய்து சரி செய்து கொள்ளலாம்.
ஆனால் சில வியாதிகள் உடலையும் மனதையும் முழுவதையும் சரி செய்தால் மட்டுமே சரியாகும், .
தினமும் காலை பழைய சாதம் சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும்.
பழைய சாதம் செய்வது எப்படி??
இரவு , பாரம்பரிய அரிசியை பிரஷர் குக்கரில் சமைத்து, நன்றாக ஆறும் வரை காத்திருந்து, அதன் பிறகு அந்த சாதத்தில் 5 முதல் 10 மடங்கு தண்ணீர் ஊற்றி, இரவு முழுவதும் மூடி வைத்து காலையில் அந்த சாதத்தையும் தண்ணீரையும் நன்றாக கையில் பிசைந்து , சின்ன வெங்காயத்தை பொடிப்பொடியாக கட் செய்து அதில் கலந்து , கொஞ்சமாக மோர் அல்லது தயிர் கலந்த, தேவையான அளவு உப்பு கலந்நது காலை உணவாக இந்த பழைய சாதத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும்,
விட்டமின் பி12 கிடைக்கும் ,உடல் உஷ்ணம் இருப்பவர்களுக்கு உடல் உஷ்ணம் குறையும், அனைத்து வியாதிகளும் குணமாகும்.
பழைய சாதம் தயாரிப்பதற்கு வடித்த சாதத்தை பயன்படுத்தக்கூடாது ,எலக்ட்ரிக்கல் குக்கரை பயன்படுத்தக்கூடாது .
பிரஷர் குக்கரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
பிரஷர் குக்கர் இல்லாதவங்க ஒரு பாத்திரத்துல அரிசி வெச்சு தண்ணி அளவா வைத்து வடிக்காமல் சமையல் செஞ்சு அந்த சாப்பாட்டை பயன்படுத்தலாம்.
பிரஷர் குக்கர் விசில் நாமாக எடுத்து விடக்கூடாது, அது தானாக அடங்கும் வரை காத்திருக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை