ocean waves




Breaking News

HELTH AND BEAUTY TIPS AND TO CREATE HEALTHY HUMAN BEINGS PLEASE FOLLOW THE OCEAN WAVES BLOGGER

தோல் நோய் சரியாக

தோல் நோய் சரியாக 

நோய் சரியாக தோல் நோய் சரியாக உடல் வெப்பம் தணிய மருதாணி இலையை அரைத்து கை  விரல்கள்  உள்ளங்கையில் வைத்து வர உடல்வெப்பம் தணியும்.

 மருதாணியால் சளியா 

சிலருக்கு மருதாணி இட்டுக் கொண்டால் சளி பிடித்துவிடும். இதற்கு மருதாணி இலைகளை அரைக்கும் போது கூடவே 7 அல்லது 8 நொச்சி இலைகளை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளலாம். இதனால் சளி பிடிக்காது

மருதாணி இட்டுக் கொள்வதால் நகங்களுக்கு எந்த நோயும் வராமல் பாதுகாக்கலாம் 

ஆனால் இந்த பயன்கள் எல்லாம் தற்போது கடைகளில் கிடைக்கும் மருதாணி கோன் விலை கிடைக்க வாய்ப்பே இல்லை. என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கருந்தேமல் சிலருக்கு கழுத்திலும் முகத்திலும் கருந்தேமல் காணப்படும். இதற்கு நல்ல கை மருத்துவம் உள்ளது. இலையுடன் சிறிது குளியல் சோப்பை சேர்த்து அரைத்து பூசி வர விரைவில் கருந்தேமல் மறையும்.

மருதாணி இலை கிருமி நாசினி 

கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது நகசுத்தி வராமல் தடுக்கும் புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து கை கால் விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி அழகூட்டுவார்கள் .தோல் நோய் தோல் பற்றிய அரிப்பு படை ஆகிய நோய்களுக்கு இந்த இலையை அரிசிச் சோற்றுடன் இரவு ஊறப்  போட்டு காலை வெறும் வயிற்றில் நீராகாரமாகச் சாப்பிட வேண்டும். உப்பில்லாத பத்தியம் இருத்தல் வேண்டும் 10 அல்லது 15 நாள் சாப்பிட வேண்டும். புண்கள் ஆறாத வாய்ப் புண், அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம். அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசலாம் 3, 5 நாட்களில் குணமாகும் கட்டிகளுக்கும் அரைத்துப்பற்றிடலாம்.

 முடி வளர 

இதன் தைலம் முடி வளர்க்கும். இள நரையை அகற்றும் இரும்பு வாணலியில் தேங்காய் எண்ணெய் 500 மில்லி விட்டு இதன் இலை 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும் இலையின் சாறு எண்ணெயில் சேர்த்து சிவப்பாக மாறிவிடும். நறுமணத்திறுகாக 10 கிராம் சந்தனத் தூள் போடலாம், அரைத்து போட்டு பாக்கலாம். இந்த தைலத்தை நாளும் தலைக்குத் தேய்க்க முடி வளரும், நரைமாறும்,

தூக்கமின்மை

 தூக்கமின்மைக்கு தூக்க மாத்திரை சாப்பிடுதல் கூடாது. அது நரம்புத் தளர்ச்சியை உண்டாக்கும். மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் வரும் பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும். ஒருசிலருக்கு இம்மணம் தலைவலியை உண்டாக்கும்.
கால் ஆணி
உள்ளங்காலில் ஆணி ஏற்பட்டிருந்தால், மருதாணி இலையுடன் சிறிது வசம்பு, மஞ்சள், கற்பூரம் சேர்த்து அரைத்து ஆணி உள்ள இடத்தில் தொடர்ந்து கட்டி வர ஒரு வாரத்தில் குணமாகும்.

படைகள்

 கரும்படை வண்ணான் படை கால் இடுக்கிலும் இடுப்பிலும் கழுத்து கை இடுக்கிலும் வரும் இதற்கு ஒரு பிடி மருதாணி இலையுடன் 5 கிராம் 501 பார் கதர் சோப்புவைத்து அரைத்துக் களிம்பு போல தடவி வந்தால் கரும்படை யாவும் சுகமடையும். பத்து பதினைந்து நாள் பூச வேண்டும் வண்டு கடிக்கும் சொறி சிரங்கிற்கும் இதனைப் பூச்சு மருந்தாகப் பயன்படுத்தலாம்.

இளநரையை போக்கும்


 மருதாணி இன்றைய இளைஞர்களுக்கு உள்ள ஒருசில பிரச்னைகளில் இளநரையும் ஒன்று இதற்கு மருதாணியைக் கொண்டு இயற்கை முறையில் எளிதாகத் தீர்வு காணலாம். மருதாணி இலை அரைத்து அதன் விழுதை ஒரு கப்பில் எடுத்து வைத்துக் கொள்ளவும். அத்துடன் எலுமிச்சம்பழச்சாறு 2 ஸ்பூன், தேங்காய் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெல்லி முள்ளி பொடி ஆகியவற்றை ஒரு கப் தயிருடன் கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை இரவு முழுவதும் ஒரு பாத்திரத்தில் மூடி வைத்து விடவும். பின்னர் இதனை காலையில் எழுந்து தலை முடியில் தேய்த்துக் கொள்ள வேண்டும். சுமார் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரை காய வைத்து விட வேண்டும். பின்னர் சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால் தலையில் உள்ள இளநரை மறைந்து விடும்.

கருத்துகள் இல்லை

1: #blog-pager{clear:both;margin:30px auto;text-align:center; padding: 7px;} 2: .blog-pager {background: none;} 3: .displaypageNum a,.showpage a,.pagecurrent{padding: 5px 10px;margin-right:5px; color: #F4F4F4; background-color:#404042;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);} 4: .displaypageNum a:hover,.showpage a:hover, .pagecurrent{background:#EC8D04;text-decoration:none;color: #fff;} 5: #blog-pager .showpage, #blog-pager, .pagecurrent{font-weight:bold;color: #000;} 6: .showpageOf{display:none!important} 7: #blog-pager .pages{border:none;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);}